இரண்டாம் வத்திக்கான் சங்கம் வழியாக திருச்சபைத் தளத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் ஒரு வெளிப்பாடாக 1971 ஆம் ஆண்டு சென்னையில் தமிழக ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழு வானது துவங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இளைஞர் குழுக்கள் பரவலாகத் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டும் வந்தன. இந்நிலையில் 1985ஆம் ஆண்டினை ஐக்கிய நாடுகள் சபையானது இளைஞர் ஆண்டாக அறிவித்தது. திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அவர்கள் இளைஞர்களின் பங்களிப்பும், பங்கேற்பும் திருச்சபைக்கு இன்றியமையாதவை “இளைஞர்களே நீங்கள்தான் திருச்சபையின் நம்பிக்கை” என இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க அகில உலகக் கத்தோலிக்க இளைஞர் ஆண்டு என அறிவித்தார். அதன் விளைவாக ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இளைஞர் குழுக்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே குடையின் கீழ் செயல்பட தமிழக கத்தோலிக்க இளைஞர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை பல தடை களைக் கடந்து, சாதனைகள் பல படைத்து எழுச்சி பெற்ற இயக்கமாக தமிழக வரலாற்றில் தடம்பதித்து வருகிறது.
இளைஞர் ஆண்டு ஏன்?
1985-ஆம் ஆண்டை அகில உலகக் கத்தோலிக்க இளைஞர் ஆண்டாக மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அறிவித்தார். எனவே 2010- ஆம் ஆண்டு அதன் வெள்ளி விழா ஆண்டாக அமைகிறது.
தமிழக ஆயர் பேரவை இளைஞர் ஆண்டாக அறிவிக்க ஒப்புதல் அளித்த நாளிலிருந்து மறைமாவட்டம், மாநிலம் எனப் பல்வேறு நிலைகளில் பொதுநிலையினர், துறவியர், குருக்கள், முன்னாள், இன்னாள் இளைஞர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து திட்டம் தீட்டி, இளைஞரே! விழித்தெழு, ஒளி வீசு என்னும் கருப் பொருளைத் தேர்வு செய்து அதன் வழியாக ஒவ்வொரு மறை மாவட்டத்திலும் ஆண்டுத் திட்டம் உருவாக்கி யுள்ளோம்.
2010 - இளைஞர் ஆண்டின் ஒரு சில சிறப்பு நிகழ்வுகள்
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்.
- 25 மணி நேர நற்கருணை ஆராதனை.
- இளைஞர் தியானம்.
- மாதந்தோறும் இளைஞர் திருப்பலி.
- திருச்சிலுவைப் பாதை (இளைஞர் களுக்காக).
- இளைஞர் ஞாயிறு கொண்டாட்டம்.
- மாபெரும் விவிலிய வினாடி வினாப் போட்டி.
- இளைஞர் வளர்ச்சிக்கான கலந்தாய் வரங்கம்.
- உயர் கல்விக்கு வழிகாட்டும் பயிற்சிகள்.
- மனித உரிமைப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம்.
- வேலைவாய்ப்பு முகாம் மற்றும் கண்காட்சி.
- பெற்றோர் இளைஞர் உறவுச் சங்கமம்.
- இளைஞர் சங்கமம் (மறைவட்டம் மற்றும் மறைமாவட்டம்).
- பங்குகள் சங்கமம் (நகர்ப்புற, கிராம புறப் பங்குகள்).
- விளையாட்டுப் போட்டிகள்.
- மண்ணின் கலைப் போட்டிகள்.
- பல்சுவைப் போட்டிகள்.
- மாற்றுத் திறனுடை இளைஞர் களுக்கான சிறப்பு நிகழ்வுகள்.
- இளம் பெண்களுக்கான சிறப்புப் பயிற்சிகள்.
- மருத்துவமனை மற்றும் சிறைச் சாலை சந்திப்பு.
- ஏழைகளுக்கு கல்வி உதவி செய்தல்.
- முதிர் கன்னிகளுக்கு திருமணம்.
- ஆற்றுப்படுத்தும் நிகழ்வுகள்.
- 1,00,000 மரக்கன்றுகள் நடுதல்.
- 50,000 நபர்கள் இரத்த தானம் செய்தல்.
- மறைமாவட்ட மாநாடு.
- மாநில இளைஞர் விருது.
- 4வது மாநில மாநாடு.
இளைஞர் ஆண்டு துவக்க நிகழ்வு
ஜுன் 20, 2010 மதுரை உயர் மறை மாவட்டத்தில் மேதகு பேராயர் பீட்டர் பெர்ணான்டோ அவர்கள் தலைமையில் இளைஞர் பணிக்குழு ஆயர் தலைவர் மேதகு செளந்தரராஜு ச.ச. முன்னிலையில் மற்றும் ஆயர்கள் வழிகாட்டுதலில் 1000 இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இளைஞர் ஆண்டு கையேடு புத்தகம், விழிப்புணர்வுப் பாடல் தொகுப்பு நூல், ஒலி நாடாக்கள் வெளியிடப்பட உள்ளன.
மாநில மாநாடு
ஜனவரி 29, 30. 2011 சென்னை உயர் மறைமாவட்டத்தில் மேதகு பேராயர் பு.னி. சின்னப்பா ச.ச. அவர்கள் தலைமையில் இளைஞர் பணிக்குழு ஆயர் தலைவர் மேதகு செளந்தரராஜு ச.ச. முன்னிலையில் தமிழக ஆயர் பெருமக்கள், கட்சித் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் தமிழக முழுவதிலிருந்தும் ஏறக் குறைய 1 இலட்சம் இளைஞர்கள் ஒன்று சேர்கிறார்கள்.
இப்படி பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இளைஞர்களின் வளர்ச்சியை மையப்படுத்தி அமைய இருக்கின்றன. இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து தடம் பதிக்க உருவாக்குவோம். அவர்களின் வளர்ச்சியில் வழியாய் திருச்சபையும் சமூகமும் வளரும் என்ற நம்பிக்கை ஏற்போம். இந்த இளைஞர் ஆண்டுக் கொண்டாட்டம் சிறப்புடன் அமைய செபிப்போம். நன்றி!
0 comments:
Post a Comment