புனித செசிலி

இப்புனிதையின் பெயராலே உரோமையில் 5ஆவது நூற்றாண்டில் ஒரு பேராலயம் எழுப்பப்பட்டது. “புனித செசிலியாவின் திருப்பாடுகள்” என்னும் நூலின் காரணமாக இவரது பேரும் புகழும் நாற்றிசையிலும் விரைவில் பரவத் தொடங்கியது 1500ஆம் ஆண்டு இவரது கல்லறை திறக்கப்பட்டது. அஃது அழியாத நிலையில் இருந்த மாத்திர மின்றி, அப்போதுதான் உயிர் பிரிந்த உடல் போலவும் இருந்தது.
இந்த மகிமையான கன்னிப் பெண் எப்பொழுதும் கிறிஸ்துவின் நற்செய்தி நூலை எங்கும் எடுத்துச் செல்வாள். எப்போதும் கைகளை விரித்து ஜெபம் செய்வாள். உடை இவளது உடலை மூடியிருக்கும். ஆனால் உடைக்குக் கீழே முள் ஒட்டியானத்தால் தன் புலன்களை அடக்கி, இறைவனிடம் கண்ணீர் விட்டு மன்றாடுவாள்.
வாழ்நாளெல்லாம் கன்னிமையில் வாழ்வதற்கு வார்த்தைப்பாடு கொடுத் திருந்தாள். இவளை விரும்பிய வலேரியன் என்ற வாலிபன் இவளை மணந்து கொண்டார். ஆனால் கன்னி செசிலியா தனது ஒரே மணவாளனாம் ஆண்டவருக்கு பண் இசைத்தாள். “வலேரியன்! நான் ஒர் இரகசியம் சொல்கிறேன் கேளுங்கள். கடவுளின் தூதர் என்னை அன்பு செய்கிறார். அவரே எனது உடலைத் துணிச்சலுடன் காத்துக் கொள்கிறார்” என்றாள். “அத்தகைய தூதரை நான் காண முடியுமானால் நானும் உன் வேதத்தில் சேர்ந்து கொள்கிறேன்” என்று வலேரியன் கூற “ஞானஸ் நானம் இன்றி அவரைப் பார்க்க வொண்ணாது” என்றாள். வலேரியன் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள உடன்பட்டார்.
அந்நாட்களில் திருத்தந்தை உர்பன்னிடம் வலேரியனைச் செசிலி யம்மாள் அனுப்பினார். பின்னர் திருத்தந்தை வலேரியனுக்கு ஞானஸ்நானம் அளித்தார்.  செசிலி தனது அறையில் ஜெபத்தில் அழ்ந்திருப் பதையும் அருகில் தேவ தூதர் நிற்பதையும் கண்டு திகிலுற்றார். பிறகு, அவருடைய தம்பி திபூர்சியுசும் மனந்திரும்பினர். அல்மாக்கியஸ் என்ற ஆளுநர் இதைக் கேள்வியுற்றதும் இவர்களைச் சிறைப் படுத்தக் கட்டளையிட்டான். வலேரியனையும் திபூர்சியுஸையும் கொல்லச் சொன்னான்.
பின்னர் செசிலி ஆளுநரிடம் அழைத்து வரப்பட்டபோது, “இயேசுவின் புனித நாமத்தை அறிக்கையிடுவேம். அவரை மறுதளிக்கமாட்டோம்” என்றாள். அவள் சித்திரவதை செய்யப்பட்டாள். உயிர் பிரியவில்லை. கொலையாளி மும்முறை இவள் கழுத்தை வெட்டி இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தான். இக்கொடூரமான நிலையிலும் மூன்று நாட்கள் உயிர் ஊசலாடியது. தனது இல்லம் எப்போதும் ஓர் ஆலயமாக அமையட்டும் என்று தனது இறுதி விருப்பத்தைத் தெரிவித்தாள். இதுவும் நிறைவேறியது. தனது தூய ஆன்மாவை இறைவனிடம் கையளித்தாள். 

0 comments:

Post a Comment