இறையழைத்தல் ஊக்குநர்கள் கருத்தரங்கு 28 & 29 ஆகஸ்ட், 2010

கருத்தரங்கின் தலைவர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் துவக்க உரை :
இறையழைத்தலுக்கு இன்று இளையோர் தயாராக இல்லை வெளிநாடுகளில் குழந்தைகள் பெற்றால் அவர்களை ஊககுவிக்கிறது அந்நாட்டு அரசு. ஆனால் இந்திய நாட்டில் இளையோர் அதிகம். இளையோர் அதிகமாயிருப்பதால் நம் நாடு வல்லரசு நாடாகவும் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இளையோர் பருவம் துணிச்சல், சாதனைகள் செய்யக் கூடியவர்கள்.
  • 10 இளைஞர்களைத் தாருங்கள் நான் வலிமையுள்ள இந்தியாவாக உருவாக்கிக் காட்டுகிறேன் -  சுவாமி விவேகானந்தர்.
  • புதிய சமுதாயத்தின் வாசல்களை இளைஞர்களுக்குத் திறந்து விடுங்கள் - திருந்தந்தை 2ம் ஜான் பால்
  • நாட்டின் தீட்டிய ஈட்டி முனைகள் இளைஞர்கள்.  
  •  - அறிஞர் அண்ணா
  • கனவு காண்போம் - லட்சியத்தோடு இளைஞர்கள் வாழ முடியும்  - அப்துல் கலாம்
  • இளைஞர்களைத் தாருங்கள் - மற்ற அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் - புனித ஜான் போஸ்கோ
  • துறவறத்துக்குச் செல்லும் ஒருவர் நல்லவராக, தாராளமுள்ளவராக, நல் வாழ்வு நடத்த புனிதராக, பணி செய்ய ஆர்வமுள்ளவராக - இறைவனுக்குச் சான்று பகர சாட்சியாக இருக்க வேண்டும்.
  • தடைகளைப் படிக்கட்டுக்களாக மாற்றி இளைஞர் முன்னேற முடியும்.
  • இளைஞர் பல்வேறு துன்பங்களுக்குப் பிறகு சாதனை கண்டார்கள் :  - தாமஸ் ஆல்வா எடிசன் &  ஆம்ஸ்ட்ராங்க்


இன்றைய இளைஞர்கள் சவால்கள்: 
  1. 1 + 1 எனக் குழந்தைகள் இருப்பதையும் கடந்து இறைப்பணிக்கு அர்ப்பணிப்பது தான் பெற்றோருக்குச் சவால். குழந்தைகள் அதிகம் இல்லாததால் தேவ அழைத்தல் இல்லை என்பதற்கு காரணம்.
  2. கல்வித் துறையில் அரசு காட்டும் அதிக வளர்ச்சியில் இறையழைத்தல் குறைகிறது - First Generation - Free Education
  3. குடும்ப பக்தி - குடும்ப வாழ்வு - முதல் நாற்றாங்கால் குடும்பம்தான். ஆனால் இன்று குடும்ப செபத்துக்கு வாய்ப்பில்லை. இறையழைத்தல் குறைகிறது - பணம் சம்பாதிப்பது முதன்மை நோக்கம் (Possessiveness)
  4. தொலைத் தொடர்பு சாதனங்களை அதிகமாக, தவறாகப் பயன்படுத்துவதால் ஆற்றல் மிகு இளைஞர் பருவத்தைத் தவறாக பயன்படுத்துதல்.


இளைஞர்களுக்கு இறையழைத்தல் ஊட்ட நாம் செய்ய வேண்டியது என்ன?
  • சாட்சியவாழ்வுதான் முக்கியம். இயேசுவின் வழியில் எத்தனையோ புனிதர் வாழ்ந்து சான்று பகர்ந்தனர். புனித சவேரியார், குழந்தை தெரசா, புனித ஆக்னஸ்.
  • குடும்பங்களை, கிராமங்களைச் சந்திக்காமல் தேவஅழைத்தல் வர இயலாது. நல்ல குடும்பத்தில்தான் நல்ல இறை அழைத்தல் வர முடியும்.
  • சமுதாயத்தில் இன்று எதிர்பார்ப்பு - துறவறத்தார் - குருக்கள் மக்களோடு ஒன்றிணைந்து வாழவும் - அடிக்கடி அவர்களைச் சந்திப்பதும் பேசுவதும் அவசியம்.
  • இன்று எத்தனையோ பேர் தேவ அழைத்தல் பற்றி நமது உறவினரிடம் பேசுகிறோம் ?
  • நமது உறவினர்களிடையே இறை அழைத்தல் பற்றிப் பேச அச்சப்படக் கூடாது.
  • விதைக்க வேண்டியது நமது கடமை. அறுவடை செய்வது ஆண்டவருடைய செயல்.


II. குழு ஆய்வு வினாக்கள் :
1.
 a )இளையோரைப் பற்றிய நமது முன் சார்பு எண்ணங்கள் கருத்தியல்கள் என்ன?

 b) நடைமுறை வாழ்வியலில் இளையோரின் பலங்களும் பலவீனங் களும் என்ன?
 c) இளையோரின் உள் ஆற்றலை நமது பணியில் முழுமையாய் பயன்படுத்துகிற வழிமுறைகள் என்ன?

2. இளையோரைத் தேர்ந்தெடுக்கும் போது நாம் எதிர்கொள்ளும் சவால் களும் சஞ்சலங்களும் என்ன?
3. இளையோர் அழைத்தல் பணிகளில் நாம்கையாள வேண்டிய புதிய நவீன யுக்திகள் என்ன?
குழு அமர்வின் சிந்தனை :
  1. சாதிக்கும் உள்ளம் படைத்த இளையோரைக் கைவிடாமல் உறுதுணையாக இருக்கணும்.
  2. இளையோர் சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  3. நமது சாட்சிய வாழ்வாலும், காலத்திற்கேற்பவும் உருவாக்குதல் தலைமைப் பண்புகளை வளர்த்தல் - லட்சியத்தின் விழுமிய வழியில் வாழ வழிவகுக்க வேண்டும்.
  4. இளையோரைத் தேர்ந்தெடுக்கும்போது சவாலாக உள்ளவற்றையும் ஏற்க வேண்டும்
  5. சாதியம், சாட்சிய வாழ்வின்மை போன்றவற்றால் இறையழைத்தல் தடையாக உள்ளது. பெற்றோர் ஒரு, இரு பிள்ளைகளைப் பெறுவதால் இறையழைத்தல் தடையாக உள்ளது.
  6. சுகபோக வாழ்க்கை வாழ்வது, சாட்சிய வாழ்வில்லாதிருத்தல் இளைஞர்களைத் தெரிந்தெடுக்கத் தடையாக உள்ளது.
  7. பல்வேறு திறமைகளை ஊக்கப்படுத்தி, பணிகளைப் பகிர்ந்து தரவும், கருத்தரங்கு - முகாம்கள் புதிய முறைகளைக் கையாண்டு இளைஞர்கள் இயேசுவைத் தொடர வழிவகுக்கணும்.
  8. புதிய யுக்திகளைப் பயன்படுத்தி (ஊடகங்கள்) இளைஞர்களை வழி நடத்தினால் இயேசுவின் பாதையில் செல்ல வைக்கலாம்.


III. இளையோர் பகிர்வு  - Fr. எஸ்தாக்யூஸ், Mrsவி. நிர்மலா, Mr. ரஞ்சித்
  1. குருக்கள், துறவியரிடமிருந்து இளையோர் எதிர்பார்ப்பது
  2. இளையோர் ஏன் இறையழைத்தலுக்குக் கவரப்படுவதில்லை?
  3. இளையோர் எவ்வாறு இறையழைத்தல் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள இயலும்?


அருள்பணி. எஸ்தாகியூஸ் செயலர் இளமை என்பது மகிழ்ச்சியானது. அதைச் சரியாக பயன்படுத்த அறிதல் வேண்டும்.  இளைஞர்களை எப்படி வழிநடத்த முடியும்...?

திரு. ரஞ்சித் இளைஞர்களாகிய நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம்?
1.பொதுவான எதிர்பார்ப்புகள்
2.ஏழை, பணக்காரர் என வேறுபாடின்றி
  • பங்களவில் இளைஞருக்கு அங்கீகாரம் தரல்.
  • உதவிகள் - வழி நடத்துதல் துன்ப வேளையில் உதவுதல் - ஆற்றுப்படுத்துதல்
  • பங்கு அளவில் இளைஞர் இயக்கத்துக்கு பங்குத்தந்தை உடன்பட்டிருக்கணும்.
  • சாதி ரீதியாக ஒதுக்கப்படாமை
  • பங்குப் பேரவையின் உறுப்பினராக (இளைஞர்கள்) அங்கீகரிக்கப்படுதல்
  • மனித மாண்பு மதிக்கப்பட வேண்டும்.
  • இடைநிலை, கடைநிலை இளைஞர்கள் ஒதுக்கப்படக் கூடாது.
  • குருக்கள், துறவறத்தார்கள் Role Model ஆக இருக்க வேண்டும்.
  • பெற்றோர்களும் ... தம் பிள்ளைகளுக்கு நல்வழிகாட்ட கிறிஸ்துவ கடைமைகளைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
  • இளைஞர்களுக்கு பங்களவில் இளைஞர் இயக்கத்துக்கு கருத்தரங்கு, வேலை வாய்ப்பு வசதி தரல்.
  • நாங்கள் உங்களிடம் எங்களை சமமாக நடத்துங்க ... தோழமையில் உடனிருப்பு, அன்பாகயிருங்க என்று கேட்கிறோம்.
  • ஆலோசனை தந்து வழிநடத்துவது துறவறத்தாரின் கடமை.


திருமதி நிர்மலா இன்றைய இளைஞர்கள் குருத்துவத்துக்கு, துறவறத்துக்கு ஏன் வர இயலவில்லை?
  • எதிர்பார்ப்பது கிடைக்காததால் விலகிச் செல்கிறார்கள்.
  • இன்று இளைஞர்கள் அருட்தந்தை, அருட்சகோதரிகளை எப்படிப் பார்க்கிறார்கள்? ஏன்?
  •  டாக்டரிடம் ரூபாய் தந்தால் மருத்துவம் பார்க்கிறார்கள். என்ஜீனியரிடம் ரூபாய் தந்தால் வீடு கட்டித் தருகிறார்கள்.
  • அதேபோல் குருவானவரிடமும் ஏதாவது வேலை செய்தால் மட்டும் உதவி செய்கிறார்கள்.
  •  Media வழியாக
  • தொண்டுக்கும் வேலைக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும்.
  • ஈர்ப்புத் தன்மை வேணுமா? அமர்ந்து பேசணும் . . .
  • அருட்தந்தையரிடம், துறவிகளிடம் எதிர்பார்ப்பது உங்களுடைய அன்பான வார்த்தைகள் அணுகுமுறை. . .
  • அருட்சகோதரிகள் இளம் பெண்ணை அதிகம் வழிநடத்த உதவி செய்யணும்.


திரு. ஸ்டாலின்  இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட ஈடுபாடு இருக்க வேண்டும்.
  • பங்கேற்பவர் பங்களிப்பவர் பார்வையாளராக இருக்கக் கூடிய இளைஞர்களை நாம் பங்களவில் ஈடுபடுத்த வேண்டும்.
  • குருக்கள், அருட்சகோதரிகள் இல்லை யயன்றால் பொதுமக்கள் நாங்கள் கிறிஸ்துவுக்குள் வாழவே முடியாது.
  • இளைஞர்களை நீங்கள்தான் வழிநடத்தணும்.
  • நம்மிடம் வரும் ஒரு இளம் பெண்ணை / இளைஞரை எப்படி இயேசுவாக மாற்றப் போகிறோம்?
  • ஒற்றுமை ரீதியாக, பண்பாடு ரீதியாக ஒருங்கிணைக்கலாம்.
  • மறைக்கல்வியில் இளைஞர்களை அனுபவப் பகிர்வு மூலம் ஒருங்கிணைக்க முடியும்.
  • ஒவ்வொரு சபையும் தனது தனி வரத்தால் சமுதாயத்தோடு இணைந்து பணியாற்றும் போது ஈடுபடுத்தி ஒருங்கிணைக்க முடியும்.
  • காலத்தை அறிந்து  செயல் திட்டத்தோடு செயல்பட இளைஞர்களை ஈடுபடுத்தி பணிகளை செய்விக்க வேண்டும்.
  • அதற்கு நாம் ஒவ்வொருவரும் Role Model ஆக வாழணும்.
  • நம் தமிழகத்தில் கோடிக்கணக்கில் இளைஞர்கள் உள்ளார்கள். அருட் தந்தையர், அருட்சகோதரிகள் நினைத்தால்தான் இளைஞர்களை உருவாக்க முடியும்.
  • இளைஞர்களைப் பங்களிப்பவர்களாக உருவாக்குங்கள்.
  • நல்ல உறவும் பகிர்வும் தொலைத் தொடர்பும் கிறித்துவத்துக்குத்தான் உள்ளது. எனவே இளைஞர்களை இதன் வழியாக மேம்படுத்துங்கள்.


தந்தை எஸ்தாகியூஸ் 
  • இன்றைய இளைஞர்கள் சவாலாக தனது வாழ்க்கையைப் பார்க்கிறார்கள்.
  • சவாலை நாம் கூர்மையாக்க வேண்டும்
  • பார்வையைப் பொறுத்தவரை விசாலமாக்க வேண்டும். அப்போது இறை அழைத்தலுக்குச் செவிமடுப்பார்கள் இளைஞர்கள். நாம் உலகின் ஒளியாக இருக்க அழைக்கிறார். எனவே மற்ற மதத்தினருக்கும் தீப்பொறியாக அமைய வேண்டும்.
  • நாம் தேவனைப் பற்றி பேசும்போது அவருக்கே உள்ள இலட்சியத்தைப் பற்றி பேச வேண்டும்.
  • நமது இறையழைத்தல் மிகவும் பயன் உள்ள வகையில் அமைய தமிழக அளவில் சபைகள் புதிய யுக்திகளைச் சிந்திக்க வேண்டும்.


IV. கருத்துரை - அருள்பணி. ஜெரி S.J.

கடவுள் பாதி, மிருகம் பாதி,
கலந்து செய்த, கலவை நான்,
வெளியே மிருகம், உள்ளே கடவுள்,
விளங்க முடியா, கவிதை நான் - கவிஞர் வைரமுத்து
தேவ அழைத்தலுக்கு சவாலாக ... உரோ 7ஆம் அதிகாரம்
வேறு சில காரியங்களைத் தவிர்க்க ஆர்வம் ஆனாலும் செய்து கொண்டிருக்கிறேன்.
தேவ அழைத்தல் என்பது துறவறத்துக்கு, குருத்துவத்துக்கு அழைத்தல் என்பது மட்டுமல்ல.
தேவ அழைத்தல் என்பது மனிதத்தைத் தூக்க மிருகத்தை இறக்கத்தான்.
­ இன்றைய இளையோர் பரந்த சிந்தனை உடையவர்கள்
விவேகானந்தர் : மலைக்கு உச்சி நோக்கும் போது ஒரு பக்கத்தைப் பார்க்கிறோம். உச்சி ஏறிய பிறகு அம்மலைக்கு அடுத்த பக்கம் உண்டு என்றார்...
­ நாமும் நமது கிறிஸ்துவ சமயத்தில் இளையோர்களை விரிவுபடுத்த வேண்டுமெனில் இந்த நமது சபை வழியாக திருச்சபை வழியாக, கிறிஸ்துவ மதம் வழியாக ... பிற மதங்கள் மனித உள்ளங்களையும் பார்க்க வேண்டும்.
புதிய பாணியில் ... இறையாட்சி பணியில் இறை அழைப்பு
  1. இறைமையை மனிதத்தை புனிதத்தைத் தூக்கி நிறுத்த அழைப்பு (மனிதத்திற்காக அழைப்பு)
  2. திருச்சபை துறவற சபைகளைக் கடந்தது. எ.கா. அன்னை தெரசா.
  3. நாத்திகம் ஆத்திகம் கடந்தது.
  4. இன்றைய இளையோர் எதிர்பார்ப்பது கூரிய சவால், பரந்த பார்வை.
  5. இறையாளர் பல்வேறு சபைகள்.
  6. சாட்சிய வாழ்வு வாழ்வும் வார்த்தையும்
  7. இறையாட்சி விழுமியங்கள்.
  8. முத்திரைஇயக்கம் நிறுவனம்.
  9. அழைப்பு பல புதிய பணிகள்
  10. இலட்சிய அறிக்கை
மனத்திற்கு மட்டுமே பயந்து விடுமானத்தை உடலிலே கலந்து விடுஇருக்கின்றவரை வாழ்ந்துவிடுஇரண்டில் ஒன்றைப் பார்த்துவிடு
மதர் தெரசாள் அழைப்பில் அழைப்பை ஏற்றார். மதர் தெரசாள் She became a Role Model - Why not you & I ?
இயேசு இலட்சியத்தில் வியப்போடு பேசுகிறார் விமர்சனத்தோடு... (லூக் 4; யோவா 8). இன்றைய துறவற மனப்பான்மை எப்படி உள்ளது?
  1. signs of Convenience in the modern world (இறையாளர்கள் வசதியின் அடையாளங்கள்) 30%.
  2. Signs of Compromise (சமரசம் செய்பவர்கள்) 60%
  3. Signs of Contradiction (வித்தியாசமாக செய்பவர்கள்) 10%
மூன்றாவதான கூற்றுப்படி வாழ்ந்தால் கண்டிப்பாக இலட்சியத்தை வாழ்வாக்க முடியும்.
­ எல்லாம் விதிவசப்படித்தான் நடக்கும் என்பதை மறந்துவிடு (வைரமுத்து)
 இலட்சியம் இதயத்தில் இருக்கும்போதே எது நிஜம் என்பதைக் காட்டிவிடு. அப்போது காலம் புரண்டு படுக்கும் நான் சிலுவையில் உயர்த்தப்பட்ட பிறகு ஈர்க்கிறேன் Jesus
வாழ்க்கை சாட்சியாகயிருக்கணும் வாழ்க்கைப்பாடு
வாழ்க்கை சாட்சி வாழ்க்கைப்பாடு எடுத்து வாழ்ந்து காட்டணும்.
1. திருமுழுக்கு செய்து இயேசுவுக்கு பிரமாணிக்கமாக வாழ்தல்.
2. சொல்வதொன்று செய்வதொன்றாக இருக்கக் கூடாது.
3. திருச்சபையில் தங்களை மட்டும் மேம்படுத்தி துறவறம், இல்லறத்தைவிட மேம்பட்டது எனச் சொல்வது தவறு. இறையாட்சி விழுமியங்களோடு கடவுள் தன்மையை நிலைநிறுத்தி பணி செய்யணும்.
  1. Justice (Obedient)
  2. Freedom (Chastity)
  3. Poverty (Love)
சமுதாயம் என்பது சம ஆதாயம் சம வாழ்வு சம உரிமை சம பங்கேற்பு சம பகிர்வு எங்கே உள்ளதோ அதுவே சமுதாயம்
என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கூறியுள்ளார்.
இறையழைத்தலுக்கு அழைக்கும்போது கண்டிப்பாக சமூக, இறையாட்சி கண்ணோட்டங்கள் நன்றாக தர வேண்டும்.
இயக்கம் முத்திரையைவிட மேலானது...
எந்த சபை இயக்கங்களை அதிகமாகக் கொண்டுள்ளதோ அவர்கள் அதிக அழைத்தலைப் பெறுகிறார்கள்.
நிறுவனத்தைப் பயன்படுத்துவோம். ஆனால் அதையே இலக்காக வைத்து விடக் கூடாது.
மக்கள் மத்தியில் இயக்கங்கள் சார்பாக பணிகள் செய்ய வேண்டும். அடிமைப் படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காகப் போராடுதல், மக்களின் உரிமைக்காகப் போராடுதல். மக்களை அன்பு செய்தல் இருந்தால் கண்டிப்பாக அதிக அழைத்தல் கிடைக்கும். எந்த அளவுக்கு மண்வாசனை இருக்குமோ அந்த அளவுக்கு இறையழைத்தல் அதிகமாகும். They see our life and come- நமது வாழ்க்கையைப் பார்த்து வருதல் சவாலாக வாழ வருதல் தேவை.
பணிகள் புதிய பாணியில் செயல் படணும் வழக்கமாகச் செய்வதைவிட புதியதாக செய்ய வேண்டும்.
­ வழக்கமாகச் செய்யச் செய்ய இறுகிப் போவோம்  புதியதாயகச் செய்யச் செய்ய இளகிப்போவோம். அப்போது நமது பணி சவாலாக இருக்கும். புதிய பணிகள் புதிய வாழ்முறைகள் யாவை?
தொடர்பணிக்கு :
  1. Vision Statements in Tamil Nadu and Pondicherry
  2. Inter Congregation screening and selection
  3. INCIF : Inter Congregation Initial Formation
அழைத்தல் பொதுவானது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது குறிக்கோள் சிறப்பாகத் தரணும் சபையில் சேர்வது இரண்டாம் பட்சம். ஆனால் இறையாட்சிப் பணியில் சேர்வது முதல் பட்சம், இளையோரைத் துறவற வாழ்வுக்கு அழைக்குமுன் நமது அழைப்பை ஆழப்படுத்தவேண்டும்.
V. கலந்தாய்வரங்கம்
பகிர்ந்தவர்கள் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி. ரெய்மண்ட், சகோ. வில்லியம், அருட்சகோ. சோபி, அருள்பணி. அடைக்கலம், அருட்சகோ. ஜுடி, சகோ. ஆல்பர்ட்
அருட்சகோ. சோபி ICM  இளையாரின் பகிர்வுக்கு நமது பதில்
  • இளைஞர்களை அங்கீகாரம் செய்யுங்கள். 
  • உண்மையிலே இளைஞர்களை வழி நடத்தி அவர்களோடு இணைந்து பணி செய்தல் தேவை. இளையோருக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்வுகள் தொடர பயிற்சி தர வேண்டும்.
  • இளையோருடன் கலந்துரையாட நேரம் ஒதுக்குதல்
  • வழிபாடுகளில் இளையோரை இணைத்து செயல்படல்
  • நாம் Role Model ஆக இருக்கணும்
  • இளையோரைப் பாராட்ட பயப்படத் தேவையில்லை
  • அவர்களிடமே பொறுப்புகளைத் தந்து முடிவுகளையும் எடுக்க வைத்து உற்சாகப்படுத்துதல்.
  • நாம் கண்டிப்பாக இளைஞர்களோடு தோழமையுடன் பயணித்தல் வேண்டும்.
அருட்சகோ. ஆல்பர்ட் வில்லியம் FSP
  • இளைஞர்களுடன் இவர்களது அனுபவம்
  • இளைஞர்கள் நம்மை Role Model ஆக இருக்கணும் என எண்ணுகிறார்கள்
  • நாம் சொல்வதை செய்ய வேண்டு மென விழைகிறார்கள்
  • அவர்களோடு பயணிக்க விரும்புகிறார்கள்
  • அவர்களோடு தோழமையாய் இருக்க விரும்புகிறார்கள்
  • சவால்களோடு வாழ விரும்புகிறார்கள்
  • நமது மனிதநேய பணிகளைப் பகிரும் போது செவிமடுக்கிறார்கள்
  • அவர்களோடு பணி செய்யும்போது வழிநடத்தும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்
அருட்பணி அடைக்கலம் SDC
  • இளைஞர்கள் எப்போதும் நம் பிள்ளைகள்
  • இளைஞர்கள் இன்று நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் எப்படி வாழ வேண்டும்? என வழிகாட்டுதல்
  • அவர்களை நிகழ்காலத்தில் வாழ வைக்கணும்.
  • அவர்களை முன்னேற்ற நாம் முயற்சி எடுக்கணும்.
  • இளைஞர் தவறு செய்யும்போது மிகவும் கரிசணையுடன் அன்புடன் நல்வழி நடத்த வேண்டும்.
  • இளைஞர்களுக்குத் தேவைப்பட்டால் பண உதவிகூட செய்ய முன் வர வேண்டும்.
  • அவர்களுடைய சுயமரியாதையை மதிக்கணும்.
  • இரக்கத்தின் நண்பர்கள் என ஒரு குழுவாக வைத்து அவர்களையே தலைவர், பொருளர், செயலர் உறுப்பினர்களையும் வைத்து வழிநடத்தினால் இளைஞர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
  • நாம் சமுதாயத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக நமது குழுமத்திலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
அருட்சகோ. ஜுடி SAT
  • இளைஞர்களை நாம் தேடிச் செல்ல வேண்டும்.
  • அவர்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
  • அவர்களை மகிழ்ச்சியாக வைக்க தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.
  • பங்கில் உள்ள மறைக்கல்வி, YCS, பாடகர்குழு, இளைஞர் குழு போன்ற அனைத்து நிலைகளிலும் அவர்களை உற்சாகப்படுத்தி தோழமை கொள்ள வேண்டும்.
  • பங்கில் உள்ள அருட்சகோதரிகள் வீடுகளைச் சந்திக்கச் செல்ல வேண்டும். இளைஞர்களைக் கூர்ந்து கவனித்து, நல்ல வழிகாட்டல் தேவை.
  • இன்றைய சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதிப்பு அதிகமாக இளைஞர் களிடம் உள்ளது   அதைவிட பலமாக நமது முன்மாதிரி வாழ்க்கையிருந்தால் தான் நமது பாதிப்பு அவர்களிடம் ஏற்படும்
  • பொறுப்புக்களை அவர்களிடம் தந்து வழி நடத்தணும்
  • பங்கிலேயே உள்ள இளைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்தி கலைக்குழு உருவாக்கலாம்
  • இளைஞர்கள் இயக்கத்தில் உள்ள பிறந்த நாள் பெயர்களைப் பட்டியல் எடுத்து திருப்பலியில் பாராட்டினால் உற்சாகமுடன் அவர்களை நாம் தேடுகிறோம் என நம்மை அவர்கள் தேடி வருவார்கள்.
அருட்பணி. ரெய்மண்ட், சென்னை
 இளைஞர்களுக்கு Frs & Srs என்ன செய்யனும்?
 இவ்வருடம் இளையோருக்கு ஒரு ‘Vision Statement’  ஏற்பாடு செய்யலாம்
1.       Role Model- அந்த Role Model நானாக இருக்கனும்.
2.       Relationship- இளையோரிடம Fear of Unknown உள்ளது. அதனால்  Relation ship and Creativity இருக்கணும்.
VI. கருத்துரை :   முனைவர் திரு. அந்தோணி குரூஸ்
இளையோர் பார்வையில் இறையழைத்தல்
குருத்துவப் பயிற்சிக்கான அடிப்படைத் திட்டம் என்ற வினா விடைத் தாளைப் பகிர்ந்து கொண்டார்.
 1. Qualities of Vocation Promoters are Special
  S - Selfless Service
  P - Patient for politeness
  E - Enthusiasm
  C - Caring
   I  - Integrity
  A - Awareness
  L -  Love
2. சவால்கள்

  1. Generation Gaps
  2. Gender  
  3. Crisis
  4. Social Status   
  5. Self Esteem
இளைஞன் தான் எப்படியும் வாழலாம் என வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  இந்த நிலையில் நாம் வழிகாட்ட வேண்டும்.  இளைஞர்களை கீழ்காண் இலக்குத் தலைமுறை என்கிறார்கள் Talents, Skills, Abilities and Power.


இளைஞர்கள் எதுவானாலும்  உடனே அனுபவித்துப் பார்க்க விரும்புகிறவர்கள்.  எனவே நாம் வழிநடத்தணும் - Courage, Creativity and Challenge செய்ய அழைத்துவர வேண்டும்.

  • ஒரு இளைஞன் நம்மைப் பார்த்து அடுத்த பிறவியில் உங்கள் சகோதரனாக, சகோதரியாக பிறக்கணும் என சொல்லும் அளவுக்கு நமது வாழ்க்கை இருக்க வேண்டும்.
  • Digital World-ல் உலவும் இளைஞர் மத்தியில் அதைப் பற்றிய அறிவு நமக்கும் இருக்க வேண்டும்.
  • வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து . . .
வாழ்க்கையில் எதிர்கொள்வதை எதிர்நீச்சல் போட்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
Mother Teresa-வின் நண்பர் Praveen Chawla எழுதுகிறார் :
உலகத்தின் வாழ்க்கையில் முழு உண்மை எதுவுமே கிடையாது.  பாதி உண்மைதான்.
உலகமய கிறிஸ்துவம் பல சவால்களை எதிர்கொள்கிறது.
எதிர்காலத்தில் 64% கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை விட்டு விலகிடலாம்.
எனவே சமுதாயத்தை வளர்த்தெடுக்க புது யுக்தியுடன் செயல்பட வேண்டும்.
இன்றைய கலாச்சாரத்தில்
Sin seems to be stronger than God
Sex seems to be stronger than Jesus
Money seems to be stronger than Holy Spirit
அப்படியானால் நாம் இளைஞர்களை எப்படி வழிநடத்த வேண்டும்? எனச் சிந்தித்து செயல்படுவோம்.
  • இளையோரைத் தேர்ந்தெடுத்து அவர்களை நாமிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து அவர்களோடு உடனிருந்து வாழ்தல் அவசியம்.
  • திருவிவிலியம் எப்போது இளைஞரிடம் கொண்டு போகிறோமோ அப்போது தான் இறையழைத்தல் கண்டிப்பாக கிடைக்கும்.
  • விவிலியத்தை மையமாக வைத்து இறையழைத்தல் பணி செய்ய அழைக்கப்படுகிறோம்.

செயலர் அருள்பணி. சகாய ஜான் அவர்களின் சில முக்கிய அறிவிப்போடு கருத்தமர்வு நிறைவுற்றது.
அறிக்கை தயாரிப்பு
அருட்சகோ. ஆக்னஸ் FSJ
சென்னை

இளையோருக்கு திருதந்தை விடுக்கும் செய்தி

கிறிஸ்துவில் நண்பர்களாக வாழ்வதில் இளையோர் தங்கள் மகிழ்வைக் காண வேண்டும்! இளையோரைத் தனது பொது மறை போதகத்தின் இறுதியில் திருத்தந்தை வாழ்த்தினார். கடந்த 5.09.2010 அன்று வெனிசுலாவில் தொடங்கிய மூன்றாவது இலத்தீன் அமெரிக்க இளையோர் மாநாட்டிற்காக சிறப்பு வாழ்த்துக்களை இஸ்பானிய மொழியில் வழங்கிய திருத்தந்தை இளையோர் கிறிஸ்துவைத் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் சந்திக்க இம்மாநாடு பெரிதும் உதவும் என்று தான் நம்புவதாகக் கூறினார். இந்த மாநாட்டின்போது அன்னை மரியா இளையோருக்குத் துணை இருக்கவும், கிறிஸ்துவின் நண்பர்களாக வாழ்வதில் இளையோர் தங்கள் மகிழ்வைக் காணவும் தன் வாழ்த்துக்களைக் கூறினார் திருத்தந்தை.

நற்செய்திப் பணியில் ஈடுபட வேண்டியது இக்காலத்திய இன்றியமையாத தேவை என்று திருத்தந்தை கூறினார். புதிய புதிய கிறிஸ்துவப் பிரிவினைவாதக் குழுக்கள் வேகமாக வளர்ந்து வரும் வேளை, பல கத்தோலிக்கர் திருச்சபை வாழ்விலிருந்து அல்லது திருச்சபையிலிருந்தே விலகி வாழ்வது கவலை அளிப்பதாக உள்ளது. இவை கத்தோலிக்கரின் விசுவாச வாழ்வு பலவீனமானதாகவும், மேலோட்டமானதாகவும் இருப்பதையே உணர்த்துகின்றன என்றார் திருத்தந்தை.

சுயவிமர்சனம்

  1. நீ அதிகம் பேசுகிறவனா? . . .
  2. நீ அதிகம் செய்கிறவனா? . . . .
  3. நீ சொல்வதைக் செய்கிறவனா? . . .

(ஏதாவது ஒன்றை உனது மனசாட்சிப்படி தேர்வுசெய்)

  • மூன்றாவது என்று நீ தேர்வு செய்தால் நன்று.
  • இரண்டாவது என்று நீ தேர்வு செய்தால் பரவாயில்லை
  • முதலாவது என்று நீ தேர்வு செய்தால் உன்னையே மாற்றிக் கொள்வது சாலச் சிறந்தது.

மனிதர்கள் பலவிதம்

நான் குருவாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.  ஆனாலும் உத்வேகத்துடன் பணியை நன்முறையில் செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் எனக்கு கால்களைச் சுற்றிக்கொள்ள பல நச்சு ஜீவன்கள் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நானும், அழைத்தல் வாழ்வைத் தேர்ந்து கொண்டிருக்கிற உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.  எனவே, அழைத்தல் பயணத்தில் நிதானித்து பணியைச் செய்ய வேண்டும்.  நம்மால் முடியும் என்ற திடமான நம்பிக்கையோடு இருக்கும்போது உங்களைச் சுற்றியுள்ள பலரும் பல விதமாக விமர்சிக்கக் கூடும்.  அழைத்தல் வாழ்விற்கு விமர்சனம் என்பது உரம் போன்றது.   நீங்கள் தழைத் தோங்க உதவி செய்யும்.  சில நேரங்களில் உங்கள் இலட்சியப் பயிருக்கு நடுவில் களைகளும் தோன்றலாமல்லவா?  இந்த 23 ஆண்டு காலங்களில் நான் கடந்து வந்த நச்சுப் பயிர்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வஞ்சப் புகழ்ச்சியாளர்கள் :  என்னங்க ஃபாதர் நல்லா இருக்கிறீர்களா?  நான் போன இடமெல்லாம் உங்களைப் பற்றித்தான் பேசறாங்க.  நல்லா பணி செய்கிறீர்களாமே என்று புகழ்கிறவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.  இவர்களே பின்னால் வேறுவிதமாகப் பேசுவார்கள்.  “இவன் என்ன பணியா செய்யறான்?  காலை முதல மாலை வரை அறையில் உட்கார்ந்துகிட்டு நேரத்தை வீணடிக்கிறான்” என்று பேசும் பேர்வழிகளாகவும் மாறுவார்கள் இவர்கள்.  நீங்க இந்தப் பங்குக்கு “வில்லன் மாதிரி” என்று கூறி விட்டு மேலிடத்தில் உங்களைப் பற்றிய நல்லெண்ணங்களைத் தகர்த்து விடுவதில் சமத்தர்கள்.  உங்களை முன்னால் புகழ்ந்துவிட்டு பின்னால் அவர்கள் உங்களைப் பற்றிக் கிண்டலடிப்பதைக் கேட்டு மனம் உடைந்து விடாதீர்கள்.  இவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள் அதுவே போதும்.
வஞ்சனையாளர்கள் : இவர்கள் வித்தியாசமானவர்கள்.  உங்கள் முன்னாலேயே உங்களைப் பற்றி விமர்சிக்கலாம்.  குறை, நிறைகளைப் பற்றிப் பேசலாம், பேசாமலும் இருக்கலாம்.  என்னங்க ஃபாதர் நீங்க இந்தப் பங்கிற்கு ஒன்றுமே செய்யலையே.  எல்லாமே உங்களைத் தப்பாக பேசறாங்க என்று ஸ்ருதி சுத்தமாக நீங்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது கிண்டலாகக் கூறுவதுபோல் கூறி உங்களை உசுப்பி விடலாம், கடுப்படிக்கலாம்;  உங்கள் மேலதிகாரிகளிடம் அல்லது பங்கு மக்களிடமே உங்களைக் கிண்டல் செய்வது போல் தங்கள் மனக்கசப்பை வெளியிடலாம்.  இவர்களுக்கு ஜால்ரா தட்ட ஒரு கூட்டம் இருக்கும்.  எப்படியாவது இவன ஒழித்துக் கட்டணும் என்ற முனைப்பில் உங்களுக்கு விரோதமாக எந்த செயல்களிலும் இறங்கத் தயங்காதவர்கள்.  இவர்களிடம் நேர்வழியைக் காண்பது அரிது.  மொட்டைக் கடிதம் எழுதுவதில் வல்லவர்கள்.  நேர்மையை மனதில் வைத்து இவர்களை இவர்களது செயல்களை ஒதுக்கிவிடுங்கள்  (Ignore them).
தற்பெருமையாளர்கள் : நீங்கள் என்ன தான் இறைபணி செய்தாலும், உங்கள் பணி உபயோகமுள்ளது என்றாலும் இப்படிப்பட்டவர்களிடமிருந்து ஒரு சின்ன அங்கீகாரம் கூட நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்காது.  தன்னைத் தவிர மற்றவர்கள் முட்டாள்கள்.  தன் செயல்களைத் தவிர மற்றவர்களை அற்பமாக எண்ணுபவர்கள் இவர்கள்.  நேரடியாகவும் பாராட்டமாட்டார்கள்.  இவர்கள் மேற்கூறியவர்களுடன் கூட்டணி வைத்து உங்களை ஆக்ரோ­மாக விமர்சித்து தங்கள் காட்டத்தை தணித்துக் கொள்வார்கள்.  இதற்கும் பதறி விடாதீர்கள்.
புறங்கூறுபவர்கள் : இதனை வாசிக்கும் போதே சில முகங்கள் மனத்திரையில் நிழலாடத் துவங்கி இருக்குமே!  நான் இப்படி செய்யலாம் என்றிருக்கிறேன் என்று அளவு கடந்த உற்சாகத்தில் இவர்களுடன் நீங்கள் பகிரும்போது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்துவிட்டு உங்கள் முயற்சிக்கு எந்தெந்த விதத்தில் முட்டுக் கட்டை போட முடியுமோ அத்தனை வழிகளையும் கையாள்வார்கள்.  நீங்கள்  சொல்லாததையும் சேர்த்து அதைப் புனைவதில் எத்தர்கள்.

கூழைக்கும்பிடு போடுபவர்கள் : இந்த வார்த்தையைக் கேட்ட உடனேயே “ஜிங்குசா கோஷ்டிகள்” கண்முன் வந்து விடுவார்கள்.  தங்களுக்கென்று எந்த அபிப்பிராயமும் இல்லை என்பது போல நீங்கள் எது சொன்னாலும், எது செய் தாலும், “ஆமாம் சாமி” போடும் ஆசாமிகள் இவர்கள்.  உங்களுக்கு இவர்களால தீமை அதிகமில்லை என்றாலும், நன்மை எதுவுமே இல்லை என்பதை நன்கு உணர வேண்டும்.  எனவே இவர்களையும் இனம் கண்டு கொள்ள வேண்டும்.
நலம் விரும்பிகள் : இவர்கள் உங்கள் விளைச்சலுக்காக (நற்பணிகளுக்காக) நீர் பாய்ச்சு கிறவர்கள்.  உங்கள் பணி வளர்ச்சியில் மிகப் பெரிய பங்கு இவர் களுக்குப் போய்ச்சேர வேண்டும்.
 இத்தனை பேரையும் எனது குருத்துவப் பணியிலே கடந்து வந்திருக் கிறேன்.  இத்தனை பேரையும் நீங்களும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.  இவர்கள் தடைக்கற்களாக இருக்கலாம்.  துஷ்ட்டரைக் கண்டால் தூர விலகச் சொன்ன ஆன்றோர்கள் அவர்களைத் தூக்கி எறியச் சொல்லவில்லை.  எனவேஇப்படிப்பட்டவர்களைக் கண்டு விலகிக் கொள்ள வேண்டுமேயயாழிய இவர்களை விலக்குவது பண்பில்லை.
 ஒரு சிலரை எனது அனுபவத்தில் இனம் பிரித்திருக்கிறேன்.  இவர்களைத் தவிர இன்னும் எத்தனையோ வகையினர்.  இனிமேல் மற்றவர்களையும் நீங்கள் எளிதாக புரிந்து கொண்டு விடுவீர்கள்.  இப்படிப்பட்ட குள்ளநரித் தனத்தைக் கூட தங்கள் பணி வெற்றிக்குப் பாலமாக்கிவிடும் வித்தகர்கள் இருப்பார்கள்.  அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அற்புத குணநலன்கள் வாய்க்கப் பெற்றிருப்பார்கள்.  இவர்களை உதாரணமாக்கிக் (Role Models) கொள்ள வேண்டும்.

 மனிதர்கள் பல ரகமானவர்கள்.  பல குணாதிசயங்களாக உள்ளவர்கள்.  அவர்களை அவர்கள் குறை, நிறையோடு ஏற்றுக் கொள்ளும்போது மனிதம் தழைக்கிறது.  “மற்றவர்களை மாற்றுகிறேன்” என்று போர்க்களத்தில் இறங்கி காயப்படுவதை விட, அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களின் செயல்கள் எந்த விதத்திலும் நம்மைப் பாதிக்காமல் பாதுகாத்து, நம்மை மாற்றிக் கொண்டு, உயர, உயரப்போவது மட்டுமே இலட்சியமாக இருக்க வேண்டும்.

பணி. வின்சென்ட் பால்ராஜ்,
பங்குத்தந்தை,
புனித மரியன்னை ஆலயம், அண்ணா நகர், பவானி

புகழ்ச்சிப் பலி

எனது பிறந்த ஊரில் அருமையான பங்குத்தந்தை ஒருவர் இருந்தார்.  முதிர் வயது.  மிகுந்த இறைபக்தியும், மக்கள் மீது நேசமும், குருத்துவப் பணியில் நேர்மையும் கொண்டவர்.  மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், இவைகளில் ஆர்வம் கொண்டு முதிர் வயதிலும் தளரா உழைப்பில் சிறந்து வாழ்ந்தார்.

அவரின் குருத்துவ வாழ்வில் பொன்விழா வந்தது.  ஐம்பது ஆண்டுகள் நிறைவு.  மக்கள் அவர்மீது கொண்டிருந்த பாசத்தினால் பொன்விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென விரும்பினார்கள்.  அதற்காக முனைப்புடனும் செயல்பட ஆரம்பித்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட பங்குத் தந்தை அவர்களைக் கூப்பிட்டு இவ்வாறு கூறினார் “இறைவனுக்குப் பணி செய்ய என்னைத் தேர்ந்து கொண்டவர் இறைவன்.  என் இறைப்பணியின் நாட்களில் எனக்கு உறுதுணையையும் இறைவல்லமையையும் தந்து வழிநடத்தியவர் ஆண்டவர் இயேசு.  இம்முதிர் வயதிலும் எனக்குப் பெலன் தந்து காத்துக் கொண்டவரும் இறைவனே.  அப்படி இருக்க நான் பெருமைப்பட்டுக் கொள்வது நீதியான செயல் அல்ல. எனவே எவ்வித ஆடம்பர நிகழ்ச்சியும் எனக்கு விருப்பமில்லை” எனத் தெளிவாகக் கூறினார்.

பொன்விழா ஆண்டின் நினைவாக ஒரு துறவகம் சென்றார்.  மூன்று நாட்கள் மெளனத்திலும், ஆலயத்தில் திவ்ய நற்கருணை முன் நன்றி செலுத்துவதிலும் கழித்தார்.  தியானம் செய்து விட்டு பங்கிற்கு வந்து “என் பொன் விழா நிறைவு பெற்று விட்டது” எனக் கூறினார்.  பின் தன் செலவில் ஏழைகளுக்கும், சிறுவர் சிறுமியருக்கும், இல்லாதவர்களுக்கும் நல்ல விருந்து வைத்து புது துணிமணிகள் வாங்கி அவர்களுக்குக் கொடுத்து மகிழ்வுடன் அனுப்பி வைத்தார்.  நல்ல திருப்பலி செய்து மக்கள் அனைவரோடும் சேர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி பொன்விழாவை நிறைவு செய்தார்.

ஆண்டவர் இயேசு இவ்வாறு குறிப்பிடுகிறார், “நீங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் செய்த பின் “நாங்கள் பயனற்ற ஊழியர்கள் செய்ய வேண்டியதைத்தான் செய்தோம்” எனச் சொல்லுங்கள்” என்கிறார் (லூக் 1;1)ல்.

யோவான் (6:1-14) வரை நாம் வாசிக்கும் பொழுது ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் மட்டும் இயேசுவினிடத்தில் அப்போஸ்தலர் பெலவேந்திரர் கொண்டு வருகிறார்.  மக்கள் பெருங்கூட்டமாய் இருக்கிறார்கள்.  இருநூறு வெள்ளிக்காசுக்கு அப்பம் வாங்கினாலும் ஒரு சிறு துண்டு கூட ஒவ்வொருவருக்கும் கிடைக்காதே” என்கிறார் அப்போஸ்தலர் பிலிப்பு.

ஆனால் இயேசுவின் உள்ளம் முழுவதும் மக்கள் மீது கொண்ட பரிவிரக்கத்தினாலும், பரம தந்தையின் மீது கொண்ட நேசத்தினாலும் நிரம்பி வழிகிறது.

இயேசுவின் இதயம் இறைப்புகழ் பாடுகிறது.  இயேசுவின் உதடுகள் நன்றிப் பண் இசைக்க, உள்ளம் இறைவனை நோக்கி எழ ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் பரம தந்தையின் பாதம் சமர்ப்பிக்க அப்பமும் மீனும் பலுக ஆரம்பிக்கின்றன.  அனைவரும் வயிறார உண்கிறார்கள்;  மீதமாயுள்ள உணவு பன்னிரெண்டு கூடைகள் நிறைய இருக்கிறது.

இயேசுவின் உள்ளமும், இதயமும் இரவு முழுவதும் ஜெபத்தினால் நன்றி உணர்வினால் பொங்கி வழிகிறது.  இந்த இதய நன்றியே அற்புதங் களையும் ஆச்சரிய செயல்களுக்கும் அடித்தளமாய் இருக்கிறது.

புனித பவுல் தெசலோனியர்களுக்கு இவ்வாறு எழுதுகிறார்: “எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்.  இடைவிடாது ஜெபியுங்கள்.  என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்” என்கிறார் (1 தெச 5:16, 17).

நம் இதயம் எப்பொழுதும் நன்றி செலுத்தும் உள்ளத்தைக் கொண்டிருக் கட்டும்.  நன்றி உணர்வே நாம் இறைவனுக்குச் செலுத்தும் புகழ்ச்சிப் பலியாகும்.

புனித குழந்தை தெரசாள் தன் துறவு வாழ்வின் கடைசி நாட்களில் “லிசி”யின் கார்மேல் மடத்தில் உள்மடத் துறவிகளாய் இருந்தார்கள்.

இயேசுவின் கரங்களில் இருக்கும் ஒரு சிறு குழந்தைக்கு ஒப்புமையாய் நம்பிக்கையுடன் வாழ்ந்தார்கள்.  இயேசுவின் மீது கொண்டிருந்த அளவு கடந்த அன்பும், ஆன்மீக தாகமும் தம்மையே எவ்வித சிலுவைத் துன்பத்திற்கும் உட்படுத்தும் தியாகமும் அவர்களுக்கு இரத்த அழுத்த நோயினால் துன்பப்பட வைத்தது.

ஒரு நாள் மருத்துவர் அவரைப் பரிசோதிக்க வந்தார்.  அவரிடம் மருத்துவப் பணி செய்தபின் தலைமைச் சகோதரியிடம் “இந்த சிறு வயது துறவி இவ்வளவு கொடுமையான நோயின் வேதனையை எப்படி மிகப் புன்முறுவலோடு தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை” எனக் கூறினார்.

அப்பொழுது ஒரு அருட்சகோதரி படுக்கையில் வேதனையுடன் இருந்த குழந்தை தெரசாளிடம் நீங்கள் இப்பொழுது என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டதற்குப் புனித குழந்தை தெரசாள் இவ்வாறு கூறினார்கள், “நான் இயேசுவின் பிரசன்னத்தில் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.  என் இதயம் அவருக்கு நன்றிப் பண் பாடிக் கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

நாம் இறைப்பிரசன்னத்தில் மகிழ்பவர்களாகவும், இதய உணர்வில் நன்றிப் பண் பாடுபவர்களாகவும் இருப்போம் ஆமென்.

புனித அந்தோணி மரிய கிளாரெட் (1807 - 1870)

ஸ்பெயின் நாட்டவர்.  கிளரிசியன் துறவற சபை நிறுவனர்.  க்யூபாவில் சான்றியாகோ நகரின் பேராயராகப் பணி யாற்றியவர்.  இவரது வாழ்க்கையில் மரியன்னையின் உதவி ஏராளமாக இருந்தது.  குருமாணவராகப் படிக்கும் நாட்களில் ஒரு முறை நீரில் மூழ்கியிருக்க வேண்டியவர், மரியன்னையின்
குறுக்கீட்டால் புதுமையாகக் காப்பாற்றப்பட்டார்.

தனது 28வது வயதில் குருப்பட்டம் பெற்றார்.  ஒரு குருவானவராக ஸ்பெயினில் பணியாற்றிய நாட்களில், மிகப் புகழ்வாய்ந்த திருமறைப்போதகர் என்ற பெயர் பெற்றிருந்தார்.  10 ஆண்டுகள் தனது சொந்த நாட்டில் இத்திருப்பணியாற்றிவரும்போது திவ்ய நற்கருணைப் பக்தியையும், மரியாயின் மாசற்ற இருதய பக்தியையும் பரப்புவதில் நிறைய கவனம் செலுத்தினார்.  எப்போதும் இவரது கையில் ஜெபமாலை இருப்பதைக் காண முடிந்ததாம்.

தனது 42வது வயதில் 5 இளங்குருக்களைச் சேர்த்துக் கொண்டு “கிளரிசியன் ” துறவற சபையை நிறுவினார்.  அப்போது க்யூபா நாட்டில் சாண்டியேகோ மறை மாநிலம் ஆன்மீகத்தில் ரொம்பவும் பாழடைந்த நிலையிலிருந்தது.  அடிமைச் சந்தைக்கு வரம்பில்லாமல் போனது போன்ற கொடிய தீமைகளின் மத்தியில் இவரது துணிச்சலான, கண்டிப்புடன் கூடிய மறைப்போதனைக்கு நிறைய எதிர்ப்புக் கிளம்பியது.  அதைத் துணிவுடன் சமாளித்தார்.

இறுதியில் தாயகத்திற்கு அழைக்கப் பட்டார்.  அங்கிருந்து பாரிஸ் சென்று அங்கு ஸ்பெயினிலிருந்து குடியேறியவர்களுக்குப் போதித்து வந்தார்.  இவர் சுமார் 200க்கும் மேலான நூல்கள் எழுதியுள்ளார்.  அவரது வாழ்நாளெல்லாம் கத்தோலிக்கப் பிரசுரங்களைத் தயாரித்துப் பரப்புவதில் ஏராளமான முயற்சிகள் எடுத்துக் கொண்டார்.  முதல் வத்திக்கான் சங்கத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.  அப்போது திருத்தந்தையின் தவறா வரம் பற்றித் திறமையுடன் எடுத்துரைத்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர்.  இறுதியில் இவர் நாடு கடத்தப்பட்டு ஸ்பெயின் நாட்டின் எல்லைக் கோடியில் 63வது வயதில் காலமானார்.

இவரது திவ்ய நற்கருணைப் பக்தி, மரியாயின் மாசற்ற இருதயத்திற்குரிய பக்தி, ஜெபமாலைப் பக்தி, கத்தோலிக்க பிரசுரங்களைப் பரப்புவதில் இவருக்கிருந்த ஆர்வத்தை நமதாக்கிக் கொள்வோம்.

எட்வர்ட்

“மறைபரப்பு”

விவாதத்திற்கும், சர்ச்சைக்கும் உரிய வார்த்தையாகவே மாறிப்போனது. அக்டோபர் மாதத்தில் மறைபரப்பு விழா கொண்டாடப்படும் நிலையில் அது பற்றிய சிந்தனைகள் சிறப்புக்குரியவை.
சமூக கண்ணோட்டத்தோடு தம் பணிகளை ஒருமுகப்படுத்தியுள்ள திருச்சபை, குறிப்பாக வளரும் நாடுகளில், நற்செய்தி அறிவிப்பை மனிதநேய கண்ணோட்டத்தோடு இணைத்துப் பார்க்கிறது.  நற்செய்தியை நற்செயலாக்கி மதம் மாறுகின்ற நிகழ்வாக அன்றி மனித மனம் மாற்றுகிற நிகழ்வாக நிலைநிறுத்த நினைக்கிறது.  சில சமயங்களில் இச்சிந்தனை சர்ச்சைக்குரியதாகவும் மாறிப் போகிறது.  நற்செய்தி அறிவிப்பால் ‘எத்தனை பேர் மதம் மாறியுள்ளனர்?’ என்ற கேள்வி ஒருபுறம். மதம் மாற்றினால்தான் நற்செய்திப்பணியா ‘மனமாற்றம் ஏற்பட்டால் போதாதா?’ என்ற கேள்வி மறுபுறம்.  இவ்விரு கேள்விகளும் முரண்பாடுகளை, குறிப்பாக இந்திய திருச்சபையில் எழுப்புகின்றது.  இவ்வாறு நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிற கொள்கை வரைவு சார்ந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் மற்றோரின் தவறான கண்ணோட்டமும் நம்மைத் தாக்குகின்றது.
தொடர்வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன்.  அருகில் இருந்த நபர் தன்னை எனக்கு அறிமுகம் செய்து கொண்டே  ஆனால் நான் யார்? என்று கேட்டு தெரிந்து கொள்ளாமலே  பேசிக் கொண்டிருந்தவர் சொன்னார் .  இன்று கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் தமது கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் உள்ளவர்களை மதம் மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
“இதுபோன்று நிறைய நபர்களையோ அனுபவங்களையோ பார்த்து இருக்கின் றீர்களா?” என்றேன்.  “இல்லை ஒரு சிலரைப் பார்த்துள்ளேன்” என்று உதாரணம் காட்டினார்.  தகவலைப் பெற்று சில ஒப்புமைகளைக் கூறி அவருக்கு விளக்கம் தந்தேன்.  ஏற்றுக் கொண்டார்.
கட்டாயத்தால் அல்ல ஒரு சில இறை அனுபவங்களினால் தன் மனம் மாற்றிக் கொண்டவர்களை உதாரணமாக வைத்துக் கொண்டு கிறித்தவர்களே இப்படித்தான் என ஒரு முடிவுக்கு வந்து அம்மதத்தை அதிர்ச்சியாகவும், அபாயகரமாகவும் பார்க்கும் ‘பிறரின்’ கண்ணோட்டங்கள் இன்றைய நற்செய்தி அறிவிப்புக்கு ஒரு சவால்.
                உள்ளும் புறமும் பல்வேறு தாக்கங்களை, தர்க்கங்களைத் தாங்கியுள்ள ‘நற்செய்தி அறிவிப்புப் பணி’ பற்றிக் கூறும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இந்த ஆண்டுக்கான மறைப்பரப்புச் செய்தியில் கூறுவதை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது.
“கடவுள் தம் அன்பு மகன் மூலம் நம்மைத் தம் மகன்களாகவும் மகள்களாகவும் அழைக்கிறார்.  அப்படியயனில் பல்வேறு நிலையில் பிரிந்து வாழும் மனித குலத்தில் வாழும் அனைத்து மக்களும் சகோதர, சகோதரியாக இருக்க வேண்டுமென்பதே அவரின் விருப்பம்”.
மனிதநேய சிந்தனைகளை தவிர்த்த, மனித மாண்புகளை கண்டு கொள்ளாத நற்செய்தி ஒன்று இருக்க முடியாது.  நற்செய்தி அறிவித்துவிட்டு பிறரைத் துன்புறுத்துகின்ற சிந்தனைகள், பிறருக்குப் பணி செய்துவிட்டு தொடர்ந்து அவர்களை இம்சையும் செய்கிற நிலைகள் எல்லாமே முழு நிறைவான இயேசு விரும்புகிற நற்செய்திப் பணி அல்ல.  ‘திருச்சபை நற்செய்தி அறிவிப்புக்காகவே இருக்கின்றது’.   (‘church exists for evangelization’) என்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலின் வார்த்தைகள் வெறும் சடங்கு, சட்டங்களைச் சார்ந்த ஒன்றாக இருக்க முடியாது.  மனித நேயத்தையும் ஒருமைப்பாட்டையும் உலக சமாதானத்தையும் விரும்பி உழைத்த அவரின் வார்த்தைகள், நற்செய்திப் பணியால் திருச்சபை தம்மை மற்ற சமூகங்களிலிருந்து துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. மாறாக இயேசுவின் நற்செய்தியில் உள்ள உண்மைகள், நெறி முறைகள் வழிகாட்டியாக இச்சமூகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும், உலகம் உய்வதற்கான வழியாக மாற்றப்பட வேண்டும்.  இந்த உண்மையை உணர்ந்தால் அதை உரைக்க வேண்டும் என்பதே தெளிவான சிந்தனை.  இந்த அறிவிப்பு ஒரு கடமையாகவும் உள்ளது.  இந்த உண்மையை நீ உணர்ந்தால் அதை உரக்கச்சொல்  வெறும் வார்த்தையாக மட்டுமல்ல  வாழ்வாக.
சே. சகாய ஜாண்

விடை அறியா வினாக்கள்

அந்த இளைஞனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.  சென்ற மாதம் நடந்த அந்த நிகழ்வே இன்னும் மனதைவிட்டு அகலவில்லை.  அதற்குள் அடுத்து நடந்த இந்த நிகழ்வும் அந்த கத்தோலிக்க இளைஞனை மிகவும் கவலையடையச் செய்தது.

மனம் கனத்துப் போய் இருந்ததால் கோவிலுக்குச் சென்றான்.  அங்கே பங்குத் தந்தை “தேவ அழைத்தல்” குறித்தும் அதன் சிறப்பு குறித்தும் தன் பிரசங்கத்தில் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.  அவன் மனம் அதில் லயிக்கவில்லை. . .  அந்த நிகழ்வுகளே அவனுக்கு முன் வந்து நின்றன.

சென்ற மாதம், இவன் வீட்டருகே புதிதாக குடிவந்த ஒரு இந்து சகோதரக் குடும்பத்தில்  B.E. படித்த மாணவன் ஒருவன் விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான்.  திடீரென ஏற்பட்ட அந்த நிகழ்ச்சியால் அவனின் குடும்பமே தடுமாறிப் போய் நின்றது.  அவனைக் காப்பாற்ற அக்குடும்பமே அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. முப்பது கோடி தேவர்களையும் கும்பிட்டு எப்படியாவது தம் மகனைக் காப்பாற்ற கோயில் கோயிலாக வலம் வந்தும் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அம்மருத்துவமனைக்கு வந்த ஒருவர் கவலையும் கண்ணீரும் நிறைந்த அக்குடும்பத்தின்  நிலையைக் கவனித்து விசாரித்திருக்கிறார்.  இவர்களின் துயரமான நிலையைக் கேட்டு அவர்கள் மகனுக்காக செபிக்க அவர்களிடம் உத்தரவு கேட்டார்.  தங்கள் மகன் எப்படியாவது பிழைத்தால் போதும் என்றிருந்த அந்தக் குடும்பம் அதற்கு அனுமதியும் வழங்கியிருக்கிறது.
உடனே அம்மகனின் தலைமாட்டில் முழந்தாள்படியிட்டு அவனுக்காக கண்ணீர் வடித்து உருக்கமாய் இயேசு கிறிஸ்து நாமத்தினால் ஜெபித்திருக்கிறார்.
யாரோ ஒருவர் தங்கள் மகனுக்காக முழந்தாளிட்டு கண்ணீரோடு செபிப்பதைப் பார்த்து அந்தக் குடும்பமே ஆச்சரியப்பட்டு அதேநேரத்தில் அமைதியாய் அதை ஏற்றிருக்கின்றனர்.

அந்த நிகழ்வு அவர்களுக்கு அந்த நேரத்தில் ஆறுதலையும் தேறுதலையும் தந்திருக்கிறது.  அந்த வாரத்தில் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் சிலர் அவருடன் வந்து அம்மகனுக்காக உருக்கமாய் கண்ணீரோடு கர்த்தரிடத்தில் செபித்திருக்கின்றனர்.  அக்குடும்பமும் ஆறுதல் அடைந்தே வந்திருக்கிறது.
ஆனால் நான்காம் நாளில் அம்மகன் இறந்து போய் விட்டான்.  இறந்த மகனை வீட்டிற்குக் கொண்டு வருவதற்குள் கர்த்தரின் பிள்ளைகள் என்று அந்தக் குடும்பத்தினரால் அழைக்கப்பட்ட அவர்கள் அம்மகனின் வீட்டிற்கு வந்து முழந்தாள் படியிட்டு செபித்தனர்.  அம்மகனின் இறுதி சடங்கிற்கான அத்தனை ஏற்பாடுகளையும் அவர்தம் உறவினர்கள் போல் முன்னின்று செய்து கொண்டிருந்தனர்.

தன் வீட்டருகே நடந்த இந்த துயர நிகழ்வுக்கு நம் கத்தோலிக்க இளைஞன் அங்கு சென்றபோது அவர்களின் உளமார்ந்த செயல்பாட்டைக் கவனித்து அதைக் குறித்து விசாரித்தபோதுதான் இதைத் தெரிந்து கொண்டான்.
இதற்கிடையில் அம்மகனை எரிக்க வேண்டாம், புதைக்கலாம் என அவ்வீட்டார் முடிவெடுத்து எங்கு புதைப்பது என விவாதித்துக் கொண்டிருந்தனர்.  ஊருக்குப் புதியவர்களான அந்தக் குடும்பத்திற்குத் தானும் இந்த இக்கட்டில் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த அந்த கத்தோலிக்க இளைஞன் விருட்டென கிளம்பி தன் பங்குத் தந்தையிடம் சென்று விபரம் சொன்னான்.
பாதர்! நீங்க வந்து அந்த மகனை கொஞ்சம் மந்திரியுங்கள் என மன்றாடி, அப்படியே அந்த மகனை புதைப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என ஆலோசனையும்  கேட்டான்.

“தம்பி! இன்னும் அவுங்க முறைப்படி ஞானஸ்நானம் பெறல;  அவங்களை வந்து நான் மந்திரிக்கிறது சரியா இருக்காது;  அதே மாதிரி, கத்தோலிக்கர்களுக்கான நம்ம கல்லறையில் ஞானஸ்நானம் பெறாத ஒருவரைப் புதைக்கவும் வாய்ப்பில்லை” என எடுத்துச் சொல்லி அவனைத் திருப்பி அனுப்பி விட்டார்.

மீண்டும் அந்த துக்க வீட்டிற்கு வந்த பொழுது அம்மகனை அருகிலுள்ள ஒரு CSI திருச்சபைக்குச் சொந்தமான கல்லறையில் புதைக்க அந்த கிறித்தவர்கள் அனுமதி பெற்று ஏற்பாடு செய்திருப்பதாக அறிந்தான்.  இறுதிச் சடங்கு இனிதே முடிந்தது.  அதன் பின்பு நடந்த 16ம் நாளின் போது அந்தக் கிறித்தவர்கள் மீண்டும் அந்த வீட்டாருடன் இணைந்து இறைவனைப் பாடி துதித்தனர்... இன்று வாரந்தோறும் அவர்கள் வீட்டில் செபக் கீதங்கள் இசைக்கப்படுகின்றன.
அதைக் கேட்கும்பொழுதெல்லாம் நம் கத்தோலிக்க இளைஞனுக்கு ஒருவித “சுறுக்” இருக்கவே செய்தது... இந்த நிகழ்வே இன்னும் மனதை விட்டு அகலவில்லை.  அதற்குள் இன்னொரு நிகழ்வு.  இதைக் கேட்டவுடன் அவன் ஆடிப் போய்விட்டான்.

தன் நண்பன் கிறிஸ்டோபரிடமிருந்து வந்திருந்த அந்தப் பார்சலைப் பிரித்தான் அவன்.  உள்ளே இரண்டொரு சி.டி.களும் சில புத்தகங்களும் இருந்தன.  கூடவே ஒரு கடிதமும் எழுதப்பட்டிருந்தது.  அதை வாசிக்க எடுத்தபொழுதே கிறிஸ்டோபர் குடும்பம் குறித்து அவனுக்கு நினைவு வந்தது.
கிறிஸ்டோபர் மிக உன்னதமான ஒரு கத்தோலிக்க குடும்பத்தினன்.  தானும் அவனும் ஆரம்பப் பள்ளியிலிருந்தே ஒன்றாகப் படித்ததினால் கிறிஸ்டோபர் குடும்பத்தை நன்றாக இவனுக்குத் தெரியும்.  கிறிஸ்டோபரின் பெரியப்பா  ஒரு கத்தோலிக்க குருவானவர்.  திருச்சபையில் நிறைய உயர் பதவிகளையயல்லாம் வகித்த மிகச் சிறந்தவர்.  அவனின் சித்தி ஒரு துறவற சபையின் மாநிலத் தலைவி.  இப்படியாக பாதர், சிஸ்டர் நிறைந்த குடும்பம் அவனது குடும்பம்.  ஞாயிறு திருப்பலி காண்பது போன்ற கத்தோலிக்க விசுவாசத்தை அப்படியே கடைப்பிடிக்கும் சிறந்த குடும்பம்.  சென்ற வருடம் அவனது படிப்பின் காரணமாக அவனது குடும்பமே சென்னைக்குச் சென்று குடியேறியது.

சென்னைக்குச் சென்ற பிறகு அவனது அம்மாவிற்கு உடலில் ஒரு பக்கம் செயல் இழந்துபோய் விட்டதாகவும், எத்தனையோ மருத்துவ சிகிச்சை செய்தும் சரிப்படுத்த முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டதாகவும், இறுதியில் கடவுளே கதி என குடும்பமே கலங்கி நின்றிருந்த வேளையில், அருகாமையில் வசித்த ஒரு குடும்பமும் அவர்களுடன் சிலரும் அடிக்கடி அவன் வீடு வந்து அவன் அம்மாவுக்காகத் தொடர்ந்து செபிக்கத் தூண்டி... உருக்கத்துடன் மன்றாடியதால் அவன் அம்மா தற்போது பிழைத்திருப்பதாகவும் எழுதியிருந்தான்.

அப்படி வந்து செபித்த ஒருவரின் சாட்சியமே இந்த சி.டி.  அவரின் வாழ்வே அந்தப் புத்தகம்.  இதனை வாசித்து, சி.டி.ஐ கேட்டுப் பார் என்றும் அந்த கத்தோலிக்க இளைஞனுக்கு எழுதியிருந்தான்.
இதுதான் ஆரம்பம்.  இன்னும் ஓரிரு மாதங்களில் நம் கிறிஸ்டோபர் குடும்பமும் என்னவாகப் போகிறது என்று நம் கத். இளைஞனுக்குப் புரிந்தது.
“தேவை அழைத்தலைப் பற்றி நறுக்குனு நாலு வார்த்தையைச் சொல்லி முடிக்கிறதை விட்டுட்டு வழ வழன்னு போட்டுச் சாகடிக்கிறாரே” கோவிலில் தன் அருகே இருந்தவர் எழுப்பிய சத்தம் கேட்டு நம் கத். இளைஞன் சுய நினைவுக்கு வந்தான்.

ஓ இன்னும் பிரசங்கம் முடியலையா!  தேவ அழைத்தல்தான் ஓடிக்கிட்டு இருக்கா!  மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
திருப்பலி முடிந்ததும் பங்குத் தந்தையை சந்தித்து தன் மனதில் உள்ள ஆதங்கத்தைக் கொட்டி நாம் ஏதாவது செய்யனும் என முடிவு செய்தான்.
இங்கே பாருங்க தம்பி! இதுக்கு நாம என்ன செய்ய முடியும்?  யார் எங்க போனால் என்ன!  இதனால ஒன்றும் நம்ம கத். திருச்சபை அழிஞ்சிடாது.  ஏன்னா, அது இரண்டாயிரம் வரு­மா இதுமாதிரியான சோதனைகளை யயல்லாம் தாண்டித் தான் வந்திருக்கு!  இதுக்கு ஏன் இவ்வளவு ஃபீல் பண்றீங்க...

இன்னொரு விசயம்!  அவுங்க அங்கேயும் போய் ஆண்டவர் இயேசுவைத்தான் கும்புடுறாங்க... கவலையை விடுங்க... யார் எங்க போனாலும் தாய் திருச்சபை நாமதான்.  அதை யாரும் மறுக்க முடியாது...  அதெல்லாம் குட்டித் திருச்சபைகள்...

அதில்ல பாதர்!  தேவ அழைத்தல் பெற்ற இவ்வளவு பேர் முழு நேரமா நம் திருச்சபைக்காகவே பணியாற்றிக்கிட்டு இருக்கிறப்ப இப்படி ஒவ்வொருத்தரா போயிட நாம் விடக் கூடாதுன்னுதான்!

அதுக்கு என்னப்பச் செய்ய முடியும்?  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை.  நம்மகிட்ட இருக்கிற ஸ்கூல், காலேஜ் போன்ற நிறுவனங்களைப் பராமரிக்கவே நமக்கு ஆட்கள் பத்தல.... இப்ப என்னைய எடுத்துக்க.  நான் இங்க பங்குத் தந்தை மட்டு மல்ல, மறைமாவட்டத்துல வட்டார அதிபர்.
மறைமாவட்டத்துல உள்ள நிர்வாகப் பணியைக் கவனிக்கவே எனக்கு நேரம் இல்லை.  இதுல பங்குல யார் எங்க போறாங்க, என்ன பிரச்சனையில் இருக்கிறாங்கன்னு கவனிக்க எங்க நேரமிருக்கு?...  அதனாலதான் தேவ அழைத்தல் பெறுகணும்னு வேண்டிக்க சொல்லி இன்றைய திருப்பலியில் வலியுறுத்தினேன்.  போ! போயி நீயும் நல்லா வேண்டிக்க ... என்று பங்குத் தந்தை விளக்கமளித்தார்.

ஆயிரமாயிரம் கேள்விகள் அடுத்தடுத்து அந்த இளைஞனுக்குள் எழும்பின.  இருப்பினும் அதற்கு மேல் அவற்றை விவாதிக்க அவன் விரும்ப வில்லை.  அவன் மனம் மட்டும் இன்னும் கனமாகவே இருந்தது.


எஸ். எரோணிமுஸ், 
“ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி 

வா மகாத்மா

அவன் தான் மனிதன் தினம் -  கனவைச் சுமந்தவன்
கல்வி அறிவு பெற்றிட்ட மனித சமுதாயத்தில் -  இன
வேற்றுமை ஏனோ என்ற கேள்வியைக் கல்லறைவரை சுமந்தவன்
நம் தேசப் பிதாவாகி நம் நெஞ்சில் நிறைந்தவன்.
ஆழமாய் கற்றிட்ட கல்வியை அறிவில் நிறுத்தி
வெள்ளையனுக்கு அகிம்சையை உணர்த்தி -  மண்ணில்
ஒடுக்கப்பட்டோருக்காய் உரிமைக் குரல் எழுப்பி அரை
நிர்வாணியாய் அகிம்சையைப் போதித்த புத்த பேரொளி.
அனுதினமும் ஆண்டவனை ஆழ தியானித்து
ஆன்மீக வாதியாய் வாழ்ந்து காட்டிய தியாக சீலன்
அண்ணலே காந்தி அண்ணலே உன் அகிம்சைத்
தத்துவம் தேசியக் கொடியில் இருப்பதால் தான்.
உலக நாடுகளில் இந்தியன் தலை நிமிர்ந்து வாழ்கிறான்
ஊழலை ஒழிக்க வழி தேடுகிறான் -  இருந்தாலும்
அண்ணலே காந்தி அண்ணலே ஓட்டைப் பானையில்
நுழைந்த எலியாக சுதந்திரம் இன்று திண்டாடுகிறது -  அன்று.
துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பயப்படாத வெள்ளையனை
கை ராட்டையால் நாட்டைவிட்டே விரட்டிவிட்ட வீரனே
கதர் ஆடையின் மேன்மையைப் பாருக்கு உணர்த்தியவனே
காந்திய பொருளாதாரத்தை உலகமய மாக்கியவனே.
சத்திய சோதனையில் புடம் போட்டு வந்தவனே
சத்தியத்தை ஜீவிதமாய் கொண்டவனே எத்திசையும்
அன்பைப் போதித்தவனே அண்ணலே காந்தி அண்ணலே
மறுபடியும் நீ வந்து இம் மண்ணில் பிறக்கும் நாள் என்னாளோ?

தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி

Tamil Nadu Xavier Mission Home, Nagercoil

“Go into all the world and proclaim the Good News to the whole creation.”  The one who believes and baptized will be saved;  but the one who does not believe will be condemned (Mk 16:15-16).  It is the command of Jesus, to go into all nations and proclaim the ‘good news’ and he assures all the believers of being saved.  But it is unfortunate that vast area of our nation has not been proclaimed the good news of Christ.  Here we are reminded of Mt 9:38 which reads, ‘The harvest is plentiful, but the laborers are few;  therefore ask the Lord of the harvest to send out laborers into his harvest’.  Therefore it is our prime duty not only to pray for vocations, but also have concern for the promotion of vocation.  Until recently foreign missionaries dedicated themselves to come down to India and preached the gospel and baptized our ancestors.  There is a long list of missionaries in Indian Church History;  on the top of this list found St. Francis Xavier and St.John D’Britto.  Today, If we are Christians, it is the fruit of their work.
Holy Father Leo XIII prophesied, ‘Oh! India, your sons will be the messengers of Christ, the Saviour of the world’.  With this in mind Tamil Nadu Xavier Mission Home was instituted by Rev. Fr. John Melard, a missionary from Belgium.  In 1950, Fr. Melard, an enthusiastic, hard working missionary, arrived in India and started his missionary work in the diocese of Kottar.  He observed that there were several students attending vocation camp and only a few of them got selected to the seminary.  Dissatisfied with this system, he thought that all these enthusiastic students who attend selection camp should be given opportunity to be accommodated and the duty of the formator to create an atmosphere wherein they are helped to realize their vocation.
In 1969 there was a national vocation camp organised in Bangalore.  The need was felt that all the Bishops in Tamil Nadu, besides encouraging vocation to Priest hood, for their own dioceses, should also show concern that the students volunteer themselves to become missionaries in the North India.  Inspired by the seminar in 1970 on 10th June, Fr. Melard started Tamil Nadu Xavier Mission Home in Nagercoil, with the support of T.N.B.C.  Initially the students doing their studies from 8th to 12th STDs were admitted.
The students from all over Tamil Nadu had been selected at the respective diocesan level and sent to Tamil Nadu Xavier Mission Home.  There used to be more than 150 students.
At present the students who passed X STD are admitted.  This year we have only 17 students of whom five students are doing their XII STD, and twelve of them are doing their XI STD.  It is unfortunate that the number of students have come down to 17.
There are a few reasons for this unfortunate situation.
1. Earlier the students doing their 8th, 9th, 10th, 11th and 12th STD had been admitted.  Now, only those students doing their higher secondary, namely 11th and 12th STD are accommodated.
2. Students attending the vocation camp organized for the purpose of selection are only from Kottar Diocese, inspite of the fact that a circular has been sent to all the dioceses of Tamil Nadu.  In a very rare case one or two students happen to come and join individually on personal initiative.
3. When those priests, working in the North Indian Dioceses, come home on holidays identify the students who have the aptitude of becoming priest, straight away take them to their respective dioceses in the North.
When the students are recruited directly, they lack their formation that is given in Tamil Nadu Xavier Mission Home, right from their school year.  As they straight away go to the northern dioceses that are geographically far away, they likely feel isolated and lonely at least for a few months.  The percentage of discontinuation from their seminary studies would probably be greater.
During the academic year in Tamil Nadu Xavier Mission Home, the students are given seminary formation apart from the time that they are in the school.  During the weekly holidays, they are given classes, on relevant need, for learning English, Hindi, Music etc., besides regular conferences in the week end.
It would be recommended that the parishes all through Tamil Nadu take special interest to send students who have aptitude in priesthood and inculcate in them the missionary enthusiasm to go to North Indian Dioceses that need priests in greater number.
The priests who come back home on holidays may take interest to guide the students to attend the vocation camp organized in Kottar Diocese in the month of May every year, for the purpose of selecting them for North Indian dioceses, instead of taking them straight away, with them to their own dioceses.
Fr. A. Gaspar, Rector,
Tamil Nadu Xavier Mission Home, Nagercoil

The spirit of being a Missionary

To understand better the need and the spirit of being a Missionary, we need to go back to the document of the Council Vatican II “Ministry and Life of the priests” (Presbyterorum Ordinis)  no 10.  The Fathers of the Council said: the spiritual gift given to (the priests) the day of their priesthood ordination, makes them not only available for a limited ministry, but for a mission which has a universal dimension.  Our priesthood ministry is participation to the universal mission entrusted by Christ to the Church, (universal) mission shared by each diocesan priest.  It is not only the duty of the bishops to care about the Churches in need, but also the duty of the priests  (Presbyterorum Ordinis 10).  “Go out to the whole world” (Mk 16:15).  This order given by Jesus to his disciples before he left to go back to his Father is addressed to all priests and all Christians as well as to the apostles and missionaries.
In his apostolic exhortation, the encyclical letter Redemptoris Missio (the Mission of Christ the Redeemer).  Pope John Paul II spoke in the same sense: “All the priests must have a missionary heart and a missionary mentality, opened to the needs of the Church and opened to the needs of the world . . . They have to be available to be sent by the Holy Spirit and their bishop to preach the Good News outside the borders of their country”. (Redemptoris Missio S67)
As it is mentioned in the documents, it is the ‘Universal Church’ that needs attention along with the local church and communities.  There are many congregations who adopt missionary work in the lands were Jesus is not yet known.  The Congregation of the Holy Spirit in which I am for the past 23 years could be stated as an example here.
Being missionary, the Congregation of the Holy Spirit sends its members to all over the world, especially where the Good News is not yet preached.
In the middle of the 19th century, the Congregation of the Holy Spirit dedicated itself to Africa, the continent where the slaves are taken to be brought to America or to Arabic countries.  At that time, African peoples have not yet heard of Good News of the Gospel.  They were also the poorest among the poor.  Unfortunately, nowadays, most of the countries of Africa remained developing countries, the poorest countries in the world (cf. The Hindu, August 30, 2010 p.11).
Today, we continue to preach the Good News of Jesus in many places all around the world, for instance; in the suburb of big town, or in remote places.  We extended our ministry to the refugees, to the migrants, to the youth in need (street children), to the uneducated poor people, to the people in situation of war or post war, especially in developing countries as well as in Europe.
We believe that our Congregation and her ministry will be highly enriched by more contact with Asia.  We, the foreign missionaries, need to receive from your Church the Spirit sent upon you by God our heavenly Father1.  We need also your help to be more faithful to our missionary charism and more efficient in our ministry.  We need your  help to show that “the responsibility of evangelization is now shared with the “young” Churches, born of yesterdays, mission.  Mission is no longer only the prerogative of Europe or North America to nations in the southern hemisphere; but it originates in all parts of the world, while the traditional Christian’ sending countries are themselves now in need of evangelization” (2000 years of evangelization and 300 years of spiritual mission p.53).
As international Congregation, we need to open this internationality to Asia “to give witness to the universality of the faith, to the inter communion of the local Churches, to our mutual inter action and to our complementarities through the diversity of cultures and the responsibility for evangelization”. (Id p.55).
Even if it is not able to become a full missionary, it is recommended to be an associate to the Congregation.  Because,
- It is the duty of my Congregation to offer to diocesan priests as well as to lay people the joy of missionary life, and the joy to share our missionary ministry, our spirituality and our community life for some years.
- Together, all of us as missionaries, we have to create local churches in the places where we will be sent, to spread the universal message of Christ and of the universal Church, sharing together and with those Christian communities, our own charism, our spirituality and our sensibility.
Along with the evangelization ministry, the Missionaries should also focus on the humanitarian works like
- Taking care of refugees
- Working for migrants
- Educating formal and informal (teaching and training, street children, orphans . . .)2.
- Bringing peace among different religious context.
- Conducting Formal and informal education.
To conclude, let me quote John Paul II saying in his Encyclical letter Redemptoris Mission No 91 :  “Today, you, members of the Young Churches, you are the hope of the Church.  You are young in Faith.  You must be radiant of enthusiasm and courage, dedicating yourself generously to God and to others.”
Fr. Gabriel Myotte Duquet, the author of this article, belongs to the Congregation of the Holy Spirit, a Congregation founded in the beginning of the 18th century (1703) in Paris by a seminarian.  He founded a seminary for poor students who asked him to live in community, a community led by the Holy Spirit and supported by the Providence.
The first condition to join this Seminary and this Community was to be poor, unable to pay the fee in another seminary or in the University, or in the College run by the Jesuits in Paris.  The second condition was to agree, at the end of the formation, to be available for ministry among the poor in remote places or abroad, in the new world, hardly known by European Countries (Canada, United States, Haiti and Africa).
In the 19th century, the Congregation of the Holy Spirit became clearly a missionary Congregation.  At that time, most of its members were sent to Mauritius (1841),  West Africa (1843) and East Africa (1862), in Central Africa (Gabon 1843), Madagascar . . .  Some of them were sent to India:  in Pondicherry,  Our Lady of Angels’ parish was run by them for 10 years (1878-1889), and a parish and a school in Chandernagor for 25 years.  Unfortunately, after this short time of Mission in India, they left to go back to Africa.
Now in this Congregation, there are about 3000 members coming not only from Europe or North America, but also from Africa, South America, and two new members from Philippines.
Coming from different parts of the world, they continue the ministry of first evangelization especially in Africa, also in South America, in Caribbean Ocean, in Asia (Pakistan, Philippines, Taiwan and Vietnam).
1. Cf.1 Cor 12:4-7: There are many different gifts, many different ways of serving, but it is always the same Lord, many different forms of activites, but it is the same Lord who is at work in them all.
Cf.1 P 4. 10: “Each one of you received  a special grace of God so, like good stewards responsible for all these different graces of God, put yourselves at the service of others” (1 P 4. 10).
2. SRL 18.1 we consider the following to be especially important tasks for our time.
-  Youth apostolate, because the present situation of the young people is crying out more than ever for social and educational works.
-  Work with refugees, with immigrants and with these who are on the margins of the society.  
Fr. Gabriel Myotte DUQUET