கருணை நிறைந்த தலைமை - சகோதரி அன்டோனியா வாழ்க்கை

மெக்சிகோவில் உள்ள லா மெசா சிறையில் பயங்கரக் கலவரம்.  அறநூறு பேர் மட்டும் இருக்கக் கூடிய ஒரு இடத்தில் 2,500 பேர் அடைக்கப்பட்டிருந் தார்கள்.  அவர்கள் உடைந்த பாட்டில்களை ஆத்திரத்துடன் காவல்துறையினர் மீது வீசிக் கொண்டிருந்தார்கள்.  போலீசார்  திருப்பி அவர்களை இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந் தார்கள்.  அப்போது திகைக்க வைக்கும் ஒரு காட்சி . . .
ஐந்தடி இரண்டங்குல உயரமே இருந்த குள்ளமான ஒரு 63 வயதுப் பெண்மணி, அமைதியை வேண்டுவது போல் தன் கைகளை விரித்துக் கொண்டு கூட்டத்திற்குள் புகுந்தார்.  துப்பாக்கிக் குண்டுகள மழையாகப் பொழிவதைப் பொருட் படுத்தாமல் ஒவ்வொருவரையும் பார்த்து சண்டையை நிறுத்தச் சொல்லிக் கேட்டார்.  என்ன ஆச்சர்யம்!  எல்லோரும் சண்டையை நிறுத்தினார்கள்.
சகோதரி அன்டோனியாவைத் தவிர உலகில் வேறு யாரும் இதைச் செய்திருக்க முடியாது.  அவர் சொன்னதை மட்டும் அவர்கள் ஏன் கேட்டார்கள்?  ஏனென்றால் பல ஆண்டுகளாக அவர் அந்த சிறைக் கைதிகளுக்குத் தன் சுய விருப்பத்தின் பேரில் சேவை செய்து வந்தார்.  தன் வாழ்நாள் முழுவதையும் கொலைக் காரர்கள், திருடர்கள், போதை மருந்து வியாபாரிகள் போன்ற கைதிகளின் நலனுக்காகத் தியாகம் புரிந்திருந்தார்.  அவர்களைத் தன் மகன்கள் போல நடத்தி வந்தார்.  24 மணி நேரமும் அவர்களது தேவை அறிந்து உதவினார்.  ஆண்டிபயாடிக் போன்ற மருந்துகள், மூக்குக் கண்ணாடிகள் போன்ற வற்றை வாங்கித் தந்தார்.  நல்லடக்கம் செய்யப்பட இருந்த உடல்களை குளிப்பாட்டி விட்டார்.  தற்கொலை எண்ணத்தில் இருந்த வர்களை அறிவுரைகள் மூலம் தடுத்து நிறுத்தினார். அந்தத் தன்னலமற்ற அன்பும் கருணையும் கைதிகளிடம் அவருக்கு மரியாதைத் தேடித் தந்திருந்தது.  தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்யுமளவுக்கு மரியாதையை ஏற்படுத்தி இருந்தார்.  இது மனித குலத்திற்கு எத்தனை மகத்தான செய்தி!  சிறைக்கைதிகளுக்கு நடுவே நட்ட கருணை நிறைந்த ஒரு தலைவர் இருக்கிறார்.  ஆனால் உலகில் உள்ள, குரலெழுப்பத் திராணியற்ற பல லட்சக்கணக் கான மக்குளுக்குக் கருணை நிறைந்த தலைவர்கள் வேண்டும்.

0 comments:

Post a Comment