இதழின் அட்டைப்படத்தைப் பார்த்தவுடன் சிலருக்கு ஆச்சரியம் எழுந்திருக்கலாம். வழக்கமாக ஏப்ரல் அல்லது மே மாதம் கொண்டாடப்படும் இறையழைத்தல் வாரம் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வந்துள்ளதே என்று நினைக்கலாம். இறையழைத்தல் ஊக்குநர்களின் கூட்டத்தில் இந்த நாள் மாற்றத்திற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டன. இக்காரணங் களைக் கருத்தில் ஏற்று தமிழக ஆயர் பேரவையும் இம்மாற்றத்திற்கான ஒப்புதல் அளித்தது.
இதுவரை இறையழைத்தல் ஞாயிறு கொண்டாடப்பட்ட பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு, பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வருகிறது. அக்காலம் பள்ளிகளுக்கு விடுமுறை காலமாக உள்ளது.
பல சமயங்களில் இறையழைத்தல் ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முன்பாகவே இறையழைத்தல் முகாம்கள் (ஏப்ரல் மாதத்தில்) முடிவுற்று விடுகின்றன. இதனால் கொண்டாட்டம் முக்கியத்துவமும் முழுப் பொருளும் இல்லாமல் மாறிவிடுகின்றது.
மே மாதம் என்பதால் நமது பிள்ளைகள் மற்றும் இளையோர் பங்கேற்பு குறைந்தே போகிறது. இக்காரணங்களால் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் இக்கொண்டாட்டம் தகுந்த முறையில் கொண்டாடப்பட்டு பலன் கிடைக்கும் வகையில் அமைய விரும்புகிறோம்.
பங்குகளில், பள்ளிகளில் இந்த இறையழைத்தல் விழாவினைச் சில சிறப்பு நிகழ்வுகள் மூலமாக மக்களோடு, சிறார்களோடு, இளையோரோடு இணைந்து கொண்டாடத் திட்டமிடுவோம்.
இறையழைத்தல் முகாம்களுக்கு முன்பே இறையழைத்தல் பற்றிய சிந்தனைகளை நமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பாக அமைப்போம்.
பள்ளி நாட்களாக (ஜனவரி மாதம்) இருப்பதால் நமது பள்ளிகளிலும் கூட கத்தோலிக்கப் பிள்ளைகளுக்கு இறையழைத்தல் பற்றிய விதையை ஊன்றும் வாய்ப்பாகப் பயன்படுத்துவோம்.
இக்கொண்டாட்டம் “நம் ஆண்டவர் இயேசு ஆலயத்தில் காணிக்கையாக்கப்படும்” நாளுக்கு (பிப்ரவரி 2) முன் உள்ள ஞாயிறன்றும் அதற்கு முந்தைய வாரமும் கொண்டாடப் படுவதனால், இயேசுவின் அர்ப்பணத்தோடு நமது அர்ப்பணமும் இணைந்து புதிய சமூகத்திற்காக உழைக்கும் சிந்தனையைப் பெறுவோம்.
இந்த ஆண்டு (2011) கொண்டாட்டம் ஜனவரி 30ஆம் தேதி வருகின்றது. சிறப்பாகக் கொண்டாட வழிகாட்டும் திருவழிபாடு குறிப்புகள், சுவரொட்டிகள் பங்குகளுக்கும் இறையழைத்தல் ஊக்குநர்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
கவனிக்க : இந்த ஆண்டு (2011) இளையோர் ஆண்டு விழாவை முன்னிட்டு இதே நாளில் (ஜனவரி 30-ல்) மாபெரும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் அதற்கு முக்கியம் தருகிற சமயத்தில் உங்கள் பங்கு மற்றும் பள்ளியில் அதற்கு அடுத்த வாரத்தில்கூட இவ்விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யலாம்.
இறையழைத்தல் சிறப்பான தன்மையிலும் எண்ணிக்கையிலும் உயர்ந்திட அனைவரும் திட்டமிட்டு உழைக்க வேண்டிய காலம் இது. இறையழைத்தலுக்கான எண்ணம் இல்லாமலோ அல்லது தவறான சிந்தனைகளோ உள்ள சூழலில், அழைத்தல் பற்றிய நேர்மறையான எண்ணங்களும் சிந்தனைகளும் பரவலாக்கப்படுவதற்கான முறைகளையும் உருவாக்குவோம். மறைமாவட்ட, துறவற இறை யழைத்தல் ஊக்குநர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுமே பலன் தர எல்லோருமே இணைந்து செயல்படத் தேவையாகிறது. இன்றைய சூழலில் இப்பணி சவால் நிறைந்த பணியே.
சில பரிந்துரைகள் :
பங்குகளில் :
- சிறப்பு வழிபாட்டுக் கொண்டாட்டங்கள், மறையுரைச் சிந்தனைகள்.
- ஞாயிறு மறைக்கல்வியில் ‘இறையழைத்தல்’ பற்றிய சிந்தனைப் பகிர்வு
- அன்றைய அன்பியக் கூட்டங் களிலும் “அழைத்தல்” பற்றிய சிறப்புப் பகிர்வுக்கு வழிவகுத்தல் அழைத்தலை மையப்படுத்திய
- -மாலை நேர கலை நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல்
- -பீடச் சிறார்களை ஊக்கப்படுத்தி சிறப்புக் கூட்டம் நடத்துதல்
பள்ளிகளில் :
- மறைக்கல்வி வகுப்புகளில் “அழைத்தல்” பற்றிய பாடம் / விளக்கம் தரல்.
- கத்தோலிக்க பிள்ளைகளை மட்டும் ஒன்று சேர்த்து சில நிகழ்வுகள், அழைப்புப் பற்றிய ம்Vம், கருத்துரை, நாடகம், நடனம் அமைத்தல்.
- இன்னும் உங்கள் வசதிக்கேற்ப புதிய வழிமுறைகள் வகுத்துச் செயல்பட வாழ்த்துகிறோம்.
0 comments:
Post a Comment