திருச்சிலுவை

விண்ணைப்   படைத்த   ஆண்டவன்  -  புவி
மண்ணைப்   படைத்திட்டான்    மண்ணும்   மகிழ்வுரவே
மண்ணெடுத்து   ஒரு   மனிதனைப்   படைத்தான்  -  பின்
மனிதனின்   எலும்பெடுத்து   ஒரு  பெண்ணைப்  படைத்தான்
இவர்கள்  ஒன்றாய்  வாழ்ந்து  இன்புறவே  -  சிங்கார
வனத்தைப்   படைத்தான்   அதில்   ஓர்   அதிசயக்
கனியைப்   படைத்து   புசிக்க  வேண்டாம்   எனவும்   சொல்லிவிட்டான்
கூடவே   ஒரு  பாம்பையும்   அனுப்பி   சோதித்தும்   விட்டான்
பெரும்   பாவங்கள்   செய்து   கடவுளை   மறந்த   மனிதன்
கடவுள்   மனிதனாக   வந்து   பிறக்க   வேண்டும்   என்று
அறை  கூவல்   விடுத்தான்  -  மனிதக்   குரலுக்கு   மதித்த
கடவுள்   மண்ணில்   மனிதனாய்   வந்து   பிறந்திட்டார்.
மனிதனாய்   பிறந்த   கடவுள்   மண்ணிலே   -  உயர்
மனித   நேயத்தை   அன்பினாலே   விதைத்திட்டார்
கருணைப்   பார்வையால்   இன்   மொழிகளைப்    பேசி
பாவப்   பட்ட   மனிதர்களைப்   புனிதன்   அணைத்துக்   கொண்டார்
பாவச்   சேற்றில்   இருந்த   மனிதன்   வெளிவரவே   புனிதன்
புது  வழிகள்  காட்டி   புரட்சியால்   புதுமைகள்   பல  செய்தார்
கடவுளைப்   பொய்யன்   புளுகன்   புரட்சிக்  காரன்  எனச்  சொல்லி
மனிதன்   கடவுளைச்   சிலுவையில்   கொன்று   சாகடித்தான்   -  சாகடித்த
சாபமான   சிலுவையே   சாப  விமோசனதிருச்   சிலுவையானது  - மனிதனை
அன்புப்   பாதையில்   வழி   நடத்தும்   அகிம்சை   வழியானது
திருச்   சபையின்  திறவு   கோலாய்   திசை   எங்கும்   சென்றது  மண்ணிலே
மனித  நேயத்தை  வளர்த்து  கடவுளுக்கும்  மனிதனுக்கும் பெரும்   பாலமானது
தங்க. ஆரோக்கியதாஸ், ஆவடி

0 comments:

Post a Comment