சந்தோஷ தேவ ரகசியம் - சாந்தி ராபர்ட்ஸ்

ஒரு ஊரில் ஒரு ராஜா, ராணி இருந்தார் களாம்.  அவர்களுக்கு ஒரே ஒரு மகனாம்.  மகன் எப்போதும் சந்தோ­மாக இருக்கனும், எதற்காகவும் கவலைப்படக் கூடாதுன்னு அவனுக்கு சந்தோஷ் என்று பெயரிட்டு அவனை ரொம்ப சந்தோ­மாக வளர்த்தாங்களாம்.  ஒரு நாள் எதிர்பாராத விதமாக நோய் தாக்கி அவன் இறந்து விட்டானாம்.  அவங்க அம்மா, அப்பா மகனின் பிரிவைத் தாங்க முடியாம தவிச்சாங்களாம்.  மகனைப் போலவே ஒரு சிலை செய்து தங்க இழைகளால் பூசி, நவரெத்தின கற்களால் அலங்கரித்து, ஊரின் நடுவே பெரிய மேடை அமைத்து அதில் அந்த சிலையை வெச்சுட்டாங்களாம்.
அந்த தங்க சிலை பகலில் சூரிய ஒளி பட்டும், இரவில் மின்னொளி பட்டும் தகதகவென மின்னுமாம்.  பார்ப்பவர்கள் ஒரு நிமிடமாவது அதன் அழகில் மயங்கி தங்கள் கவலைகளை மறந்து விடுவார் களாம்.  அந்த ஊரில் குளிர்காலம் தொடங்கி விட்டதாம்.  அந்த ஆண்டு குளிரின் தாக்கம் அதிகமாகவே இருந்ததாம்.  இரைக்காகவும் இனப்பெருக்கத்திற் காகவும் அந்த ஊருக்கு அதிகமாய் வரும் பறவைக் கூட்டம் அதனதன் ஊர் நோக்கி பயணப்பட ஆரம்பித்ததாம்.  துள்ளித் திரிந்துகொண்டு இருந்த ஒரு சின்னக்குருவி எப்படியோ அதன் கூட்டத்தை விட்டு பிரிந்துவிட்டதாம்.  குளிரும், பசியும், பயமும் லேசான மயக்கத்தைத் தர ஒளிரும் சந்தோ´ன் சிலையடியில் அடைக்கலமாய் படுத்து தூங்கிவிட்டதாம்.
திடீரென தன்மேல் துளித்துளியாய் எதுவோ விழுவதைப் போல உணர்ந்த சிட்டுக்குருவி கண்விழித்துப் பார்த்ததாம்.  சந்தோஷ் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்ததாம்.  மெல்ல அவன் முகத்தருகே சென்ற குருவி “ஏன் அழுகிறாய்” என விசாரித்ததாம்.  உயரமாய் நின்றுகொண்டிருந்த சந்தோஷ் சிலை பேச ஆரம்பித்ததாம்.  தூரத்தில் ஒரு வீட்டைக் காண்பித்து “அந்த வீட்டில் இருப்பவர்கள் உண்ண உணவில்லாததால் கவலை யோடும் கண்ணீரோடும் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதைப் பார்த்ததும் என் மனது கஷ்டப்படுகிறது.  அதனால் அழுகிறேன்” என்றதாம்.
“அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றதாம் குருவி.  உடனே சந்தோஷ் சிலை சொன்னதாம், “என் உடலை தங்க இழைகளால் மூடி இருக்கிறார்கள்.  நீ அதில் ஒரு இழையை உரித்துச் சென்று அவர்களிடம் தந்துவிடு.  அவர்கள் அதைக் கொண்டு உணவு வாங்கி பசியாறி, நிம்மதியாக தூங்கட்டும்” என்றதாம்.  உடனே குருவி அவன் உடம்பிலிருந்து ஒரு இழையை உரித்துக் கொண்டு போய் அந்த வீட்டாரிடம் போட்டு வந்ததாம்.  அவர்களும் உடனே அதைக் கொண்டுபோய் விற்று, உணவு வாங்கி வந்து சந்தோ­மாய் சாப்பிட்டு, நிம்மதியாய் உறங்கச் சென்றார்களாம்.  இதைப் பார்த்துக் கொண்டிருந்த சந்தோஷ் சிலைக்கும் அவன் தோளில் அமர்ந்திருந்த குட்டிக் குருவிக்கும் ரொம்ப சந்தோ­ம்.
சந்தோஷ் சிலையும் சின்னக் குருவியும் தங்கள் சொந்தக் கதைகளைப் பேசி, நல்ல நண்பர்களாகவும் ஆகிவிட்டார்களாம்.  ஒவ்வொரு நாளும் கஷ்டப்படும் ஒவ்வொரு வருக்காகவும் தன் உடலின் பொன்னைத் தருவதும், அதைக் குருவி உதவி வேண்டுபவரிடம் தந்து மகிழ்வதும் வாடிக்கையாகிவிட்டது.  குளிர்காலம் இன்னும் வீரியப்படவே சந்தோஷ் சிலை ‡ சிட்டுக்குருவியிடம் உஷ்ணமான இடம் நோக்கிச் சென்று தன்னைத்தானே காத்துக் கொள்ள அறிவுறுத்தியது.  ஆனால் சந்தோ´ன் நல்ல மனமறிந்து நட்புப் பாராட்டி குருவி “நான் உன்னைவிட்டு போக மாட்டேன்.  உனக்கு உதவுவதில் தான் என் சந்தோ­மும் வாழ்க்கையும் இருக்கிறது” என்று சொல்லி விட்டு அங்கேயே தங்கிவிட்டது.
அனுதினமும் உரித்து உரித்து தந்ததில் தங்கமெல்லாம் தீர்ந்து சந்தோஷ் சிலை கறுப்பாகிவிட்டது.  ஆனாலும் மனம் தளராத இருவரும் தங்கள் பணியை தொடர்ந்து செய்து வந்தார்கள்.  சிலையில் பதிக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கற்கள் இப்போது பரிமாறப்பட்டன.  ஒவ்வொன்றாய் தந்து தந்து சந்தோஷ் சிலையின் எல்லா நவரெத்தினங்களும் தீர்ந்துவிட்டன.  கண்களில் பதிக்கப்பட்டிருந்த இரண்டு வைரக்கற்கள் மட்டுமே பாக்கி.  அன்றிரவு ஓர் ஏழைத்தாய் தன் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்காக துடிப்பதைக் கண்ட சந்தோஷ் சிலை தன் ஒரு கண்ணை அந்த  தாய்க்குத் தானம் செய்தது.  ஏற்கெனவே பலவீனமாய் காணப்பட்ட சின்னக்குருவி அவன் கண்ணைப் பறித்ததும் மனதளவிலும் சோர்ந்துப்போய் விட்டது.  ஒற்றைக் கண்ணுடன், கறுத்த மேனியுடன் இருந்த சிலை இப்போது அசிங்கமாகப் பட்டது அவ்வூர்க்காரர்களுக்கு.
அன்றைய நாளில் பெரும் மழை கொட்டியது.  உதவி வேண்டி தவித்த ஆசிரமக் குழந்தைகளுக்காக தன் மறு கண்ணையும் தானம் செய்ய துணிந்தது சந்தோஷ் சிலை.  உடல்நிலை மோசமாகி விட்ட சின்னக்குருவி தன் பலத்தையயல்லாம் ஒன்றுகூட்டி அக்கண்ணைப் பறித்துச் சென்று ஆசிரமத்தில் சேர்த்து உதவிய திருப்தியோடு திரும்பியது.  கண்ணில்லாத சிலையைக் கண்டு கதறிய சின்னக் குருவி அதன் காலடியில் விழுந்து தன் உயிரை விட்டது.  சின்னக் குருவியின் மரணத்தால் சந்தோஷ் சிலையின் இதயமும் வெடித்துச் சிதறியது.
அந்த நாளில் உலகின் மிகச்சிறந்த பொருளைக் கொண்டுவந்து தன்னிடம் தரும்படி தேவன் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டு இருந்தார்.  மண்ணிற்கு வந்த தேவதூதர்கள் பொன், மணி, வைரம், பவளம். சிறந்த விளைச்சல், மிருக ஜீவன்கள், சிறந்த மனிதர்கள் என்று எல்லாவற்றையும் கொண்டு சென்றார்கள்.  அந்த ஊருக்கு வந்த தேவதூதரோ சந்தோஷ் சிலையின் உடைந்த இதயத்தையும் அவனுக்காக உயிர்தந்த சின்னக் குருவியின் உடலையும் ஒரு தட்டில் வைத்து தேவன்முன் கொண்டு வந்ததாம்.  எல்லோரும் சிரித்தார்கள்.  ஆனால் கட்டளையிட்ட தேவனோ அந்தத் தட்டைக் கையில் வாங்கி “எல்லாப் பொருட்களையும் விட இதுவே சிறந்த பொருளாகும்.  பிறர் சந்தோ­த்துக்காக தன்னையே அழித்துக் கொண்ட இந்த இதயமும், அதற்கு உதவியாக தன்னுயிர் தந்து உதவிய இந்த சின்னக்குருவியுமே உலகில் உயர்ந்தவர்கள்” என்றார்.  “சந்தோஷ தேவ ரகசியம்” இப்போது எல்லோருக்கும் புரியலாயிற்று.

0 comments:

Post a Comment