இறையழைத்தல் ஊக்குநர்கள் கூட்டத்தில் பேசிய கருத்தாளர்களின் தொகுப்பு






திருச்சபையில் குருக்கள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிடம் எதைப் பார்த்தீர்கள்எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்எதைப் பார்க்க விரும்புகிறீர்கள்?
A. எதைப் பார்த்தீர்கள்?
1.            தேவ அழைத்தல் என்றால் என்ன?
உயிரைப் பெற்று அதை அளிக்க அழைக்கப்படுதல்என்பார் திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர்.  நம் நாட்டில் கல்விப்பணி. நற்செய்திப்பணி, சமூகப் பணி, மருத்துவப் பணிகளை அர்ப்பணத்துடன் செய்து வருபவர்கள் அர்ப்பணம் என்ற சொல்லுக்கு இலக்கணமாய் திகழ்பவர்கள்.
2.            செப வாழ்வில், நல்ல மதிப்பீடுகளில் தாங்கள் மட்டும் வராது மற்ற மக்களையும் வர வைத்தவர்கள்.
3.  உதவி செய்வதில் ஏழை எளிய மக்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.  ‘Option for the Poor’ ஏழைகளுக்காய் வாதாடினர்.
4.            சாதி கடந்து மதம் கடந்து மனிதர்கள் ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ அனைத்து சமுதாயப் பேரவை, பல்சமயக் கூட்டமைப்பு, பல்சமய உரையாடல் மன்றங்கள் மூலம் மக்கள் மனித நேயத்துடன் வாழப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
5.            What is the most beautiful thing in this world? 
                The most beautiful thing is to see a person smiling.  And even more beautiful is knowing that you are the reason behind it.
                எங்கள் மகிழ்ச்சிக்கும், எங்கள் உயர்விற்கும், நல்வாழ்விற்கும் காரண மாக இருப்பவர்கள் துறவிகள்.  நீங்கள் ஒளிவிக்கல்லஎங்கள் இல்லத்தின் ஒளியேற்றும் விக்கு.
B. எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
                இன்று கல்விப்பணியிலே, சமூகப் பணியிலே, நற்செய்திப் பணியிலே, மருத்துவப் பணியிலே துறவிகள் அநேகரிடம் அர்ப்பண உணர்வையும், அன்பும் சேவையும் தாண்டி விடுதலை உணர்வையும் பார்க்கின்றேன்.  அதே சமயம் ஒரு சில இடங்களில் துறவியர்களுக்குள் சாதி மற்றும் அதிகாரம் பெறுதல், உடமையாக்குதல் போன்றவைகளால் பிவைப் பார்க்கின்றோம். சட்டம் மனிதனுக்காகமனிதன் சட்டத்திற்காக அன்றுஎன்று கூறுவதும் பிறர் குற்றங்களை மன்னிப்போம் என்பதும் ஒரு சிலரிடம் உதட்டவில்தான்.  உள்த் தவில், செயல் அவில் காணமுடிய வில்லை.
                அருட்தந்தை ஜோ மன்னத் அவர்கள் உயிர் காக்கும் நிலையம்என்று ஒரு கதை சொல்வார்கள்.  கடற்கரையில் வாழும் இளைஞர்கள் ஒன்றுகூடி அவர்களுக்குள் அமைப்பை உருவாக்கி கடற்கரையில் உயிர் காக்கும் நிலையம் ஒன்றைக் கட்டி அதில் முதல் உதவிப் பொருட்களை வைத்தனர்.  நடுக்கடலில் இயற்கைச் சீற்றத்தால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மனிதர்களை அந்தக் குடிசைக்குக் கொண்டு வந்து முதலுதவி செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்றுவதை இலட்சியமாகக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டனர்.  இவர்களால் காப்பாற்றப் பட்ட சில பணக்காரர்கள் உயிர்காக்கும் நிலையக் குடிசையை மாற்றி மாளிகையாக்கினர்.  அங்கே வாய்க்குச் சுவையான உணவு அருந்துவதற்குப் பானங்கள் என்று அங்கே வாழ்க்கைத் தரம் வித்தியாசமானது.  அதிலிருந்து சில இளைஞர்கள் பிரிந்து  மீண்டுமாய் உயிர் காக்கும் நிலையக் குடிசை அமர்த்தினர்.  இவர்களால் பயனடைந் தவர்கள் மீண்டும் குடிசையை மாற்றி மாளிகை கட்டிக் கொடுத்தனர்.  இப்படியாக உயிர் காக்கும் நிலையங்கள் கடற் கரையில் பெருகின.  ஆனால் கடலில் தத்தளிக்கும் உயிர்கள் ஒன்றும் காப்பாற்றப்படவில்லை.
                                “விளைந்த பலனை அறுப்பாரில்லை
                                விளைவின் நற்பலன் வாடிடுதே
                                அறுவடை மிகுதி ஆனால் வேலையாள் இல்லை
                                அந்தோ மனிதர் அழிகின்றாரே
C. எதைப் பார்க்க விரும்புகிறீர்கள்?
1.            இன்றைய நம் துறவற சபை நம் முன்னோர்களின் தியாகத்தால் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  இன்று உங்கள் தியாகம் முன்னெடுக்கப்படவில்லையயன்றால் எதிர்காலத்தில் வரும் தலைமுறை வாழாது.
2.            நாமே நற்செய்தி.  நாம்தான் பிறருக்காக உடைக்கப்படும் அப்பம்.  நீங்கள் நல்ல மதிப்பீடுகளில் வாழ்ந்து அதைப் பிறரோடு பகிரவேண்டும்.
3.            மதங்களுக்குள்ளே அர்த்தமுள் உரையாடல் தேவை.  ஏனெனில் உரையாடல் தான் சமூக மாற்றத்திற்கான கருவி.  மதங் களுக்குள்¼ அமைதியை உருவாக்கிட, இறுக்கங்களை நீக்கிட, நல்ல புரிதலை ஏற்படுத்த பல்சமய உரையாடல் அவசியமாகிறது.  இத்தகைய பயிற்சிகளைப் பொதுநிலையினருக்கு வழங்குதல் நலம்.
4.            நாம் பார்வையாராக இருக்கக் கூடாது.  மக்களின், சமூகத்தின் பிரச்சனைகளில் பங்கேற்பாராக இருக்க வேண்டும். 
                அழகிய கடற்கரையில் சிறுவன் ஓடி ஓடி அங்கு அலைகளினால் அடிக்கப்பட்டு கரையில் ஒதுங்கிக் கிடந்த நட்சத்திர மீன்களைத் தன் பிஞ்சுக்கரத்தால் மண்ணோடு சேர்த்து எடுத்து அதைக் கடல் நீரில் விட்டுக் கொண்டிருந்தான்.  வழியே வந்த பெரியவர் சிறுவனிடம், “இக்கடற்கரையின் நீம் தெரியுமா? எத்தனை நட்சத்திர மீன்கள் இவ்வாறு கரையில் இருக்கும்எல்லாவற்றையும் உன்னால் காப்பாற்ற முடியுமா?”  என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.  அவன் இறுதியாக ஒரே ஒரு பதில் சொன்னான்.  என்னால் எத்தனை நட்சத்திர மீன்களைக் காப்பாற்ற முடியுமோ அவ்வவு மீன்களை நான் காப்பாற்றுவேன்என்றான்.
What is religion?  காந்தியடிகளின் பேரன் சொல்வார்
“The essence of every religion is that God and we participate together in building up of humanity”                                                                                                                               -  Raj Mohan Gandhi
 தொகுப்பு - திரு. ஞான ஜெயமணிவிக்கிரமசிங்கபுரம்

0 comments:

Post a Comment