அன்புப் பிள்கைளாய்ப் பிறந்தும்
சாதி இன மொழி வேற்றுமையால் வாடும்
சகோதர, சகோதரிகள் நல்வாழ்வு காண
உதவுவதே புரட்சி என்போம்
மூலையில் முடங்கிக் கிடக்கின்ற எண்ணற்ற
மக்கள் இனத்தைத் தட்டி எழுப்பி
எழுச்சி பெற்று ஏற்றங்கள் பல பெற்று
நாளும் மகிழ்வுடன் வாழச் செய்ய
உதவுவதே புரட்சி என்போம்
அல்லும் பகலும் அயராது உழைத்தாலும்
வாழ்வின் அடிப்படைத் தேவைகள் இன்றி
தாழ்வுறும் சமுதாயம் ஏற்றம் பெற
ஆர்வமும் ஆக்கமும் கொண்டு உழைத்து
உதவுவதே புரட்சி என்போம்
நம் நாட்டு மக்கள் வளர்ச்சி இன்றியே
நிலவும் வளர்ச்சியையும் சின்னா பின்னமாக்கி
ஏங்கும் மனிதர்கள் முன்னேற்றம் அடைய
இடைவிடாது செயல்படும் தியாகிகளாக
உதவுவதே புரட்சி என்போம்
ஆதரிப்போம் என்ற அரசியல் தலைவர்களே
ஆன்மீக நலனில் ஈடுபடும் ஆன்மீகவாதிகளே
அறிவியலில் முன்னேறும் செயல் வீரர்களாம் இளைஞர்களே
அறிவில் சிறந்து கைகோக்க விரும்பும் பெரியோர்களே
புரட்சி செய்வீர் நாடு நலம் பெறச் செய்வீர்.
Sr. Theresita
0 comments:
Post a Comment