இறையழைத்தல் வாரம் (19.04.2010 - 25.04.2010)

இறையழைத்தல் வாரம் (19.04.2010 - 25.04.2010)
“அன்பில் இணைந்து பணியாற்ற”

வழிபாடு தயாரிப்பு - குருமாணவர்கள் (பாண்டிச்சேரி மறைமாவட்டம்) நல்லாயன் குருமடம், கோயம்புத்தூர்
அன்பார்ந்தவர்களே!
பாஸ்கா கால மகிழ்வின் நல்வாழ்த்துக்கள்.
இறையழைத்தல் மேன்மையையும் தேவையையும் உணர்ந்து கொள்ளுமாறு ஒவ்வொரு ஆண்டும் இறையழைத்தல் ஞாயிறு கொண்டாடப்படுவதை அறிவீர்கள். இவ்வாண்டு ஏப்ரல் 25ஆம் நாள் (பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு) இக்கொண்டாட்டம் நிகழ்த்தப்படுகிறது. இக்கொண்டாட்டம் நமது தமிழத்தில் இறையழைத்தல் நாளாக மட்டுமல்ல இறையழைத்தல் வாரமாகக் கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது.எனவே 2010 ஏப்ரல் 19 முதல் 25 (திங்கள் முதல் ஞாயிறு முடிய) வரை உள்ள இறையழைத்தல் வாரத்தைக் கொண்டாடத் தேவையான வழிபாட்டுக் குறிப்புகள், தமிழக இறையழைத்தல் பணிக்குழுத் தலைவர் மற்றும் நம் திருத்தந்தையின் செய்திகள், சுவரொட்டிகள் ஆகியவை உங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவை அனைத்தையும் முற்றிலும் பயன்படுத்தி விழாவை உங்கள் பங்குகளில் சிறப்பிக்க அன்போடு அழைப்புக் கொடுக்கிறேன். இப்பணியில் உங்கள் மறைமாவட்ட இறையழைத்தல் பணிக்குழுவின் செயலருடைய பணியையும் ஆர்வத்தையும் பாராட்டுகிறேன்.
குருக்கள் ஆண்டில் இந்த இறையழைத்தல் சிந்தனை வலுப்பெற வேண்டுமென விழைகிறோம்.“அழைத்தலுக்கு”ச் செவிமடுப்போர் எண்ணிக்கை குறைகிறது என்ற மேலோட்டமான கருத்து நிலவுகிறது.இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இதில் அழைப்புப் பெற்றோரின் சாட்சிய வாழ்வு தேவை என்பதோடு அழைப்புப் பெற்றோர் பிறரை உற்சாகப்படுத்துதல் மிக முக்கியம் என்பதையும் உணர்வோம். மாணாக்கர்,இளையோரின் மனதில் இறையழைத்தலுக்கான சிந்தனையைத் தெளிப்பதும் அழைத்தலுக்கான விருப்பம் உள்ளவர்களை இனம் கண்டு அவர்களை உற்சாகப்படுத்தி வழிகாட்டுவதும் நமது கடமை. இதற்காகவே இவ்விழா அமைந்துள்ளது. பெற்றோர், பெரியோர், இளையோர், சிறியோர் என்று பங்கின் அனைத்துத் தரப்பினரும் இணைந்து சிந்தனை பெறும்போது பணியாளர்கள் அதிகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளது.
எனவே உங்கள் பங்கில் இறையழைத்தல் ஞாயிறு கொண்டாடுங்கள்! வாழ்த்துக்கள்!!
சில குறிப்புகள் :

  1. பீடச் சிறுவர்களை முன்னிலைப்படுத்துதல்.
  2. சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் குழுத் திருப்பலி நடத்துதல்.
  3. கருத்துப் பகிர்வுக்கான வாய்ப்புகளாக பங்கிலேயே கருத்தமர்வுகள் நடத்துதல்.
  4. மறைமாவட்டம், துறவற சபைகள் நடத்துகிற முகாம்களுக்கு மாணாக்கரை அனுப்புதல்.
  5. சிறப்பு வழிபாடுகளுடன் இறையழைத்தல் செபம் செய்தல்.
  6. கலை நிகழ்வுகள், போட்டிகள் இறையழைத்தலை மையமாக வைத்து நடத்துதல்.
  7. இறையழைத்தல் ஞாயிறு சிறப்புக் காணிக்கை எடுத்து மறைமாவட்டத்திற்கு அனுப்பி தமிழக இறையழைத்தல் செயல்பாட்டை உற்சாகப்படுத்துதல்.  
மீண்டும் வாழ்த்துக்கள்.
உங்கள் செயல்பாட்டிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றிகள்!!
அன்புடன்
சே. சகாய ஜாண்
செயலர். தமிழக இறையழைத்தல் பணிக்குழு
தியாக தீபம், திருச்சி
19 ஏப்ரல் 2010 (திங்கள்) தி. பணி 6:8-12; யோவான் 6:22-29

நிலை வாழ்வை வழங்கும் நம் ஆண்டவர் இயேசுவின் கல்வாரிப் பலியில் பங்கெடுக்க வந்துள்ள உங்கள்அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

“கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை” (உரோ 11:29). இறைவனால் அழைக்கப்பட்டு அவரின் அன்புச் சீடராய் வாழும் இறைமக்களே, இந்தவாரம் முழுவதும் இறையழைத்தல் வாரமாக நாம் கொண்டாடுகின்றோம். குருக்களின் ஆண்டைக்கொண்டாடும் இந்த ஆண்டிலே இறையழைத்தல் வாரம் ஒரு சிறப்பான இடத்தைப் பிடிக்கிறது.“அன்பில் இணந்து உம் பணியாற்ற” என்ற தலைப்பிலே ஒவ்வொரு நாளும் நாம் சிந்திக்கஇருக்கின்றோம். இன்றைய இறைவார்த்தையின் வழியாக இறைவன் நம்மோடு பேச விரும்புவதுஇதுதான். என் அன்புக்குரிய பிள்ளைகளே! உங்களுடைய ஆன்மாவானது விண்ணகச் செல்வங்களைஅல்ல, மண்ணகச் செல்வங்களைத் தேடி அலைகின்றது. உடல் ஆசைகளைப் பூர்த்தி செய்வதில்உங்கள் வாழ்வைச் செலவிடுகிறீர்கள். நீங்கள் தேடும் இச்செல்வம் நிலையற்றது. நிலைவாழ்வைக்கொடுக்க இயலாது. மண்ணோடு மண்ணாக மக்கிப் போகக் கூடியது. எனவே அவற்றை விட்டுவிடுங்கள். நிலைவாழ்வைக் கொடுக்கும் இறைவன் நானே. என்னுடைய சதையை உண்டுஎன்னுடைய இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைப் பெறுவர். எனவே அழிந்து போகும் உணவுக்காகஉழைக்க வேண்டாம். நிலைவாழ்வைத் தரும் அழியாத உணவுக்காக உழையுங்கள் என்று ஆண்டவர்இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கூறுகிறார். நம் ஆண்டவர் இயேசு வழங்கிய நிலைவாழ்வை விட்டுவிட்டு அழிந்துபோகும் உணவைத் தேடி அலைந்த நேரங்களுக்காக மனம்வருந்திஇறைவனிடம் மன்னிப்புக் கேட்போம். நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்துநிலைவாழ்வை வழங்கும் நம் ஆண்டவர் இயேசுவிடம் சிறப்பாக குருக்களுக்காகவும், நம்முடையகுடும்பங்களில் இறையழைத்தல் பெருகவும் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

மன்றாட்டுகள்

* நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள் மற்றும் துறவறத்தார் ஆகிய அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களை உம்முடையவிசுவாசத்தில் ஒன்றிக்கச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
* நான் உலகிற்கு ஒளியாக வந்தேன் என்று கூறிய அன்பு இறைவா! இறை அழைத்தல் என்ற ஒளியைஎம் இளைஞர்கள் சரியான புரிதலுடனும் தெரிதலுடனும் அடைய அவர்களுக்குத் தூய ஆவியின்துணையை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 * எம் இறைவா! மாற்றம் என்பது வெளியில் இல்லை மாறாக என்னுள்ளத்தில்தான் உள்ளது என்பதைஉணர்ந்து வாழவும், அந்த மனமாற்றத்தை அடைய பிறருக்கு உதவும் தேவையான அருள்வரங்களையும் பொழிந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

20 ஏப்ரல் 2010 (செவ்வாய்) திபணி 7:51-8:1, யோவான் 6:30-35
இறையேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே!
இன்று நாம் இறையழைத்தல் வாரத்தின் இரண்டாம் நாளைச் சிறப்பிக்கின்றோம். தம் மீட்பின் திட்டத்தைநிறைவேற்ற ஒரு மனிதனையோ அல்லது ஒரு சமூகத்தையோ இறைவன் தேர்ந்தெடுத்து,தன்னுடைய பணியைத் தெளிவுப்படுத்தி, நேரிடையாகவோ, மற்றவர்கள் மூலமாகவோ அல்லதுஉள்ளுணர்வாலோ அழைப்பதே இறையழைத்தல் என்கிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசு“வாழ்வு தரும் உணவு நானே என்னிடம் வருபவருக்குப் பசியே இராது” என்கிறார். இதன் வழியாகஇயேசு நம்மை இறைவாழ்வு வாழ அழைப்பு விடுக்கின்றார். முதல் வாசகத்தில் திருச்சபையின் முதல்மறைசாட்சி தூய ஸ்தேவானைப்பற்றிக் கேட்போம். இறைவனின் மேலான அழைப்பிற்குத் தன்னையேதாழ்த்தி, தன் விசுவாச வாழ்வால் சான்று பகர்ந்து, கல்லான இதயம் கொண்ட மக்களின் மனங்களில்உயிர்த்த இறை இயேசுவின் விசுவாச வித்தை வேரூன்றச் செய்து கல்லெறிபட்டு இறந்தார் அவர்.நாமும் மறைசாட்சி ஸதேவானைப் போல இயேசு தருகின்ற நிறைவாழ்வை நம்முடைய சான்றுபகரும் வாழ்க்கை மூலம் வாழ்ந்து, அன்பில் இணைந்து அவரது பணியை ஆற்ற தேவையானவரத்தைத் தர வேண்டுமென்று தொடர இருக்கும் இத்திருப்பலியில் சிறப்பாக வேண்டுவோம்.


மன்றாட்டுகள்
* வார்த்தையாம் எம் இறைவா! வாழ்வு தரும் இறைவார்த்தையை நாங்கள் எங்கள் உணவாகவும்உயிராகவும் ஏற்று வாழவும், அதைத் தியானித்து வாழ்வதன் மூலம் மற்றவர்களையும் வாழவைக்கவும் வேண்டிய அருளைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

* ஒளியாம் எம் இறைவா! எங்களது வாழ்வு என்னும் பாதையில் நீரே ஒளியாக இருந்துவழிகாட்டவும், அந்த ஒளியிலே நாங்கள் நடந்து எங்கள் வாழ்வில் மற்றவர்களுக்கு வழிகாட்டவும்வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

* அன்பின் இறைவா! நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்றிட நீரே திருத்தூதர்களை ஏற்படுத்தினீர்.இந்த மாறி வருகின்ற உலகக் கலாச்சாரத்தில் உம் நற்செய்தியைத் திறம்பட எடுத்துரைத்துநற்செய்தியைக் கடைப்பிடிக்க ஆற்றலையும் துணையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மைமன்றாடுகிறோம்.
21 ஏப்ரல் 2010 (புதன்) திபணி 8:16-18, யோவான் 6:35-40
தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர்.  என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன் (யோவான் 6:37)
இறையேசு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இறையழைத்தல் வாரத்தைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் இந்த நாள்களிலே தாய் திருச்சபைஇறையழைத்தலின் மேன்மையையும் பெருமையையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர நம்மைஅன்போடு அழைக்கிறது. அளிக்கப்பட்டால் - அருள், வழங்கப்பட்டால் - வரம், கொடுக்கப்பட்டால் -கொடை. கேட்டுப் பெற்றால் அது பிச்சை. இறையழைத்தல் என்பது ஒரு வரம், கொடை. அதைப்பெற்றுக் கொள்ள எந்த மனிதனும் உரிமை பாராட்ட முடியாது. மாறாக ஆண்டவனால் மட்டுமே அதுதீர்மானிக்கப்பட்டு அளிக்கப்படுகிறது. நீதியுள்ள இறைவனின் திருப்பணியை இகமதில் வீரியமுள்ளதாய்செய்ய அற்ப மனிதர்களுக்குத் தகுதி இல்லை என்பது உண்மைதான். ஆயினும் இறைவனின்இரக்கத்தின்மேல் நம்பிக்கை வைத்து அணுகிச் செல்பவர்களைத் தான் புறம்பே தள்ளிவிட மாட்டேன்என இயேசு இன்றைய நற்செய்தியில் வாக்குறுதியளித்து நமக்கு நம்பிக்கையூட்டுகிறார்.
அழைத்தல்கள் எல்லாம் பிழைத்தல்களாகி விடாமல் இன்றைய சூழ்நிலையில், அழைப்பு பெற்றவர்கள்அதன் மேன்மையை காத்து, அனைவரையும் அரவணைத்து வாழவும் அழைப்பு பெறவிருக்கிறவர்களுக்காகவும், நம் பங்கில் இறைஅழைத்தல் பெருகவும் இத்தெய்வீகத் திருப்பலியில் மன்றாடுவோம்.
மன்றாட்டுகள்
* புனிதத்தின் ஊற்றே எம் இறைவா! உம் அழைப்பினை ஏற்று உம் பணியினை ஆற்றிவரும்திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள் மற்றும் துறவறத்தார் அனைவரும் புனிதமானதொருவாழ்க்கையை வாழ்ந்திட தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மைமன்றாடுகின்றோம்.

* அன்பைப் பொழியும் அருள்நாதனே எம் இறைவா! இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள்வாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து இறை விசுவாசத்திலும் பக்தியிலும் வளர்ந்து உம் வழியில்வாழ்ந்திட அவர்களுக்கு உம் அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

* தூய ஆவியினை அருளும் அன்பின் இறைவா! இறைஅழைத்தல் வாரத்தினைக் கொண்டாடும்இந்நாட்களில் இளைஞர், இளம் பெண்களுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் உம் அழைப்பினைஉணர்ந்து உமது பணியை ஆற்றவும் திருச்சபைக்காக உழைக்கவும் முன்வர அவர்களுக்குஅருளையும் ஆர்வத்தையும் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

22 ஏப்ரல் 2010 (வியாழன்திபணி 8:26-40; யோவான் 6:44-51
இறையேசுவின் பிரியமான சகோதர, சகோதரிகளே!
இறைவன் நம் ஒவ்வொருவரையும் தம் உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளார். அவர் நம்மை ஆய்ந்துஅறிந்து இருக்கிறார். அவருடைய அருளின்றி நாம் அவரிடம் செல்ல முடியாது. நவீன உலகில் தன்அறிவைப் பயன்படுத்தி உலகின் ஒரு சில உண்மைகளை கண்டறிந்த மனிதன் உலகின் அனைத்துமறைபொருளையும் கண்டறிந்தது போல் பிதற்றிக்கொண்டு படைத்த இறைவனையே மறுத்துவருகிறான். ஆகவேதான் இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் இறைவன் விரும்பினாலன்றி யாரும்அவரிடம் செல்ல முடியாது என்று எச்சரிக்கின்றன. மேலும் இறைவன் தான் முன்குறித்து வைத்தமீட்புத் திட்டத்தை நிறைவேற்ற, தன் மகனை உலகிற்கு அனுப்ப ஆபிரகாமை அழைத்து, அவருடையவழிமரபினரைத் (யூத இன மக்களை) தயார்படுத்தி வந்தார். காலம் நிறைவேறியதும், இயேசுஉலகிற்கு வந்து, சிலுவைப் பாடுகளை ஏற்று மீட்பை வழங்கினார். அவரை ஏற்றுக்கொண்டதன் மூலம்அந்த மீட்பைப் பெற்றுக் கொண்டோம். அந்த மீட்பின் நற்செய்தியை உலகம் முழுமைக்கும் எடுத்துச்செல்ல கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது என்பதைத் திருச்சபைநமக்கு எடுத்துரைக்கிறது. ஆகவே கடவுளின் அழைப்புக்கு நாம் செவிசாய்க்கும்போது கடவுளே நமக்குஅனைத்தையும் தருவார். அவர் விடுக்கும் அழைப்பை விரும்பி ஏற்க இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
மன்றாட்டுகள்
* என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும்முன்மதியுடனும் வழிநடத்துவார்கள் (எரே 3:15) என மொழிந்த நல்லாயனாம் இறைவா! திருச்சபையைவழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்கள் அனைவரும் தங்களிடம்ஒப்படைக்கப்பட்ட மக்கள் அனைவரையும் உண்மையின் ஒளியாகிய உம்மை நோக்கி வழிநடத்திடதேவையான வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
* அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு ஆகையால் அறுவடைக்குத் தேவையானவேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள் என்ற எம்மவரேஇறைவா! அழைத்தல் என்பது பிழைத்தல் என மாறிவருகிற இச்சூழ்நிலையில் அழைத்தலின் மேன்மைஉணரப்படவும் இறையழைத்தல் அதிகரிக்கப்படவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 * ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! எம் பங்கில் உள்ள அனைத்து மக்களும் திருமுழுக்கு என்னும்அருளடையாளத்தால் பெற்ற பொதுக்குருத்துவத்தில் பணியாற்றுகின்றோம் என்பதை உணர்ந்துவாழவும் உமது உதவியுடன் அவற்றைத் திறம்படச் செய்திடவும் தேவையான அருளைத் தரஇறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
23 ஏப்ரல் 2010 (வெள்ளி) திபணி 9:16-20; யோவான் 6:52-59
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது மோயீசனின் வழி
சண்டைக்காரனோடு சமாதானமாகப் போ என்பது முதுமொழி
பகைவனையும் அன்பு செய் என்பது இயேசுவின் வழி.
தன்னையும் தன் சீடர்களையும் தன்னை விசுவசிப்போர் அனைவரையும் கொன்று குவிக்க கொலைவெறியோடு வேகமாய் வரும் சவுலை ஆண்டவர் தடுத்தாட்கொண்டு சவுலிற்கு “அழைத்தல்”கொடுக்கின்றார். அது சாதாரண அழைத்தல் அல்ல. மாறாக “இறையழைத்தல்”. எதைச் செய்யக்கூடாது என்று சவுல் நினைத்தாரோ அவற்றை அவர் மூலமாக ஆண்டவர் செய்ய வைத்தார்.ஆண்டவரின் மிகச் சிறந்த கருவியாகச் சவுலை உருவாக்கினார். இன்றைய கால கட்டத்தில்இயேசுவின் போதனைகளையும் நல்வாழ்விற்கான நெறிமுறைகளையும் வாழ்ந்து காட்டுவதற்கு நம்ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். நம்மில் எவ்வளவோ பேர் இருக்க, சிறந்த கருவியாக இறைவன்குருக்களை விரும்புகிறார். ஆகவே, நமது பங்கில் இறையழைத்தல் வளரவும், இறைவனுக்குச்செவிசாய்க்கும் மக்களாக நாம் சிறந்து விளங்கவும் இத்திருப்பலியில் உருக்கமாகச் செபிப்போம்.
மன்றாட்டுகள்
* அழைத்தலின் பிறப்பிடமே எம் இறைவா! இதோ அழைக்கப்பட்டவர் களுக்காக மன்றாடுகிறோம்.அழைக்கப்பட்ட அனைவரும் அழைத்தலின் மேன்மையை உணர்ந்து, அதன் வழியில் சிதறிப்போனஉம் மக்களை உம் பதம் சேர்க்க வேண்டிய ஆற்றலை அவர்களுக்குத் தந்தருளுமாறு இறைவாஉம்மை மன்றாடுகிறோம்.
* “நீங்கள் என்னைத் தேர்ந்துக் கொள்ளவில்லை. மாறாக நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்”என்று கூறியவரே! இறைபணிக்கென அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் பல இன்னல்கள்,இடையூறுகளைத் தங்கள் வாழ்வில் சந்திக்கின்றனர். அவர்களுக்கு நீரே ஊக்கமும் ஆக்கமும் தந்துதுணைபுரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 * படைப்பின் சிகரமே எம் இறைவா! எம் நாட்டில் இறையழைத்தல் இன்னும் அதிக அளவில்பெருகவும் அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அனைவரும் தம் அழைத்தலுக்குச் சான்று வாழ்வு வாழதேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

24 ஏப்ரல் 2010 (சனி) திபணி 9:31-42; யோவான் 6:60-69

இறையழைத்தல் வாரம் இறைவன் நமக்குக் கொடுத்த ஒரு வாய்ப்புக் காலமாகும். குருக்கள்ஆண்டினைக் கொண்டாடும் இந்த ஆண்டில் குருக்கள், கன்னியர் மற்றும் துறவறத்தார் அனைவருக்காகவும் சிறப்பான முறையில் செபிக்க இறைவன் தரும் இறையழைத்தல் வாரம்அவருடைய கொடை! “இதோ! உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் . . .இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று கூறி குருத்துவத்தை ஏற்படுத்திய இயேசு தொண்டுசெய்யுங்கள் என்று கூறி குருத்துவத்தை ஏற்படுத்திய இயேசு தொண்டு ஆற்றவே குருக்கள்பணிவிடைப் பெறுவதற்கு அன்று என்று வாழ்ந்து காட்டிய இயேசு இன்று நம் திருச்சபை வழியாகஅர்ப்பண உள்ளம் கொண்டவர்களை அன்போடு இப்பணி வாழ்விற்கு அழைக்கிறார். “அறுவடையோமிகுதி வேலையாட்களோ குறைவு” என்கிற கூற்று உண்மையாகி வருகிற இக்காலகட்டத்தில்இறையழைத்தலுக்காகச் செபிக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தியில் பேதுருகூறும் வார்த்தையான “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிறைவாழ்வு அளிக்கும்வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன” என்பதற்கேற்ப அவருடைய வார்த்தையில் நம்பிக்கைகொண்டு, அன்பில் இணைந்து பணியாற்ற இளைஞர், இளம் பெண்கள் முன்வர குறிப்பாக நம்முடையபங்குத் தளத்தில் இறையழைத்தல் பெருக உருக்கமாக மன்றாடுவோம் இக்கல்வாரிப் பலியில்.

மன்றாட்டுகள்

* “படைப்பு முழுவதும் விடுதலை அடைய நம்பிக்கையோடு காத்திருக்கிறது” (உரோ 8:19-22).அன்பான ஆண்டவரே! இன்றைய உலகம் மீட்புக்காகவும் புதிய உருமாற்றம் பெறவும்வேதனையுற்றுத் தவிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் எம் திருச்சபைத் தலைவர்களை ஆசீர்வதியும்.அவர்கள் உமது மீட்பின் கருவிகள் என்பதை உணர்ந்து தங்களின் அழைத்தல் வாழ்வைப் பிறருக்காகப்பயன்படுத்த ஆற்றலையும் அருளையும் தர உம்மை மன்றாடுகிறோம்.
* “அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே ஆவியார்அனைத்திலும் ஒத்துழைக்கிறார்” (உரோ 9:28). வாழ்வின் ஊற்றே எம் இறைவா! உம்மால் தேர்ந்துகொள்ளப்படுபவர்கள் ஆவியின் வழி நடத்துதலுக்கேற்ப வழிநடந்து உமது பணியைத் திறம்படச்செய்ய அவர்களுக்கு உமது வல்லமையைத் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 * “கிறிஸ்துவைப் பற்றிச் செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு” (உரோ 10:17).அழைப்பின் நாயகனே! இன்று எத்தனையோ பேர் இயேசு என்னும் நற்செய்தியை அறியாமல் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களுக்கு இயேசுவை அறிவிக்கவும், பணி செய்யவும், இறையரசின் வளர்ச்சிக்குஅயராது உழைக்கவும் தேவையான உம் அழைத்தல் எம் பங்கு இளம்பெண்கள் இளைஞர்களுக்குக்கொடுக்க வேண்டுமாய் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


25 ஏப்ரல் 2010 (ஞாயிறு)
திபணி 13:14; 43:52; தி.வெ 7:9, 14-17; யோவான் 10:27-30
முன்னுரை
இறையேசுவில் பிரியமானவர்களே!
முதல் வாசகம் (திப 13:14, 43-52)
ஆண்டவரின் வார்த்தையும்மீட்பும் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களாகிய யூதர்களுக்கு அளிக்கப்பட்டன.ஆனால் அவ்வார்த்தையை ஏற்க மறுத்து மீட்பைப் பெற முன் வராததால், அந்த வார்த்தையானது பிற இனத்தாருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்களும் அவ்வார்த்தையை ஏற்று மீட்பை அடைந்தார்கள். அழைப்பு அனைவருக்கும் உண்டு என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம் (திப 7:9, 14-17)
இவ்வுலக வாழ்வின் போது இறைவார்த்தையை ஏற்று அதன்படி வாழ்ந்து அதனால் உலகின் துன்பங்களுக்ககும் வேதனைகளுக்கும் உள்ளானவர்கள் விண்ணக வாழ்வில் அடையும் பேற்றினையும்,அவர்களின் சிறப்புகளையும் விரித்துரைக்கும் தூய யோவானின் திருவெளிப் பாட்டுக்குச் செவிமடுப்போம்.
நற்செய்தி வாசகம் (யோவான் 10:27-30)
இயேசு கிறிஸ்து ஒரு நல்லாயன். அவரின் குரலுக்குச் செவிசாய்க்கும் ஆடுகள் நிலைவாழ்வை அடையும். அதோடு அந்த ஆடுகளை அவரிட மிருந்தும், தந்தையிடமிருந்தும் யாரும் பறித்துக் கொள்ள இயலாது எனக் கூறும் இன்றைய நற்செய்தி வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
* சிலரைத் திருத்தூதராகவும் சிலரை இறைவாக்கினராகவும் வேறுசிலரை நற்செய்தியாளர்களாகவும்,ஆயர்களாகவும்போதகர்களாகவும் ஏற்படுத்தினார்” (எபே 4:11). ஆற்றல் அளிக்கும் இறைவா!உம்முடைய அரசை இம்மண்ணில் கட்டியயழுப்ப நீர் அழைத்துள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரும் தாங்கள் அழைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்தவர்களாய் அன்பில் இணைந்து உம் பணியாற்ற வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
* நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்கு வாராக” (2 தெச 1:11).வழிநடத்தும் இறைவா! எங்கள் நாட்டை ஆட்சி செய்து வழி நடத்த நாங்கள் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள், மக்களுக்குப் பணி புரிந்திடவே அழைக்கப் பெற்றுள்ளோம் என்பதை உணர்ந்து பணிவிடை புரிகின்ற மனநிலையைப் பெற்றுக்கொள்ள வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
* கடவுளின் அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணி செய்ய கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று” (உரோ 15:16). வழிகாட்டும் இறைவா! இந்த நவீன கால சமுதாயத்தில் மக்களால் ஒதுக்கப்பட்ட ஏழைகள், விதவைகள்அனாதைகள்கைவிடப்பட்டோர் ஆகியோருக்குப் பணி செய்துவரும் அருட்சகோதரிகள்அருட்சகோதரர்கள் அனைவரும் தங்கள் பணியில் மனநிறைவு காணவும்தங்கள் அழைத்தலின் முழுப்பயனை அடையவும் வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
* பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” (தி.ப 13:2). பணி செய்ய அழைக்கும் இறைவா! எங்கள் குடும்பங் களிலிருந்தும், பங்கிலிருந்தும் உம் பணி செய்ய இளம் உள்ளங்கள் முன்வரவும்,அழைக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் தடைக்கல்லாக மாறாமல் அவர்களோடு அன்பில் இணைந்து உம் பணி செய்யவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
* நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை மகன் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத் 28:19). வல்லமை மிக்க இறைவா! இன்னும் கிறிஸ்துவை அறியாதவர்களுக்குக் கிறிஸ்துவை அறிவித்து, மீட்பைப் பெற்றுக் கொள்ள உழைக்கவும்மறைப்பணி தளங்களிலே பணிசெய்து உம் நற்செய்தியை உலகெங்கும் கொண்டு செல்லவும் ஆர்வம் மிக்க உள்ளங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

0 comments:

Post a Comment