- 10 இளைஞர்களைத் தாருங்கள் நான் வலிமையுள்ள இந்தியாவாக உருவாக்கிக் காட்டுகிறேன் - சுவாமி விவேகானந்தர்.
- புதிய சமுதாயத்தின் வாசல்களை இளைஞர்களுக்குத் திறந்து விடுங்கள் - திருந்தந்தை 2ம் ஜான் பால்
- நாட்டின் தீட்டிய ஈட்டி முனைகள் இளைஞர்கள்.
- - அறிஞர் அண்ணா
- கனவு காண்போம் - லட்சியத்தோடு இளைஞர்கள் வாழ முடியும் - அப்துல் கலாம்
- இளைஞர்களைத் தாருங்கள் - மற்ற அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் - புனித ஜான் போஸ்கோ
- துறவறத்துக்குச் செல்லும் ஒருவர் நல்லவராக, தாராளமுள்ளவராக, நல் வாழ்வு நடத்த புனிதராக, பணி செய்ய ஆர்வமுள்ளவராக - இறைவனுக்குச் சான்று பகர சாட்சியாக இருக்க வேண்டும்.
- தடைகளைப் படிக்கட்டுக்களாக மாற்றி இளைஞர் முன்னேற முடியும்.
- இளைஞர் பல்வேறு துன்பங்களுக்குப் பிறகு சாதனை கண்டார்கள் : - தாமஸ் ஆல்வா எடிசன் & ஆம்ஸ்ட்ராங்க்
இன்றைய இளைஞர்கள் சவால்கள்:
- 1 + 1 எனக் குழந்தைகள் இருப்பதையும் கடந்து இறைப்பணிக்கு அர்ப்பணிப்பது தான் பெற்றோருக்குச் சவால். குழந்தைகள் அதிகம் இல்லாததால் தேவ அழைத்தல் இல்லை என்பதற்கு காரணம்.
- கல்வித் துறையில் அரசு காட்டும் அதிக வளர்ச்சியில் இறையழைத்தல் குறைகிறது - First Generation - Free Education
- குடும்ப பக்தி - குடும்ப வாழ்வு - முதல் நாற்றாங்கால் குடும்பம்தான். ஆனால் இன்று குடும்ப செபத்துக்கு வாய்ப்பில்லை. இறையழைத்தல் குறைகிறது - பணம் சம்பாதிப்பது முதன்மை நோக்கம் (Possessiveness)
- தொலைத் தொடர்பு சாதனங்களை அதிகமாக, தவறாகப் பயன்படுத்துவதால் ஆற்றல் மிகு இளைஞர் பருவத்தைத் தவறாக பயன்படுத்துதல்.
இளைஞர்களுக்கு இறையழைத்தல் ஊட்ட நாம் செய்ய வேண்டியது என்ன?
- சாட்சியவாழ்வுதான் முக்கியம். இயேசுவின் வழியில் எத்தனையோ புனிதர் வாழ்ந்து சான்று பகர்ந்தனர். புனித சவேரியார், குழந்தை தெரசா, புனித ஆக்னஸ்.
- குடும்பங்களை, கிராமங்களைச் சந்திக்காமல் தேவஅழைத்தல் வர இயலாது. நல்ல குடும்பத்தில்தான் நல்ல இறை அழைத்தல் வர முடியும்.
- சமுதாயத்தில் இன்று எதிர்பார்ப்பு - துறவறத்தார் - குருக்கள் மக்களோடு ஒன்றிணைந்து வாழவும் - அடிக்கடி அவர்களைச் சந்திப்பதும் பேசுவதும் அவசியம்.
- இன்று எத்தனையோ பேர் தேவ அழைத்தல் பற்றி நமது உறவினரிடம் பேசுகிறோம் ?
- நமது உறவினர்களிடையே இறை அழைத்தல் பற்றிப் பேச அச்சப்படக் கூடாது.
- விதைக்க வேண்டியது நமது கடமை. அறுவடை செய்வது ஆண்டவருடைய செயல்.
II. குழு ஆய்வு வினாக்கள் :
1.
- சாதிக்கும் உள்ளம் படைத்த இளையோரைக் கைவிடாமல் உறுதுணையாக இருக்கணும்.
- இளையோர் சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
- நமது சாட்சிய வாழ்வாலும், காலத்திற்கேற்பவும் உருவாக்குதல் தலைமைப் பண்புகளை வளர்த்தல் - லட்சியத்தின் விழுமிய வழியில் வாழ வழிவகுக்க வேண்டும்.
- இளையோரைத் தேர்ந்தெடுக்கும்போது சவாலாக உள்ளவற்றையும் ஏற்க வேண்டும்
- சாதியம், சாட்சிய வாழ்வின்மை போன்றவற்றால் இறையழைத்தல் தடையாக உள்ளது. பெற்றோர் ஒரு, இரு பிள்ளைகளைப் பெறுவதால் இறையழைத்தல் தடையாக உள்ளது.
- சுகபோக வாழ்க்கை வாழ்வது, சாட்சிய வாழ்வில்லாதிருத்தல் இளைஞர்களைத் தெரிந்தெடுக்கத் தடையாக உள்ளது.
- பல்வேறு திறமைகளை ஊக்கப்படுத்தி, பணிகளைப் பகிர்ந்து தரவும், கருத்தரங்கு - முகாம்கள் புதிய முறைகளைக் கையாண்டு இளைஞர்கள் இயேசுவைத் தொடர வழிவகுக்கணும்.
- புதிய யுக்திகளைப் பயன்படுத்தி (ஊடகங்கள்) இளைஞர்களை வழி நடத்தினால் இயேசுவின் பாதையில் செல்ல வைக்கலாம்.
III. இளையோர் பகிர்வு - Fr. எஸ்தாக்யூஸ், Mrs. வி. நிர்மலா, Mr. ரஞ்சித்
- குருக்கள், துறவியரிடமிருந்து இளையோர் எதிர்பார்ப்பது
- இளையோர் ஏன் இறையழைத்தலுக்குக் கவரப்படுவதில்லை?
- இளையோர் எவ்வாறு இறையழைத்தல் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள இயலும்?
அருள்பணி. எஸ்தாகியூஸ் செயலர் இளமை என்பது மகிழ்ச்சியானது. அதைச் சரியாக பயன்படுத்த அறிதல் வேண்டும். இளைஞர்களை எப்படி வழிநடத்த முடியும்...?
- பங்களவில் இளைஞருக்கு அங்கீகாரம் தரல்.
- உதவிகள் - வழி நடத்துதல் – துன்ப வேளையில் உதவுதல் - ஆற்றுப்படுத்துதல்
- பங்கு அளவில் இளைஞர் இயக்கத்துக்கு பங்குத்தந்தை உடன்பட்டிருக்கணும்.
- சாதி ரீதியாக ஒதுக்கப்படாமை
- பங்குப் பேரவையின் உறுப்பினராக (இளைஞர்கள்) அங்கீகரிக்கப்படுதல்
- மனித மாண்பு மதிக்கப்பட வேண்டும்.
- இடைநிலை, கடைநிலை இளைஞர்கள் ஒதுக்கப்படக் கூடாது.
- குருக்கள், துறவறத்தார்கள் Role Model ஆக இருக்க வேண்டும்.
- பெற்றோர்களும் ... தம் பிள்ளைகளுக்கு நல்வழிகாட்ட கிறிஸ்துவ கடைமைகளைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
- இளைஞர்களுக்கு பங்களவில் இளைஞர் இயக்கத்துக்கு கருத்தரங்கு, வேலை வாய்ப்பு வசதி தரல்.
- நாங்கள் உங்களிடம் எங்களை சமமாக நடத்துங்க ... தோழமையில் உடனிருப்பு, அன்பாகயிருங்க என்று கேட்கிறோம்.
- ஆலோசனை தந்து வழிநடத்துவது துறவறத்தாரின் கடமை.
திருமதி நிர்மலா இன்றைய இளைஞர்கள் குருத்துவத்துக்கு, துறவறத்துக்கு ஏன் வர இயலவில்லை?
- எதிர்பார்ப்பது கிடைக்காததால் விலகிச் செல்கிறார்கள்.
- இன்று இளைஞர்கள் அருட்தந்தை, அருட்சகோதரிகளை எப்படிப் பார்க்கிறார்கள்? ஏன்?
- டாக்டரிடம் ரூபாய் தந்தால் மருத்துவம் பார்க்கிறார்கள். என்ஜீனியரிடம் ரூபாய் தந்தால் வீடு கட்டித் தருகிறார்கள்.
- அதேபோல் குருவானவரிடமும் ஏதாவது வேலை செய்தால் மட்டும் உதவி செய்கிறார்கள்.
- Media வழியாக
- தொண்டுக்கும் வேலைக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும்.
- ஈர்ப்புத் தன்மை வேணுமா? அமர்ந்து பேசணும் . . .
- அருட்தந்தையரிடம், துறவிகளிடம் எதிர்பார்ப்பது உங்களுடைய அன்பான வார்த்தைகள் … அணுகுமுறை. . .
- அருட்சகோதரிகள் இளம் பெண்ணை அதிகம் வழிநடத்த உதவி செய்யணும்.
திரு. ஸ்டாலின் இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட ஈடுபாடு இருக்க வேண்டும்.
- பங்கேற்பவர் பங்களிப்பவர் பார்வையாளராக இருக்கக் கூடிய இளைஞர்களை நாம் பங்களவில் ஈடுபடுத்த வேண்டும்.
- குருக்கள், அருட்சகோதரிகள் இல்லை யயன்றால் பொதுமக்கள் நாங்கள் கிறிஸ்துவுக்குள் வாழவே முடியாது.
- இளைஞர்களை நீங்கள்தான் வழிநடத்தணும்.
- நம்மிடம் வரும் ஒரு இளம் பெண்ணை / இளைஞரை எப்படி இயேசுவாக மாற்றப் போகிறோம்?
- ஒற்றுமை ரீதியாக, பண்பாடு ரீதியாக ஒருங்கிணைக்கலாம்.
- மறைக்கல்வியில் இளைஞர்களை அனுபவப் பகிர்வு மூலம் ஒருங்கிணைக்க முடியும்.
- ஒவ்வொரு சபையும் தனது தனி வரத்தால் சமுதாயத்தோடு இணைந்து பணியாற்றும் போது ஈடுபடுத்தி ஒருங்கிணைக்க முடியும்.
- காலத்தை அறிந்து செயல் திட்டத்தோடு செயல்பட இளைஞர்களை ஈடுபடுத்தி பணிகளை செய்விக்க வேண்டும்.
- அதற்கு நாம் ஒவ்வொருவரும் Role Model ஆக வாழணும்.
- நம் தமிழகத்தில் கோடிக்கணக்கில் இளைஞர்கள் உள்ளார்கள். அருட் தந்தையர், அருட்சகோதரிகள் நினைத்தால்தான் இளைஞர்களை உருவாக்க முடியும்.
- இளைஞர்களைப் பங்களிப்பவர்களாக உருவாக்குங்கள்.
- நல்ல உறவும் பகிர்வும் தொலைத் தொடர்பும் கிறித்துவத்துக்குத்தான் உள்ளது. எனவே இளைஞர்களை இதன் வழியாக மேம்படுத்துங்கள்.
தந்தை எஸ்தாகியூஸ்
- இன்றைய இளைஞர்கள் சவாலாக தனது வாழ்க்கையைப் பார்க்கிறார்கள்.
- சவாலை நாம் கூர்மையாக்க வேண்டும்
- பார்வையைப் பொறுத்தவரை விசாலமாக்க வேண்டும். அப்போது இறை அழைத்தலுக்குச் செவிமடுப்பார்கள் இளைஞர்கள். நாம் உலகின் ஒளியாக இருக்க அழைக்கிறார். எனவே மற்ற மதத்தினருக்கும் தீப்பொறியாக அமைய வேண்டும்.
- நாம் தேவனைப் பற்றி பேசும்போது அவருக்கே உள்ள இலட்சியத்தைப் பற்றி பேச வேண்டும்.
- நமது இறையழைத்தல் மிகவும் பயன் உள்ள வகையில் அமைய தமிழக அளவில் சபைகள் புதிய யுக்திகளைச் சிந்திக்க வேண்டும்.
IV. கருத்துரை - அருள்பணி. ஜெரி S.J.
கடவுள் பாதி, மிருகம் பாதி,
கலந்து செய்த, கலவை நான்,
வெளியே மிருகம், உள்ளே கடவுள்,
விளங்க முடியா, கவிதை நான் - கவிஞர் வைரமுத்து
- இறைமையை மனிதத்தை புனிதத்தைத் தூக்கி நிறுத்த அழைப்பு (மனிதத்திற்காக அழைப்பு)
- திருச்சபை துறவற சபைகளைக் கடந்தது. எ.கா. அன்னை தெரசா.
- நாத்திகம் ஆத்திகம் கடந்தது.
- இன்றைய இளையோர் எதிர்பார்ப்பது கூரிய சவால், பரந்த பார்வை.
- இறையாளர் பல்வேறு சபைகள்.
- சாட்சிய வாழ்வு வாழ்வும் வார்த்தையும்
- இறையாட்சி விழுமியங்கள்.
- “முத்திரை” இயக்கம் நிறுவனம்.
- அழைப்பு பல புதிய பணிகள்
- இலட்சிய அறிக்கை
மனத்திற்கு மட்டுமே பயந்து விடுமானத்தை உடலிலே கலந்து விடுஇருக்கின்றவரை வாழ்ந்துவிடுஇரண்டில் ஒன்றைப் பார்த்துவிடு
- signs of Convenience in the modern world (இறையாளர்கள் வசதியின் அடையாளங்கள்) 30%.
- Signs of Compromise (சமரசம் செய்பவர்கள்) 60%
- Signs of Contradiction (வித்தியாசமாக செய்பவர்கள்) 10%
- Justice (Obedient)
- Freedom (Chastity)
- Poverty (Love)
சமுதாயம் என்பது சம ஆதாயம் சம வாழ்வு சம உரிமை சம பங்கேற்பு சம பகிர்வு எங்கே உள்ளதோ அதுவே சமுதாயம்
- Vision Statements in Tamil Nadu and Pondicherry
- Inter Congregation screening and selection
- INCIF : Inter Congregation Initial Formation
- இளைஞர்களை அங்கீகாரம் செய்யுங்கள்.
- உண்மையிலே இளைஞர்களை வழி நடத்தி அவர்களோடு இணைந்து பணி செய்தல் தேவை. இளையோருக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்வுகள் தொடர பயிற்சி தர வேண்டும்.
- இளையோருடன் கலந்துரையாட நேரம் ஒதுக்குதல்
- வழிபாடுகளில் இளையோரை இணைத்து செயல்படல்
- நாம் Role Model ஆக இருக்கணும்
- இளையோரைப் பாராட்ட பயப்படத் தேவையில்லை
- அவர்களிடமே பொறுப்புகளைத் தந்து முடிவுகளையும் எடுக்க வைத்து உற்சாகப்படுத்துதல்.
- நாம் கண்டிப்பாக இளைஞர்களோடு தோழமையுடன் பயணித்தல் வேண்டும்.
- இளைஞர்களுடன் இவர்களது அனுபவம்
- இளைஞர்கள் நம்மை Role Model ஆக இருக்கணும் என எண்ணுகிறார்கள்
- நாம் சொல்வதை செய்ய வேண்டு மென விழைகிறார்கள்
- அவர்களோடு பயணிக்க விரும்புகிறார்கள்
- அவர்களோடு தோழமையாய் இருக்க விரும்புகிறார்கள்
- சவால்களோடு வாழ விரும்புகிறார்கள்
- நமது மனிதநேய பணிகளைப் பகிரும் போது செவிமடுக்கிறார்கள்
- அவர்களோடு பணி செய்யும்போது வழிநடத்தும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்
- இளைஞர்கள் எப்போதும் நம் பிள்ளைகள்
- இளைஞர்கள் இன்று நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் எப்படி வாழ வேண்டும்? என வழிகாட்டுதல்
- அவர்களை நிகழ்காலத்தில் வாழ வைக்கணும்.
- அவர்களை முன்னேற்ற நாம் முயற்சி எடுக்கணும்.
- இளைஞர் தவறு செய்யும்போது மிகவும் கரிசணையுடன் அன்புடன் நல்வழி நடத்த வேண்டும்.
- இளைஞர்களுக்குத் தேவைப்பட்டால் பண உதவிகூட செய்ய முன் வர வேண்டும்.
- அவர்களுடைய சுயமரியாதையை மதிக்கணும்.
- இரக்கத்தின் நண்பர்கள் என ஒரு குழுவாக வைத்து அவர்களையே தலைவர், பொருளர், செயலர் உறுப்பினர்களையும் வைத்து வழிநடத்தினால் இளைஞர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
- நாம் சமுதாயத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக நமது குழுமத்திலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
- இளைஞர்களை நாம் தேடிச் செல்ல வேண்டும்.
- அவர்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
- அவர்களை மகிழ்ச்சியாக வைக்க தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.
- பங்கில் உள்ள மறைக்கல்வி, YCS, பாடகர்குழு, இளைஞர் குழு போன்ற அனைத்து நிலைகளிலும் அவர்களை உற்சாகப்படுத்தி தோழமை கொள்ள வேண்டும்.
- பங்கில் உள்ள அருட்சகோதரிகள் வீடுகளைச் சந்திக்கச் செல்ல வேண்டும். இளைஞர்களைக் கூர்ந்து கவனித்து, நல்ல வழிகாட்டல் தேவை.
- இன்றைய சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதிப்பு அதிகமாக இளைஞர் களிடம் உள்ளது அதைவிட பலமாக நமது முன்மாதிரி வாழ்க்கையிருந்தால் தான் நமது பாதிப்பு அவர்களிடம் ஏற்படும்
- பொறுப்புக்களை அவர்களிடம் தந்து வழி நடத்தணும்
- பங்கிலேயே உள்ள இளைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்தி கலைக்குழு உருவாக்கலாம்
- இளைஞர்கள் இயக்கத்தில் உள்ள பிறந்த நாள் பெயர்களைப் பட்டியல் எடுத்து திருப்பலியில் பாராட்டினால் உற்சாகமுடன் அவர்களை நாம் தேடுகிறோம் என நம்மை அவர்கள் தேடி வருவார்கள்.
I - Integrity
A - Awareness
L - Love
- Generation Gaps
- Gender
- Crisis
- Social Status
- Self Esteem
இளைஞர்கள் எதுவானாலும் உடனே அனுபவித்துப் பார்க்க விரும்புகிறவர்கள். எனவே நாம் வழிநடத்தணும் - Courage, Creativity and Challenge செய்ய அழைத்துவர வேண்டும்.
- ஒரு இளைஞன் நம்மைப் பார்த்து அடுத்த பிறவியில் உங்கள் சகோதரனாக, சகோதரியாக பிறக்கணும் என சொல்லும் அளவுக்கு நமது வாழ்க்கை இருக்க வேண்டும்.
- Digital World-ல் உலவும் இளைஞர் மத்தியில் அதைப் பற்றிய அறிவு நமக்கும் இருக்க வேண்டும்.
- வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து . . .
- இளையோரைத் தேர்ந்தெடுத்து அவர்களை நாமிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து அவர்களோடு உடனிருந்து வாழ்தல் அவசியம்.
- திருவிவிலியம் எப்போது இளைஞரிடம் கொண்டு போகிறோமோ அப்போது தான் இறையழைத்தல் கண்டிப்பாக கிடைக்கும்.
- விவிலியத்தை மையமாக வைத்து இறையழைத்தல் பணி செய்ய அழைக்கப்படுகிறோம்.
0 comments:
Post a Comment