புனித செசிலி

இப்புனிதையின் பெயராலே உரோமையில் 5ஆவது நூற்றாண்டில் ஒரு பேராலயம் எழுப்பப்பட்டது. “புனித செசிலியாவின் திருப்பாடுகள்” என்னும் நூலின் காரணமாக இவரது பேரும் புகழும் நாற்றிசையிலும் விரைவில் பரவத் தொடங்கியது 1500ஆம் ஆண்டு இவரது கல்லறை திறக்கப்பட்டது. அஃது அழியாத நிலையில் இருந்த மாத்திர மின்றி, அப்போதுதான் உயிர் பிரிந்த உடல் போலவும் இருந்தது.
இந்த மகிமையான கன்னிப் பெண் எப்பொழுதும் கிறிஸ்துவின் நற்செய்தி நூலை எங்கும் எடுத்துச் செல்வாள். எப்போதும் கைகளை விரித்து ஜெபம் செய்வாள். உடை இவளது உடலை மூடியிருக்கும். ஆனால் உடைக்குக் கீழே முள் ஒட்டியானத்தால் தன் புலன்களை அடக்கி, இறைவனிடம் கண்ணீர் விட்டு மன்றாடுவாள்.
வாழ்நாளெல்லாம் கன்னிமையில் வாழ்வதற்கு வார்த்தைப்பாடு கொடுத் திருந்தாள். இவளை விரும்பிய வலேரியன் என்ற வாலிபன் இவளை மணந்து கொண்டார். ஆனால் கன்னி செசிலியா தனது ஒரே மணவாளனாம் ஆண்டவருக்கு பண் இசைத்தாள். “வலேரியன்! நான் ஒர் இரகசியம் சொல்கிறேன் கேளுங்கள். கடவுளின் தூதர் என்னை அன்பு செய்கிறார். அவரே எனது உடலைத் துணிச்சலுடன் காத்துக் கொள்கிறார்” என்றாள். “அத்தகைய தூதரை நான் காண முடியுமானால் நானும் உன் வேதத்தில் சேர்ந்து கொள்கிறேன்” என்று வலேரியன் கூற “ஞானஸ் நானம் இன்றி அவரைப் பார்க்க வொண்ணாது” என்றாள். வலேரியன் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள உடன்பட்டார்.
அந்நாட்களில் திருத்தந்தை உர்பன்னிடம் வலேரியனைச் செசிலி யம்மாள் அனுப்பினார். பின்னர் திருத்தந்தை வலேரியனுக்கு ஞானஸ்நானம் அளித்தார்.  செசிலி தனது அறையில் ஜெபத்தில் அழ்ந்திருப் பதையும் அருகில் தேவ தூதர் நிற்பதையும் கண்டு திகிலுற்றார். பிறகு, அவருடைய தம்பி திபூர்சியுசும் மனந்திரும்பினர். அல்மாக்கியஸ் என்ற ஆளுநர் இதைக் கேள்வியுற்றதும் இவர்களைச் சிறைப் படுத்தக் கட்டளையிட்டான். வலேரியனையும் திபூர்சியுஸையும் கொல்லச் சொன்னான்.
பின்னர் செசிலி ஆளுநரிடம் அழைத்து வரப்பட்டபோது, “இயேசுவின் புனித நாமத்தை அறிக்கையிடுவேம். அவரை மறுதளிக்கமாட்டோம்” என்றாள். அவள் சித்திரவதை செய்யப்பட்டாள். உயிர் பிரியவில்லை. கொலையாளி மும்முறை இவள் கழுத்தை வெட்டி இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தான். இக்கொடூரமான நிலையிலும் மூன்று நாட்கள் உயிர் ஊசலாடியது. தனது இல்லம் எப்போதும் ஓர் ஆலயமாக அமையட்டும் என்று தனது இறுதி விருப்பத்தைத் தெரிவித்தாள். இதுவும் நிறைவேறியது. தனது தூய ஆன்மாவை இறைவனிடம் கையளித்தாள். 

அனனை மரியா

பூலோகத்தில் பெற்ற தாயைப் போற்றாத ஜீவன் இல்லை.  தாயை மதிப்பதாலேயே தாய் நாடு என்றும் தாய் வீடு என்றும் சொல்கிறோம்.  தாயிற்சிறந்த தொரு கோயில் இல்லை என்றும் அன்னை ஓர் ஆலயம் என்றும் பெருமை பாராட்டித் தாயைத் பூலோகத்தில் பெற்ற தாயைப் போற்றாத ஜீவன் இல்லை.  தாயை மதிப்பதாலேயே தாய் நாடு என்றும் தாய் வீடு என்றும் சொல்கிறோம்.  தாயிற்சிறந்ததொரு கோயில் இல்லை என்றும் அன்னை ஓர் ஆலயம் என்றும் பெருமை பாராட்டித் தாயைத்தெய்வமாய் மதிக்கிறோம்.  இந்த தாய்களுக்கெல்லாம் தாயாக விளங்குபவர் அன்னை மரியாள்.  மண்ணகத் தாய் இம்மண்ணகத்தில் மட்டும்தான் தாய்.  ஆனால், தாய் மரியாளோ மண்ணகத்திற்கும் விண்ணகத்திற்கும் தாய்.  அவர் என்றும் வாழும் தாய்!
அன்னை மரியாள் இறைவன் தேர்ந்து கொண்ட ஆலயம்.  இறை இயேசு உறைந்த ஆலயம்.  மாசுமருவற்ற பரிசுத்த ஆலயம்.  “இதோ ஆண்டவரின் அடிமை” என்று தன்னைத்தாழ்த்தி“பேருடையாள்” என உலகம் போற்றுமே என ஆண்டவர்க்குப் புகழ்க் கீதம் பாடியவர்.  “அருள்நிறை பெற்றவர்” எனப் பாராட்டப்பெற்றவர்.  “ஒரு வாள் ஊடுருவும்” என்று முன்னுரைத்து வியாகுலங்கள் பல தாங்கிய வியாகுலத் தாய்.  தம் இறை மகனாம் இயேசுவின் வாழ்க்கையை ஜெபமாலையாக்கி தியானிக்கச் செய்த ஜெபமாலை மாதா.  பாவச் சேற்றில் விழும் மாந்தர் பரமனிடம் சென்று யாசிக்கப் பயப்படும்போது வலிமையுள்ள மிகச் சிறந்த பரிந்துரையாளர்தான் நம் தாய் மரி.
“உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்” என்று ஆண்டவரால் முன் குறிக்கப்பட்டவர்.  சிலுவை அடியில் நின்ற புனித அருளப்பரிடம் “இதோ உன் தாய்!” என்று இறை இயேசுவால் அடையாளம் காட்டப்பட்டவர்.  பிற சபை கிறித்தவ சகோதரர்கள் திருவிவிலியத்தை வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொண்டு அன்னையை மறுதலித்துக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.  ஆண்டவர் இயேசு “தன் பெற்றோரைவிட ஏன் தன் உயிரைவிட மேலாகத் தன்னைக் கருதுபவன்தான் தன் சீடனாக இருக்க முடியும்” என்று அர்ப்பணத்தின் மேன்மையை உணர்த்துவதால் அன்னை மரியாளை ஒதுக்கிவிட்டதாகச் சொல்ல முடியாது.  இறைவார்த்தைக்கு அதிகமுக்கியத்துவம் தந்ததால் தன் தாயைத் தள்ளிவிட வில்லை.  நம்மையே “சகோதரர்”, “நண்பர்” என்று சொல்லும் போது, அவருடைய சகோதர, சகோதரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் அன்னை மரியாளின் பிள்ளைகள் அல்ல.
மேலும், அப்பாவை வணங்குகின்றவர்கள்; அம்மாவை வணங்குகின்ற வர்கள்; அம்மை அப்பனை வணங்குகின்றவர்கள் என்ற பாகுபாடு நாமாக ஏற்படுத்திக் கொண்டது.  “வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது.  பெண் ஒருவர் காணப்பட்டார்.  அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்.  நிலா அவருடைய காலடியில் இருந்தது.  அவர் பன்னிரு விண்மீன்களைத் தலை மீது சூடி இருந்தார்” திவெ 12:1.  இங்கே கதிரவன் இறைவனையும், நிலா அலகையையும், பன்னிரு விண்மீன்கள் பன்னிரண்டு கோத்திரங்களையும் குறிக்கிறது.  உலகெங்கும் பயன்படும் ஆங்கில நாட்காட்டி சூரியனை மையமாக வைத்தும் பிற நாட்காட்டிகள் சந்திரனை மையமாக வைத்தும் தயாரிக்கப்படுகின்றன.  ஆய்ந்து நோக்கினால் பல உண்மைகள் புரியும்.
இன்று பெண் விடுதலை தேடும் பெண் சமூகம் அன்னை மரியாளைப் போன்று தாழ்ச்சியான உள்ளத்தோடு அர்ப்பண உணர்வோடு தூய ஆவியால் நிரப்பப்பட்டவர்களாய் அலகையை மிதித்து நடமாடும் ஆலயங்களாக மாற வேண்டும்.  அன்னை மரியாளைப் போற்றும் ஆண் சமூகம் உண்மையிலேயே பெண் சமூகத்தை மதிக்க வேண்டும்.  அப்பொழுது பெண்ணடிமைத் தனம் நீங்கி ஆணும் பெண்ணும் சமநீதியோடு சமூகக் காவலர்களாய் வலம்வர முடியும்.  ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை செலுத்தி அன்னை மரியாளை வணங்குவோம்.  தூய ஆவியால் நிரப்பப்பட ஜெபிப்போம்.  நிறை உண்மையை நோக்கிப் பயணம் செய்வோம்.  தய்வமாய் மதிக்கிறோம்.  இந்த தாய்களுக்கெல்லாம் தாயாக விளங்கு பவர் அன்னை மரியாள்.  மண்ணகத்தாய் இம்மண்ணகத்தில் மட்டும்தான் தாய்.  ஆனால், தாய் மரியாளோ மண்ணகத்திற்கும் விண்ணகத்திற்கும் தாய்.  அவர் என்றும் வாழும் தாய்!
அன்னை மரியாள் இறைவன் தேர்ந்து கொண்ட ஆலயம்.  இறை இயேசு உறைந்த ஆலயம்.  மாசுமருவற்ற பரிசுத்த ஆலயம்.  “இதோ ஆண்டவரின் அடிமை” என்று தன்னைத் தாழ்த்தி “பேருடையாள்” என உலகம் போற்றுமே என ஆண்டவர்க்குப் புகழ்க் கீதம் பாடியவர்.  “அருள் நிறை பெற்றவர்” எனப் பாராட்டப் பெற்றவர்.  “ஒரு வாள் ஊடுருவும்” என்று முன்னுரைத்து வியாகுலங்கள் பல தாங்கிய வியாகுலத் தாய்.  தம் இறை மகனாம் இயேசுவின் வாழ்க்கையை ஜெபமாலையாக்கி தியானிக்கச் செய்த ஜெபமாலை மாதா.  பாவச்சேற்றில் விழும் மாந்தர் பரமனிடம் சென்று யாசிக்கப் பயப்படும்போது வலிமையுள்ள மிகச் சிறந்த பரிந்துரையாளர்தான் நம் தாய் மரி.
“உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்” என்று ஆண்டவரால் முன் குறிக்கப்பட்டவர்.  சிலுவை அடியில் நின்ற புனித அருளப்பரிடம் “இதோ உன் தாய்!” என்று இறை இயேசுவால் அடையாளம் காட்டப்பட்டவர்.  பிற சபை கிறித்தவ சகோதரர்கள் திருவிவிலியத்தை வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொண்டு அன்னையை மறுதலித்துக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.  ஆண்டவர் இயேசு “தன் பெற்றோரைவிட ஏன் தன் உயிரைவிட மேலாகத் தன்னைக் கருதுபவன்தான் தன் சீடனாக இருக்க முடியும்” என்று அர்ப்பணத்தின் மேன்மையை உணர்த்துவதால் அன்னை மரியாளை ஒதுக்கிவிட்டதாகச் சொல்ல முடியாது.  “இறைவார்த்தை”க்கு அதி முக்கியத்துவம் தந்ததால் தன் தாயைத் தள்ளிவிட வில்லை.  நம்மையே “சகோதரர்”, “நண்பர்” என்று சொல்லும் போது, அவருடைய சகோதர, சகோதரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் அன்னை மரியாளின் பிள்ளைகள் அல்ல.
மேலும், அப்பாவை வணங்குகின்றவர்கள்; அம்மாவை வணங்குகின்ற வர்கள்; அம்மை அப்பனை வணங்குகின்றவர்கள் என்ற பாகுபாடு நாமாக ஏற்படுத்திக் கொண்டது.  “வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது.  பெண் ஒருவர் காணப்பட்டார்.  அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்.  நிலா அவருடைய காலடியில் இருந்தது.  அவர் பன்னிரு விண்மீன்களைத் தலை மீது சூடி இருந்தார்” திவெ 12:1.  இங்கே கதிரவன் இறைவனையும், நிலா அலகை யையும், பன்னிரு விண்மீன்கள் பன்னிரண்டு கோத்திரங்களையும் குறிக்கிறது.  உலகெங்கும் பயன்படும் ஆங்கில நாட்காட்டி சூரியனை மையமாக வைத்தும் பிற நாட்காட்டிகள் சந்திரனை மையமாக வைத்தும் தயாரிக்கப்படுகின்றன.  ஆய்ந்து நோக்கினால் பல உண்மைகள் புரியும்.
இன்று பெண் விடுதலை தேடும் பெண் சமூகம் அன்னை மரியாளைப் போன்று தாழ்ச்சியான உள்ளத்தோடு அர்ப்பண உணர்வோடு தூய ஆவியால் நிரப்பப்பட்டவர்களாய் அலகையை மிதித்து நடமாடும் ஆலயங்களாக மாற வேண்டும்.  அன்னை மரியாளைப் போற்றும் ஆண் சமூகம் உண்மையிலேயே பெண் சமூகத்தை மதிக்க வேண்டும்.  அப்பொழுது பெண்ணடிமைத் தனம் நீங்கி ஆணும் பெண்ணும் சம நீதியோடு சமூகக் காவலர் களாய் வலம்வர முடியும்.  ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை செலுத்தி அன்னை மரியாளை வணங்குவோம்.  தூய ஆவியால் நிரப்பப்பட ஜெபிப்போம்.  நிறை உண்மையை நோக்கிப் பயணம் செய்வோம்.
ச. செல்வராசு
விழுப்புரம்

பீடச்சிறுவர்கள்

  1. ஆண்டவரின் பணிக்கென அழைக்கப்பட்ட சின்னஞ்சிறு அப்போஸ்தலர்கள் இவர்கள்.  நினைவு தெரியும் வயதில் ஆண்டவனின் ஊழியம் செய்ய அழைக்கப்பட்ட சீடர்கள்.
  2. அங்கி அணிந்து கொண்டு ஆண்டவனுக்குப் பணி செய்யும் ஜெப ஊழியக்காரர்கள்.  ஆண்டவன் பணிக்கென அழைக்கப்பட்ட ஆலய தீபங்கள், பீடப் புஷ்பங்கள்.
  3. வளரும் வயதில் குறும்புகளை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டு, பெரிய மனிதர்களாய் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் குட்டி மனிதர்கள்.
  4. பீடச்சிறுவராய் இருப்பதும் முற்பிறப்பின் புண்ணியப் பலனே ஆகும்.  காரணம் ஆயிரம் சிறுவருள் வாய்ப்பு கிடைப்பது ஒரு சில புண்ணியவான்களுக்கே.
  5. பெற்றோர் செய்த புண்ணியமோ உற்றார் உறவினரின் நற்செயலோ வழிநடத்திய குருவின் ஆசீரோ பீடச்சிறுவரின் பேராசீர் பலன்.
  6. அழைக்கப்பட்டோர் அநேகர் ஆலயத்திற்கு வந்து செல்பவர்கள்.  தேர்ந்தெடுக்கப்பட்டோர் ஒரு சிலர்.  அவர்களே பீடச்சிறுவரும் சிறுமியரும்.
  7. சின்னஞ்சிறுவர் இவர்கள் பெரியவர்களுக்கு வழிகாட்டிகளே.  ஆண்டவனின் ஆசீர் பெற்ற அருமையான ஊழியகாரர்கள்.
  8. சிலுவையைச் சுமக்கும் புண்ணியர்கள்.  தீப, தூபம் காட்டும் அருளாளர்கள், நற்கருணைத் துகள்களைத் தட்டுகளில் ஏந்தும் சின்னஞ்சிறு அதிர்ஷ்டசாலிகள்.

வாழிய பீடச்சிறுவர்கள்!
வளர்க அவர்கள் ஊழியம்!!


சகோ. சாந்தி ராபர்ட்ஸ்,
உதகை

குருக்களே குருக்களை

ஒரு முறை ஒரு பங்கிலே நான் இருக்கும்பொழுது என் பங்கு மக்கள் எனக்கு முன் பணியாற்றிய குருவானவரைப் பற்றிக் கேட்டார்கள்.  அதாவது அவர்கள் என்னிடம் “உங்களுக்கு முன் இருந்த ஃபாதர் இங்கிருந்து மாற்றம் அடைந்து வேறு பங்கிற்குச் சென்ற பிறகு இங்கு வந்ததே கிடையாது.  அவரை நம் பங்கிற்கு அழைக்கலாமே!  திருநாள் மற்றும் தவக்காலம் போன்ற சிறப்பு நாட்களில் அவரைத் தியானத்திற்கோ பிரசங்கத்திற்கோ அழைக்கலாமே!  அவர் இங்கிருந்து போனதிலிருந்து வந்ததே இல்லை” என்று கூறினார்கள்.  நானும் அந்த குறிப்பிட்ட குருவானவரை மாதாந்திர தியானத்திலும் சந்தித்தேன்.  அவரை அவர் பணியாற்றிய பங்கிற்கு அழைத்தேன்.  அவர் எனக்குத் தந்த பதில் என்னைச் சிந்திக்க வைத்தது.  அவர் சொன்ன பதில்: “ஃபாதர்!  நான் ஒரு பங்கிலே பணியாற்றிவிட்டு மற்ற பங்கிற்கு மாற்றம் அடைந்துவிட்டால் மீண்டும் பழைய பங்கிற்கு வருவது இல்லை.  ஏனென்றால் தற்போது பணியாற்றுகின்ற குருவானவருக்கு இறைப்பணி ஆற்றுவதில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.  அதே சமயத்தில் ஒரு வீட்டிற்கு சென்று விட்டு மற்ற வீட்டிற்குச் செல்லவில்லை என்றால் அது இறைமக்கள் மத்தியில் என்மீது தவறான எண்ணத்தை உருவாக்கும்.  ஆகவேதான் நான் பணியாற்றிய பங்குகளுக்கு மீண்டும் செல்வதில்லை.  இந்த Policy எனக்கும் நல்லது  உங்களுக்கும் நல்லது” என்றார்.

மேற்சொன்ன குருவானவரின் எண்ணத்தின்படி மற்ற குருக்களுக்குப் பணியில் தடையாய் இருக்கக் கூடாது என்பது பாராட்டுதற்குரியது.  குருத்துவப் பணி, ஏன் துறவறப் பணியாற்றுகின்ற குருக்கள் ஒவ்வொரு வருக்கும் மேற்சொன்ன குருவானவரின் பரந்த மனநிலை தேவைப்படுகிறது.  நானும் சில சமயங்களில் நான் பணியாற்றிய பங்கின் சில வீடுகளுக்குச் சென்றதுண்டு.  அப்படிச் செல்லுகையில் ஒரு சில மக்கள் “ஃபாதர் அவர்கள் வீட்டிற்கு சென்றீர்களே!  எங்கள் வீட்டிற்கு வாருங்களேன்!  ஏழைங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டீங்க!  வசதி படைத்தவர் வீட்டுக்குத்தான் செல்வீர்கள்!” என்று கேட்டதும் உண்டு.  மேற்சொன்ன குருவானவரின் எண்ணங்கள் என்னையும் சிந்திக்கத் தூண்டின.

இன்றைக்கு ஒரு சில குருக்கள், தான் பணியாற்றிவிட்டு வேறு பங்கிற்கு மாற்றலாகி சென்ற பின்பும் மீண்டும் பழைய பங்கிற்கு வந்து தற்போதைய பங்குத் தந்தைக்கு தெரியாமல் வீடு வீடாக உலா வந்து இறைமக்கள் மத்தியில் குறிப்பிட்ட குருவானவரின் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.  தான் பணியாற்றிய பங்கிற்கு மீண்டும் ஒரு குருவானவர் செல்லக் கூடாது என்ற சட்டம் எந்தத் திருச்சபை சட்டத்திலும் இல்லை.  ஆனால் அந்த பங்கில் உள்ள குருவானவரை மதிப்பின் நிமித்தமாக சந்தித்துவிட்டு மக்களைச் சந்திக்க செல்வது ஒரு குருவானவர் மற்ற குருவானவருக்கு காட்டும் அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்துகிறது.  ஆனால் புதிய பங்குத் தந்தைக்கு தர்ம சங்கடம் ஏற்படும் விதத்தில் முன்னாள் பங்குத் தந்தை செயல்படுவது அவரின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது.  குருக்களே குருக்களை மதிக்கவில்லை என்றால் யார் மதிப்பார்கள்? நமது சாட்சிய வாழ்வு எதில் அடங்கியிருக்கிறது?  நான் தமிழக இறையழைத்தல் பணிக்குழு செயலராக இருந்த பொழுது பல மறைமாவட்ட குருக்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டவைதான் மேற்சொன்ன அனுபவங்கள்.  இதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.  இது குற்றச் சாட்டும் இல்லை.  சிந்திக்க வேண்டியுள்ளது.  இந்த அனுபவங்கள் நான் நல்லவன் மற்ற குருக்கள் கெட்டவர்கள் என்பதற்காக அல்ல.  இதை நானும் நீங்களும் சிந்தித்துப் பார்க்கத்தான்!