இது பூக்களின் காலம் . . .பயணங்கள் முடிவதில்லை


நீ இருக்கும்
திசைக்கு முகம் காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப்பூ
பூப்பூத்தல் அதன் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்
- கல்யாண்ஜி
சுருட்டு குடித்துக் கொண்டிருந்த
இளைஞனை
ஒரு சைக்கிள் பயணம்தான்
கியூபாவில் புரட்சிக்காரனாக்கியது.
ஆபிரகாம் லிங்கனின்
அஞ்சல் பயணம்தான்
அமெரிக்க சரித்திரத்தில்
ஜனாதிபதியாக்கியது.
கார்ல் மார்க்ஸின்
பட்டினிப் பயணம்
‘மூலதனமானது’
லண்டனில் உள்ள
ஒரு நூலகத்தில்
8 மில்லியன் நூல்கள் உள்ளதைப்
பயணங்கள்தானே பதிவு செய்தன?
பயணம்தான் நம்மைப்
பகுத்தறிவாளியாக்கியது.
கண்ணகியின்
மதுரைப் பயணம்தான்
‘சிலப்பதிகாரமும் மணிமேகலையும்’
ஜோசப் பெஸ்கியின்
இந்தியப் பயணம்தான்
‘தேம்பாவணி’
இங்கிலாந்துக்காரனின் கண்களைக்
கறிக்கச் செய்தது
காந்தியின்
தண்டி யாத்திரைதானே!
பாரெங்கும்
புத்தரின் தாக்கம் ஏற்பட்டதற்கும்
பயணம்தானே காரணமானது!
தன்னை நிலைநிறுத்திக்கொள்ள
பூமிகூட சுற்றிக்கொண்டே
இருக்கிறது
இயற்கை
தொட்டிச் செடியில் இல்லை
தொட்டுவிடும் தூரத்தில்தானிருக்கிறது
பயணங்கள் முடிவதில்லை
கோடையை வசந்தமாக்குங்கள்
பயணங்கள்
உங்களைப் பண்படுத்தலாம். 

- ஜே. தமிழ்ச்செல்வன்

0 comments:

Post a Comment