பூக்களில் சிறந்தது - Sr. Theresita FSM

வாழ்க்கை உயர்த்துவது எது?
எண்ணங்களில் கவனமாயிருங்கள்.  அவை வார்த்தைகளாக வெளியேறுகின்றன.
வார்த்தைகளில் கவனமாயிருங்கள்
அவை செயல்களாக உருவாகின்றன.
செயல்களில் கவனமாயிருங்கள்
அவை பழக்கங்களாக மாறுகின்றன
பழக்கங்களில் கவனமாய் இருங்கள்
அவை ஒழுக்கமாக உயர்வு பெறுகின்றன
ஒழுக்கங்களில் கவனமாயிருங்கள்
அவைதான் உயர்ந்த வாழ்க்கையை உருவாக்குகின்றன.


ஓ அன்பர்களே!  நீங்கள் ஓடியதும், உழைத்ததும், நடந்ததும் தேடியதும் போதும். சற்று இளைப்பாறுங்கள்.  இங்கே பூத்திருக்கும் அன்புப்பூ, பண்புப்பூ, பரிவுப்பூ, பாசப்பூ, நீதிப்பூ, நேர்மைப்பூ, சமாதானப்பூ, ஒற்றுமைப்பூ ஆகிய எல்லாப் பூக்களையும் காசில்லாமல் பறியுங்கள்.  அனைத்தையும் தொகுத்து அடுத்தவர்களுக்கு அணிவித்து அழகு பாருங்கள்.  ஒருவருக்கொருவர் தாயாக, சேயாக மாறுவீர்கள்.  அப்பொழுதுதான் அனைவருக்கும் அனைத்துமாக ஆவீர்கள்.  இவ்வாண்டில் வாழ முயலுவோம்.

0 comments:

Post a Comment