இளையோருக்கு திருதந்தை விடுக்கும் செய்தி

கிறிஸ்துவில் நண்பர்களாக வாழ்வதில் இளையோர் தங்கள் மகிழ்வைக் காண வேண்டும்! இளையோரைத் தனது பொது மறை போதகத்தின் இறுதியில் திருத்தந்தை வாழ்த்தினார். கடந்த 5.09.2010 அன்று வெனிசுலாவில் தொடங்கிய மூன்றாவது இலத்தீன் அமெரிக்க இளையோர் மாநாட்டிற்காக சிறப்பு வாழ்த்துக்களை இஸ்பானிய மொழியில் வழங்கிய திருத்தந்தை இளையோர் கிறிஸ்துவைத் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் சந்திக்க இம்மாநாடு பெரிதும் உதவும் என்று தான் நம்புவதாகக் கூறினார். இந்த மாநாட்டின்போது அன்னை மரியா இளையோருக்குத் துணை இருக்கவும், கிறிஸ்துவின் நண்பர்களாக வாழ்வதில் இளையோர் தங்கள் மகிழ்வைக் காணவும் தன் வாழ்த்துக்களைக் கூறினார் திருத்தந்தை.

நற்செய்திப் பணியில் ஈடுபட வேண்டியது இக்காலத்திய இன்றியமையாத தேவை என்று திருத்தந்தை கூறினார். புதிய புதிய கிறிஸ்துவப் பிரிவினைவாதக் குழுக்கள் வேகமாக வளர்ந்து வரும் வேளை, பல கத்தோலிக்கர் திருச்சபை வாழ்விலிருந்து அல்லது திருச்சபையிலிருந்தே விலகி வாழ்வது கவலை அளிப்பதாக உள்ளது. இவை கத்தோலிக்கரின் விசுவாச வாழ்வு பலவீனமானதாகவும், மேலோட்டமானதாகவும் இருப்பதையே உணர்த்துகின்றன என்றார் திருத்தந்தை.

0 comments:

Post a Comment