ஆன்மீகம்

எனக்கு மிகவும் பிரியமான குருவானவர் சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் “ஆர்ஸ்” கிராமம் போய் விட்டு வந்தார். குருவானவர் களுக்கு கடந்த செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரை நடந்த தியானத்தில் பங்கு பெற்று விட்டு அவரின் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
புனித ஜான் மரிய வியான்னி (1786-1859) பங்குத் தந்தையாகஆர்ஸ் கிராமத்தைப் பொறுப்பேற்றபொழுது உலகியல் சம்பந்தமானது எதுவும் இல்லை. குறைந்த உணவு, சிறிய பெட்டியில் உடைகள். “அறிவற்றவர்” என்று சக குருவானவர்களாலேயே மதிப்பிடப்பட்டவர், வேண்டா நிலையிளல் குருப்பட்டம் கொடுக்கப் பட்ட அவரைத் துச்சமென நினைத்து எவ்வித இறை உணர்வும் இல்லா ஆர்ஸ் கிராமத்திற்கு அனுப்பு கிறார்கள்
அவர் தம் இறைப் பணிக்கு நம்பி இருந்தது அவரின் இறை நம்பிக்கை மட்டுமே. “ஆண்டவர் இயேசு கைவிடாத இறைவன்” என விசுவசித்தார். அவரிடம் இறைப் பற்றுடன் இணைந்த ஜெப தாகம் இருந்தது. மக்களின் ஆன்ம நலனில் அக்கறை இருந்தது. அன்னை மரியாள் மீது மிகுந்த பாச உணர்வும் இருந்தது. 24 மணி நேரமும் மக்களின் நலன்களுக்காய் அர்ப்பணமாக்கும் தியாக உணர்வு இருந்தது. “நாம் செய்வதைச் செய்வோம் எஞ்சியதை இறைவன் செய்வார்” என்ற விசுவாச உறுதி அவரிடம் இருந்தது.
இத்தகைய உணர்வுகள்தான் 41 ஆண்டுகள் அதே ஊரில் தொடர்ந்து பணியாற்றவும் எண்ணற்ற மக்களின் ஆன்மீகத் தந்தையாக மாறவும் புனிதராய் வாழவும் செய்திருப்பதை உணர்ந்தேன் என்றார். வேதாகமத்தில் “விசுவாசத் தினாலேயே ஆபிரகாம் தாம் பரிசோதிக்கப்பட்ட பொழுது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தார். ஏனெனில் கடவுள் இறந்தோரையும் எழுப்ப வல்லவர் என்பதை மனதில் கொண்டிருந்தார்” என நாம் வாசிக்கிறோம் (எபி 11:17‡19)
ஆண்டவர் இயேசு இறைவன் நீடிய கருணையும், இரக்கமும், திக்கற்றவர்களுக்கு ஆறுதலும், எளிய வர்கள் மீது பரிவும் கொண்டவர் என்பதை உவமானத்தில் விளக்கு கிறார். மத் 20:1‡16வரை வாசிக்கும் பொழுது திராட்சைத் தோட்ட உரிமையாளர் தன் தோட்டத்திற்கு கூலி ஆட்களைத் தேர்ந்து அனுப்பும் சம்பவத்தைக் காண்கிறோம்.
அதிகாலையில் அமர்த்தப்பட்ட வர்களுக்கும், காலை 9.00 மணிக்குப் பணிக்குச் சென்றவர்களுக்கும், அதுபோலவே நண்பகல் 12 மணிக்கும் மாலை 3 மணிக்கும் ஆட்களைத் தேர்வு செய்து அனுப்புகிறார். கடைசியில் மாலை 5 மணிக்கும் வேலை கிடைக்காமல் வீணே இருந்த வர்களையும் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்பி எல்லோ ருக்கும் கூலி கொடுக்கிறார்.
மாலை 5 மணி வரைக்கும் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் யார்? வயதானவர்கள், உடல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பலமிழந்து நின்றவர்கள், ஊனர்கள், குருடர்கள். இவர்களை யாரும் வேலைக்குக் கூப்பிடவில்லை. ஆனால் வேலை கிடைத்தால் கொஞ்சம் வயிற்றுக்காவது உணவு கிடைக்குமே என ஏங்கியவர்கள்.
மற்றவர்களால் உபயோகமற்ற வர்கள் எனப் புறந்தள்ளப்பட்ட வர்களையும் இறைவன் அன்போடு நேசிக்கிறார். அவர்களின் நல் வாழ்வை விரும்புகிறவர். அவர்களின் உயர்வில் மகிழ்வு கொள்கிறவர் ஆண்டவர் என்பதை இயேசு நமக்கு எடுத்து ரைக்கிறார். தி.பா. 145ல் விழுந்து நொந்து போன யாவரையும் ஆண்டவர் தாங்குகிறார். தாழ்த்தப் பட்ட அனைவரையும் தூக்கி விடுகிறார் எனக் காண்கிறோம்.
புனித பவுல் தன் இறைப்பணி முழுவதிலும் அவர் ஜெபிப்பவராக, ஜெபத்தில் வலிமை பெறுபவராக, ஜெபத்தால் மட்டுமே இயக்கப்பட்ட வராக இருக்கிறார். திருத்தூதர் பணியில் 16:11-15 வரை வாசிக்கும் பொழுது புனித பவுலும் சீலாவும் பிலிப்பு நகரின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள யூதர்களின் ஜெபிக்கும் இடம் தேடிச் செல்கிறார்கள். அவர்கள் ஜெப வாஞ்சையுடன், ஜெபத்தில் மட்டுமே இறை வல்லமையைத் தேடுபவர்களாக, இறைவனின் ஆவியினால் மட்டுமே வழிநடத்தப் படுபவர்களாக இருப்ப தினால்தான் இறைப்பணியில் அவர்களின் வல்ல செயல்களைக் காணமுடிகிறது.
குறி சொல்லும் ஆவியைக் கொண்ட பெண்மணி இவர்களைப் பார்த்து “இவர்கள் உன்னத கடவுளின் ஊழியர்கள். மீட்பின் வழியை உங்களுக்குப் போதிக்கிறார்கள்” எனக் கத்துகிறாள். இறைவன் கொடுத்த வல்லமையால் எப்பிசாசையும் துரத்து கிறார்கள். பொறாமைப்பட்டவர் களால் நையப்புடைக்கப்பட்டு, விலங்குடன் சிறையில் அடைக்கப் பட்டாலும் உள்ளம் மட்டும் இறைப் புகழ் பாடும் மகிழ்ச்சியடைகிறது.
சிறையினின்று கைவிலங்குகள் நொறுக்கப்பட்டதைக் கண்டு ஆச்சரிய மடைந்த சிறைக்காவலனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் போதித்து ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். “ஆண்டவர் இயேசுவின் மேல் விசுவாசம் கொள். நீயும் உன் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்ற விசுவாச உறுதிப்பாட்டை அளிக்கிறார்கள்.
ஒவ்வொரு குருவும், இறைப்பணி யாளரும் ஜெபத்தில் இறைவல்லமை பெற்று இறைப்பணி செய்வோம். ஆமென்.
Fr. ச. ஜெகநாதன்,அருப்புக்கோட்டை

0 comments:

Post a Comment