“பீடப் பூக்கள்”
என்றெல்லாம் பெருமையோடு மென்மையாக அழைக்கப்படுகிற சின்னஞ் சிறியவர்களுக்கென்று இந்த இதழை மேன்மையாக்குவதில் மகிழ்ச்சி.
இன்று குருக்களாக, ஆண் துறவிகளாக பணியாற்றுகிற பலருக்கும் பீடத்தில் பணியாற்றிய அனுபவமே குருவாவதற்குச் சிறந்த தூண்டுதலாக இருந்தது என்பது உண்மையாகலாம். ஒரு காலத்தில் பெண்களுக்குக் கிடைக்காத இந்த அனுபவத்தை இன்று சிறுவர்கள் மட்டுமல்ல, சிறுமிகளும் பெற வேண்டும் என்று திருச்சபையும் விரும்பி இன்று ‘பீடச் சிறுவர்கள்’ என்றில்லாமல் ‘பீடப் பணியாளர்கள்’ என்று பொதுப்பெயரிட்டு எல்லாருமே பீடத்தில் பணி செய்ய வாய்ப்பு தந்துள்ளது. வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களையே இப்பணிக்கென்று அர்ப்பணித்து வருகிற சிறார்களை, இளம் உள்ளங்களைப் பாராட்டுவோம். அவர்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் அவர்களுக்கான இயக்கங் களை (பல்வேறு பெயர்களில்) நடத்தி வரும் பங்குத் தளங்களுக்கு எம் வாழ்த்துக்கள்.
சின்னவர்களைக் கவர்ந்திழுக்கிற பண்பாட்டுக் கலாச்சாரம் நிறைந்தே வருகிறது. தேவைகளோடு ‘தேவையற்ற வற்றையும்’ அறிமுகப்படுத்தி, ஆசை களையும், ஆர்வத்தையும் பல்வேறு கோணங்களில் திசை திருப்பிவிடும் வியாபார கண்ணோக்குகள், தவறிய கலாச்சாரங்கள் பல உள்ளன. பாதிக்கப் படுகிற இளம் உள்ளங்கள் தம்மோடு, தம் பெற்றோரின் மகிழ்ச்சியையும் கவலைக்கு உள்ளாக்குகின்றன. பெற்றோரின் வார்த்தைகளைவிட பல்வேறு சமூக தொடர்பு சாதனங்கள் பரப்பும் பொருளற்ற, மதிப்பற்ற வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்த வையாய் மாறி விடுகின்றன. கடவுள் சிந்தனையில், மதக் கோட்பாட்டுப் பயிற்சிகளில் பல உள்ளங்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும்கூட, விதைக்கப் பட்ட நல் வார்த்தைகளை வளரவிடாமல் தீமைகள் மேற்கொண்டு வருகின்றன. நமது உற்சாகம் தராத வார்த்தைகள், வளர்ச்சிப்படுத்தாத சிந்தனைகள், தவறான எடுத்துக்காட்டுகள், சாட்சிய மற்ற வாழ்வுகூட அவற்றில் அடங்கும்.
இப்பணியில் எந்த முறையில் மேலான சிந்தனைகளையும், மதத்தின் மேல் உள்ள ஆர்வத்தையும் வளர்த் தெடுக்கப்போகிறோம்?
- உங்கள் எண்ணங்களைவிட நமது எண்ணமும் உங்கள் செயல்களை விட, நமது செயல்களும் உயர்ந்தவை என்ற கடவுளின் வார்த்தைகளின் அடிப்படையில், தீமைகளைக் கொணரும் கவர்ச்சிகளை (Attraction)விட நமது வார்த்தைகள், செயல்கள் சிறப்பான வலுவுள்ளதாக மாற்றப்பட வேண்டும்.
- தனித்தனியாக உள்ள சிறியவர் களை ‘அமைப்பாக’ மாற்றும் திட்டம் தேவை. இன்றைய குடும்பங்களில்கூட சிந்தனை, செயல் பகிர்வுக்கான இட மில்லை. பிள்ளைகளின் எண்ணிக்கை (ஒன்று, இரண்டு) குறைந்துள்ள குடும்பச் சூழலில் கூடி விளையாடவோ, அமர்ந்து பேசி சிரிக்கவோ, ஒருவரை மற்றவர் விளையாட்டாகக் கேலி செய்து குறும்புத் தனமான விளையாட்டுச் சண்டையிட்டு அதன்பின் மன்னித்து, மறந்து மீண்டும் கூடி விளையாடும் சிறு பருவ செயல்களுக்கு இடமில்லை. குடும்பங்களில் இணைந்து செபிக்கும் பழக்கமும் நிறையவே குறைந் துள்ளது. எனவேதான் பங்குகளில் அவர் களுக்கென்ற அமைப்புகள் தேவை. பங்கு என்ற “பெரிய குடும்பத்தில்” உள்ள அனைத்து சிறார்களும் ஒருங்கிணைக்கப் படும்போது பகிர, பண்பட, விளையாட, சிந்திக்க, செபிக்க வாய்ப்புண்டு.
- இவ்வியக்கங்கள் ஏனோ தானோ என்றல்ல, மாறாக சிறு உள்ளங்களைக் கவருகிற அதேவேளையில் உயரிய சிந்தனைகளைத் தவறாமல் தருகிற சூழலாகவும் மாற்றப்பட வேண்டும். மேன்மையான சமூக தொடர்பு சாதனங்கள், விளையாட்டுகள் விவிலிய பின்னணியுடன் தரப்பட வேண்டும். கடவுள் சிந்தனை அனுபவமாக மாற்றப் படும் வகையில் யுக்திகள் (Methods) கையாளப்பட்டு கைதேர்ந்தவர்களால், பணியாளர்களால் இயக்கப்பட வேண்டும்.
- வழிகாட்டிகள், இறைப்பணி யாளர்கள் தம் சொல்லையும் செயலையும் சாட்சியாகப் பயன்படுத்துதல் தேவை. மதிப்போடும், கண்டிப்போடும், மாண் போடும், சிறந்த திறனோடும் சிறார்களை வழிநடத்துதல் உன்னதமானது. பயத்திற்கு கட்டுப்படுகின்ற இளைய சமூகம் இன்று அல்ல. தூய அன்பிற்கே கட்டுப்படுகிற மனநிலைகள் இன்றைய சிறாரிடம் உண்டு.
- “சிறுவம்” அறியாப் பருவமல்ல! அதன் சிறப்பே அவர்கள் வாழ்வை நிர்ணயிப்பதால். எதிர்காலத் திருச்சபையும் கிறிஸ்தவ வாழ்வும், துறவறத்திற்கான அழைப்பு நிலையும் சிறு வயது முதலே தரப்பட வேண்டியது என உணர்வோம். பீடச்சிறுவர் களுக்கான இயக்கங்கள் வலுப்பெற முனைப்போடு செயல் படுவோம்!
0 comments:
Post a Comment