உயர் மறைமாவட்ட பீடப்பணியாளர் இயக்கம்

சென்னை - மயிலை உயர்மறைமாவட்ட இறையழைத்தல் பணிக்குழுவின் ஓர் அங்கம்

பீடச்சிறுவர், சிறுமியரை கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், இறையழைத்தல் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் எம் உயர் மறைமாவட்டத்தில் செயலாக்கம் பெற்று வருகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு.
1. பங்கு அளவில்: ஒவ்வொரு பங்கிலும் பீடப்பணியாளர்களின் பணியும், வாழ்வும் சீராக ஒருங்கிணைக்கப்பட வேண்டு மென்றால், அந்தந்த பங்கு பீடப்பணியாளர் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களின் நிலையும், பணியும், பங்கேற்பும் முறையாக வரிசைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு பங்கிலும், பீடப்பணி யாளர் இயக்கத்தில் சிறுவர், சிறுமியர்க் குள்ளாகவே 1. தலைவர், 2. துணைத் தலைவர், 3. செயலாளர் மற்றும் 4. பொருளாளர் என பங்குத் தந்தையின் கண்காணிப்பிலும், பரிந்துரையின் அடிப்படையிலும், கோயில் காரியங்களில் ஆர்வமுள்ள பீடப்பணியாளர்கள் மேற்கண்ட பொறுப்புகளை வகிக்க தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். பங்கு அளவில் இயங்குகின்ற இந்த பீடப்பணியாளர் இயக்கத்திற்கு, பொறுப்பிலுள்ள பீடச்சிறுவர், சிறுமியரைத் தவிர்த்து, அங்கு களப்பணியாற்றுகின்ற சகோதரரோ, வார இறுதியில் பங்குப் பணிக்காக வருகின்ற இறையியல் சகோதரரோ, பங்கிலுள்ள வேதியரோ அல்லது பங்குப் பணிகளிலும் வழிபாடுகளிலும் ஆர்வமுடன் பங்கேற்கும் பங்கிலுள்ள பெரியவரோ வழிகாட்டியாகச் செயல்படலாம். இயக்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் உடனிருந்து நிறைவேற்ற பங்குத் தந்தை ஆன்ம குருவாக இருப்பார்.
பங்கு அளவில் பீடப்பணியாளர்கள் கூட்டம் நடத்தும் வழிமுறைகள் :

  1. தொடக்க செபம்
  2. வரவேற்புரை
  3. விவிலிய வாசகம்
  4. நற்செய்தியை ஒட்டிய கதை அல்லது குறு நாடகம்
  5. பாடல்
  6. கடந்த கூட்ட அறிக்கை வாசித்தல்
  7. பொருளாளர் அறிக்கை வாசித்தல் மற்றும் சந்தா வசூல் செய்தல் (வாரம் தோறும் 5 ரூபாய்)
  8. வருகைப் பதிவு எடுத்தல்
  9. சொற்பொழிவு (ஆன்ம குரு அல்லது வழிகாட்டி)
  10. கருத்துப் பகிர்வு
  11. பங்குத்தந்தையின் அறிவிப்புகள்
  12. அடுத்த வாரம் செய்ய வேண்டிய வேலையைப் பகிர்ந்து அளித்தல்
  13. பீடப்பணித்தலைவர் உரை
  14. பீடப்பணியாளருக்கான செபம்
  15. பங்குத் தந்தையின் ஆசீர்
  16. இறுதிப் பாடல்

ஒவ்வொரு கூட்டத்திற்குப் பிறகும் பீடப்பணியாளர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். திருப்பலியிலும் பல்வேறு வழிபாடுகளிலும் பயன்படுத்துகின்ற கருவிகளின் பெயர்கள், அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்த பயிற்சிகளும் வழங்கப்படும். ‘பீடப்பணியாளர் ஆன்மீகம் பத்து’ அட்டையை மையப்படுத்தி பகிர்வு நடை பெறும். பங்குத் தந்தையின் ஆர்வத்தைப் பொறுத்து பீடப்பணியாளர்களுக்கு தியானமும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
2. மறைவட்ட அளவில்: மறைவட்ட அளவில் பீடப்பணியாளர்களை ஒருங்கிணைத்து வழிநடத்த இளம் அருட்தந்தை ஒருவரை மறைவட்ட இறையழைத்தல் ஊக்குநர் என்று நியமித்து அந்தந்த மறை வட்டத்தைச் சார்ந்த பங்கிகளிலுள்ள பீடப்பணியாளர்கள் இறையழைத்தலில் வளரச் செய்ய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மறைவட்ட இறையழைத்தல் ஊக்குநர் தத்தம் கிறிஸ்தவ பள்ளிகளை அணுகி, அங்கு பயிலும் மாணவர்களுக்கு இறையழைத்தலைக் குறித்து எடுத்துக் கூறுகிறார். மறைவட்ட அளவில் ஆண்டுக்கொருமுறை ‘பீடப்பணியாளர் பேரணி’ என்ற பெயரில் சிறுவர், சிறுமியரை ஒன்றுதிரட்டி திருச்சபை மற்றும் திருவிவிலியம் சார்ந்த குழுவிளையாட்டுக்களும், சொற்பொழிவு மற்றும் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு பீடப்பணியாளரிடையே இறையழைத்தல் ஆர்வம் வளர்க்கப்படுகிறது.
3. மறைமாவட்ட அளவில்: ஒவ்வோராண்டும் உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறுக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை இறையழைத்தல் ஞாயிறாக எம் உயர் மறைமாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. எம் உயர்மறைமாவட்ட திருத்தொண்டர் களுக்கு குருத்துவ அருட்பொழிவு விழாவும் அன்று நடைபெறுகிறது. ஒரு மாதத்திற்கு முன்னதாகவே உயர்மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளுக்கும், தத்தம் பங்கு களிலிருந்து சிறந்த பீடப்பணியாளரது பெயரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும்படி ஒரு சில விதிமுறைகளடங்கிய விண்ணப்பப் படிவும் அனுப்பப்படும். மேற்சொன்னபடி, குருத்துவ அருட்பொழிவு திருப்பலியின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பீடப்பணியாளர்களுக்குத் தங்கப்பதக்கமும் (முலாம்) சான்றிதழும் பரிசும் வழங்கப்படுகின்றன. அன்று இறையழைத்தல் ஞாயிறாக இருப்பதால், எம் உயர்மறைமாவட்டத்தில் இளநிலை பயிற்சிக் குருமடத்தில் பயிலுவோர் முதல் திருத்தொண்டராக அருட்பொழிவு பெற்ற சகோதரர் வரை அனைவரது புகைப்படமும் திரையயான்றில் அச்சடிக்கப்பட்டு பார்க்கும் வண்ணம் வைக்கப்படுகிறது.
மேலும் உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறைத் தொடர்ந்த அந்த வாரத்தில் மறைமாவட்ட இறையழைத்தல் முகாமும் நடத்தப்படுகிறது. இதனால் முகாமில் பங்கெடுக்கும் அனைவரும் குருத்துவ அருட்பொழிவு விழாவில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்படுகின்றனர். மேலும் மேற்கண்ட நிகழ்வுகளை அவர்களும் பார்த்து இறையழைத்தல் ஆர்வம் பெருகும் சிறந்ததொரு வாய்ப்பு கிடைக்கிறது.
4. பீடப்பணியாளர் தினம்: எம் உயர் மறைமாவட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறை பீடப்பணியாளர் தினம் வெகுவிமரி சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அது மறைவட்ட அளவிலோ அல்லது மறைமாவட்ட அளவிலோ சிறப்பிப்பது அந்தந்த இறையழைத்தல் ஊக்குநரின் விருப்பம். ஒவ்வோராண்டும் மறைவட்ட அளவில் ‘பீடப்பணியாளர் பேரணி’ என்று சிறப்பிக்கப்பட்ட இந்தப் பீடப்பணியாளர் தினம் இவ்வாண்டு சற்று வித்தியாசமாக ‘பீடப்பணியாளர் மாநாடு 2010’ என்ற பெயரில் மிக ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டது. ஆடல், பாடல், குழுவிளையாட்டு, கலக்கப்போவது நானு, மாயாஜாலம் மற்றும் பேரணி ஆகியவை இம்மாநாட்டின் சிறப்பு அம்சங்கள். உயர்மறை மாவட்டத்தின் 70 பங்குகளிலிருந்து பங்கேற்ற 1180 பீடப்பணியாளர்கள் இவ்வினிய நாளுக்கு அழகும், பெருகும் சேர்த்தனர். பீடப்பணியாற்றும் சிறுவர் சிறுமியருக்கு “பீடப்பணியாளர் ஆன்மீகம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வழியாக, பீடப்பணியாளர்கள் நிறைவாழ்வு வாழ்வதற்குப் பத்து ஆன்மீகப் படி நிலைகள் அடங்கிய கைப்பிரதி வெளியிடப் பட்டது.
5. நடமாடும் கண்காட்சி: உயர் மறைமாவட்டத்தின் சில பிரபல துறவற சபைகளிலிருந்து அருட்சகோதரிகள் வந்திருந்து அவர்களது பணி வாழ்வை எண்பித்துக்காட்டும் கண்காட்சியை அமைத்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்ற சிறுவர் சிறுமியரோடு உறவாடி, அவர்களில் இறையழைத்தலை ஊக்கப்படுத்தினர். “புனிதத்தில் ஆனந்தம்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றப்பட்டது. சிறுவர் சிறுமியரில் புனித வாழ்வின் முக்கியத் துவத்தை ஆழப்படுத்த, பீடப்பணியாளரின் பாதுகாவலர் தூய ஜான் பெர்க்மான்ஸ், சிறுமியர் மற்றும் தூயவாழ்வின் வழி காட்டி தூய மரிய கொரற்றி, இளைஞர் மற்றும் குருமாணவர்களின் பாதுகாவலர் தூய கொன்சாகா ஞானப்பிரகாசியார், இளைஞர் மற்றும் பீடப்பணியாளரின் முன்மாதிரி தூய தோமினிக் சாவியோ ஆகியோரின் திருப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கை வரலாறு விளக்கப்பட்டது. பேரணியின் போது பீடப்பணியாளரைக் குறித்துக் காட்ட சிவப்பு மற்றும் வெண்மை நிறங்கள் கொண்ட கொடிகள் அறிமுகப்படுத்தப் பட்டன. நிறைவாக, உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு A. M. சின்னப்பா, துணை ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ், தமிழக இறையழைத்தல் இயக்குநர் அருட்திரு. சகாய ஜான் மற்றும் பல குருக்கள் தோழமையில் ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
6. பீடப்பணியாளருக்கான படிநிலைகள்: பீடப்பணியாளராகப் பணியாற்ற முன்வரவும், இதன் வழியாக ‘இறையழைத்தல்’ என்ற கொடையைப் பெற்றுக்கொள்ளவும் எம் சிறுவர் சிறுமியரை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பங்கிலும் பீடப்பணியாளர் இயக்க அங்கத்தினர்களாக உள்ளவர்கள் கீழ்க்காணும் நான்கு படிநிலைகளின்படி பிரிக்கப்பட்டுள்ளனர்.

  1. படிநிலை 1 : (பயிற்சி பெறுவோர்) புதுநன்மை இன்னும் பெறாத பிள்ளைகள் இந்த முதலாம் படிநிலையில் உள்ளனர். இவர்கள் தொடக்கநிலைப் பயிற்சியில் உள்ளவர்கள். கூர்ந்து கவனித்து, பீடப்பணியாற்றும் முறைகளைக் கற்றுக் கொள்வதே இவர்களின் தலையாயப் பணியாகும். இவர்கள் புதிதாக பீடப்பணியாளராகப் பணி செய்ய முன்வருவதால் தங்களது முதல் அர்ப்பணத்தை இறைவனுக்கு வழங்குகிறார்கள்.
  2. படிநிலை 2 : (மென்துகில் அணிபவர்கள்) புதுநன்மை பெற்று, பீடப்பணிக்குரிய பயிற்சிகளை முறையாக நிறைவுசெய்த பிள்ளைகள் மென்துகில் அணியும் தகுதி பெறுகிறார்கள். இந்த மென்துகில் அணியும் சடங்கினை மறைமாவட்ட ஆயரோ, மறைவட்ட அளவில் நடைபெறும் நிகழ்வாயின் மறைவட்ட முதன்மைக் குருவோ அல்லது அந்தந்த பங்குகளில் ஞாயிறு திருப்பலியின்போது வழங்குவதாக இருப்பின் பங்குத் தந்தையோ இந்த வழிபாட்டைச் சிறப்பிக்கலாம்.
  3. படிநிலை 3 : (நீலக்கயிறு கொண்ட சிலுவையை அணிபவர்கள்) புதுநன்மை பெற்று தக்க பயிற்சியுடன் இரண்டு ஆண்டு பீடப்பணியை நிறைவு செய்தோர் நீலக் கயிறு கொண்ட சிலுவையை அணிகின்றனர்.
  4. படிநிலை 4 : (சிவப்பு கயிறு கொண்ட சிலுவை அணிபவர்கள்) புதுநன்மை பெற்று தக்க பயிற்சியுடன் மூன்றாண்டு மற்றும் அதற்கு மேலாக பீடப் பணியாற்றுவோர் சிவப்புக்கயிறு கொண்ட சிலுவையை அணியும் தகுதி பெறுகின்றனர்.

பீடப்பணியாளருக்கென வடிவமைக்கப்பட்டு,  சென்னை - மயிலை உயர்மறைமாவட்ட பேராயரால் அங்கீகரிக்கப்பட்ட அர்ச்சிப்பு சடங்குமுறைப்படி மேற்சொன்ன் சடங்குகளனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. இந்த நீலம் மற்றும் சிவப்புக் கயிறு பொருந்திய சிலுவைகளை ஞாயிறு திருப்பலியில் பீடப்பணியாளர்கள் அணிந்துகொண்டு பீடப்பணி செய்த பிறகு அந்த சிலுவைகளை மீண்டும் ஆலயத்திலேயே விட்டுச் செல்வர்.
குறிப்பு : இந்த நவீன உலகில் அனைவரும் பொருளீட்டுதல் தொடர்பாக கல்வியிலும், கலை மற்றும் தொழில்நுட்ப அறிவிலும் ஆர்வம் காட்டுவதால் விசுவாசம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடும் ஒத்துழைப்பும் நம் சிறுவர் சிறுவரிடையே வெகுவாகக் குறைந்து வருகிறது. இச்சூழலில் இறையழைத்தலை நம் சிறுவர் சிறுமியரிடையே அதிகப்படுத்த புதுமையான, அனைவரையும் இணைத்து, ஒருங்கிணைத்து ஆக்கப்பூர்வ யுக்திகளை மேற்கொள்ளும்போது நம் தலத் திருச்சபைகளும், இறைமக்களும் நிறைந்த நன்மையடைவர்.

பீடப்பணியாளர்களுக்கான ஆன்மீகம் - பத்து
  1. 1. கிறிஸ்துவ வாழ்வில் : என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் வாழ்வின் வழிகாட்டி யாகவும், நண்பராகவும் ஏற்று என் வாழ்வில் அவரின் மதிப்பீடுகளைப் பிரதிப்பலிப்பேன்.
  2. 2. நற்கருணையின் நிறைவில் : ஒவ்வொரு நாளும் (என்னால் முடிந்தவரை) திருப்பலியில் கலந்து கொண்டு குடும்ப செபத்தை ஊக்குவிப்பேன்.
  3. 3. இறைவார்த்தையின் ஒளியில் : தினந்தோறும் விவிலியம் (புதிய ஏற்பாடு தொடங்கி) வாசித்து, தியானித்து வாழ்வாக்க முயற்சி செய்வேன்.
  4. 4. புனிதர்களின் தோழமையில் : ஆண்டவர் இயேசுவோடு உடன் நடந்த அன்னை மரியாள் மற்றும் என்னைப் போல் வாழ்ந்து, தூய்மையிலும் இறைப்பற்றிலும் மேலோங்கிய புனிதர்களின் பாதையைப் பின்பற்றி வாழ்வேன்.
  5. 5. வழிகாட்டிகளின் துணையில் : என் பெற்றோர், பெரியோர், ஆன்ம வழிகாட்டிகள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் காட்டுகிற நேரிய பாதையில் சீரிய முறையில் நடப்பேன்.
  6. 6. ஒழுக்க நெறியில் : என் உடல் இறைவனின் ஆலயம் என்பதை உணர்ந்து, என் வாக்கினில் உண்மையையும், என் வாழ்வில் நேர்ç கத்தோலிக்கர்களின் விசுவாசம் அவர்களின் தினசரி வாழ்வில் காணக் கூடியதாக இருக்க வேண்டும் என அழைப்பு ழிஉவிடுத்துள்ளார். இலண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் பேராயர் வின்சென்ட் நிக்கோலஸ். விசுவாசத்தின் முதற் கனியாகிய செபத்திற்கு நம் வாழ்வில் அதற்குரிய இடத்தைக் கொடுக்க வேண்டும். திருத்தந்தை தன் திருப் பயணத்தின் போது விண்ணப்பித்தது போல் கத்தோலிக்கர்கள் அனைவரும் தங்கள் பொது வாழ்வில் சாட்சிகளாக விளங்க வேண்டும். துன்ப துயரத்தில் இருப்போருக்கு நம் செபங்களை வழங்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டுமெனவும் பேராயர் கேட்டுக் கொண்டார்.
  7. 7. உழைப்பின் உயர்வில் : தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற கடின முயற்சிகளை மேற்கொண்டு, சிலுவையையும் ஏற்கத் தயங்காத இயேசுவைப் போல், எனது வாழ்வில் கடின உழைப்பை முதலீடாகக் கொண்டு என் படிப்பில் ஆர்வத்தையும், அறிவில் தெய்வீகத்தையும் வளர்த்துக் கொள்ள கடினமாக உழைப்பேன்.
  8. 8. கிறிஸ்துவ அழைப்பில் : நான் பெற்றிருக்கும் கிறிஸ்தவ அழைப்பு சிறப்பாக பீடப்பணியாளராக இருப்பது ஒரு மாபெரும் கொடை என்பதை உணர்ந்து, சவால் நிறைந்த மாணவ சமூகத்தில் கிறிஸ்துவின் சாட்சியாக வாழ்ந்து, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை முன்னிலைப் படுத்துவேன்.
  9. 9. தூய்மையான வாழ்வில் : என் தூய்மையான வாழ்விற்கு இடையூறாக இருக்கும் தேவையற்ற பொழுதுபோக்கில் மனதைச் செலுத்தாமல், நல்ல நண்பர்கள், தரமான புத்தகங்கள், ஆரோக்கியமான உறவுகள் மற்றும் என் தனித்திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவேன்.
  10. 10. பணி வாழ்வில் : எனக்குக் குறிக்கப்பட்ட நாட்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பரிசுத்த நாட்களிலும் தவறாது நேரத்தோடும், ஆன்ம தயாரிப்போடும் பீடப்பணி செய்வேன்.
அருட்பணி. ரெய்மண்ட்
செயலர், இறையழைத்தல் பணிக்குழு, சென்னை

0 comments:

Post a Comment