பீடச்சிறுவர்கள்

  1. ஆண்டவரின் பணிக்கென அழைக்கப்பட்ட சின்னஞ்சிறு அப்போஸ்தலர்கள் இவர்கள்.  நினைவு தெரியும் வயதில் ஆண்டவனின் ஊழியம் செய்ய அழைக்கப்பட்ட சீடர்கள்.
  2. அங்கி அணிந்து கொண்டு ஆண்டவனுக்குப் பணி செய்யும் ஜெப ஊழியக்காரர்கள்.  ஆண்டவன் பணிக்கென அழைக்கப்பட்ட ஆலய தீபங்கள், பீடப் புஷ்பங்கள்.
  3. வளரும் வயதில் குறும்புகளை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டு, பெரிய மனிதர்களாய் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் குட்டி மனிதர்கள்.
  4. பீடச்சிறுவராய் இருப்பதும் முற்பிறப்பின் புண்ணியப் பலனே ஆகும்.  காரணம் ஆயிரம் சிறுவருள் வாய்ப்பு கிடைப்பது ஒரு சில புண்ணியவான்களுக்கே.
  5. பெற்றோர் செய்த புண்ணியமோ உற்றார் உறவினரின் நற்செயலோ வழிநடத்திய குருவின் ஆசீரோ பீடச்சிறுவரின் பேராசீர் பலன்.
  6. அழைக்கப்பட்டோர் அநேகர் ஆலயத்திற்கு வந்து செல்பவர்கள்.  தேர்ந்தெடுக்கப்பட்டோர் ஒரு சிலர்.  அவர்களே பீடச்சிறுவரும் சிறுமியரும்.
  7. சின்னஞ்சிறுவர் இவர்கள் பெரியவர்களுக்கு வழிகாட்டிகளே.  ஆண்டவனின் ஆசீர் பெற்ற அருமையான ஊழியகாரர்கள்.
  8. சிலுவையைச் சுமக்கும் புண்ணியர்கள்.  தீப, தூபம் காட்டும் அருளாளர்கள், நற்கருணைத் துகள்களைத் தட்டுகளில் ஏந்தும் சின்னஞ்சிறு அதிர்ஷ்டசாலிகள்.

வாழிய பீடச்சிறுவர்கள்!
வளர்க அவர்கள் ஊழியம்!!


சகோ. சாந்தி ராபர்ட்ஸ்,
உதகை

0 comments:

Post a Comment