காற்றோடு சேரட்டும்
கணநேர மனிதம்
கல்மனமும் கரைந்திட்டு
கவிபாடும் புனிதம் . . . !
இனிவாழும் வாழ்க்கையே
அர்த்தமாய் மாறி
ஈழத்தமிழ் வாழும் கூட்டமே
குறையின்றி வாழ் நீ!
சண்டைகள் பல இட்டாய்
சாத்தியங்கள் புடமிட்டே!
சத்தியமாய் நம்பிட்டோம்
சாதியும் உண்டெனவே - அது
தமிழ்சாதியும் உண்டெனவே . . . !
தாயயான்று கொண்டோம்
தன்மானம் காப்போம்
புலர்ந்திட்ட புத்தாண்டில்
புதிதாய் பிறப்போம்
- பரட்டைப்பித்தன்
0 comments:
Post a Comment