உலகப் பிரார்த்தனை

திருத்தந்தை கிளமென்ட் XI - (1700 - 1721) எழுதியது.


(“பொதுவாக எல்லாப் பிரார்த்தனைகளும், நாம் நினைத்ததை கடவுள் செய்ய வேண்டும்” என்ற பாணியில் இருக்கும்.  ஆனால் திருத்தந்தை கிளமென்ட் XI-ன் பிரார்த்தனை “கடவுள் நம்மை எப்படிச் செதுக்க வேண்டும்” என்றவாறு உள்ளது.  இதுவே இந்தப் பிரார்த்தனையின் தனித்தன்மை)


* இறைவா, உம்மை நான் நம்புகிறேன்.  என் விசுவாசத்தை உயர்த்தும்
உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்;  என் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்
உம்மை நேசிக்கிறேன்;  உம்மை நன் அதிகமாக நேசிக்கச் செய்யும்
என் பாவங்களுக்கு வருந்துகிறேன்;  என் துக்கத்தை ஆழப்படுத்தும்.
* நீரே முதலானவர் என்பதால், உம்மை வழிபடுகிறேன்,
நீரே முடிவு என்பதால், உமக்காக ஏங்குகிறேன்.
நீர் என் நிலையான உதவியாளர் என்பதால் உம்மைப் புகழ்கிறேன்.
நீர் என் பாதுகாப்பாளர் என்பதால் உம்மைச் சந்திக்கிறேன்.
* உமது ஞானத்தால், என்னை வழிநடத்தும்
உமது நீதியால், என்னைத் திருத்தும்
உமது இரக்கத்தால், என்னைத் தேற்றும்
உமது வல்லமையால், என்னைப் பாதுகாத்தருளும்.
* உம்மீதுள்ள என் சிந்தனைகளை உமக்கு அர்ப்பணிக்கின்றேன்
என் வார்த்தைகளை, உமது திருவுளப்படி உருவாக்கும்
என் நடவடிக்கைகளை, உம்மீது கொண்ட அன்பால் நிரப்பும்
நீர் மகிமை பெறும் பொருட்டு, என் துயரங்களைப் பொறுத்துக்கொள்ள வலிமை தாரும்.
* நீர் என்ன கேட்கிறீரோ, அதை நான் விரும்பவேண்டும்
எப்படிப்பட்ட வழியில் எவ்வளவு காலம் நீர்,
கேட்டாலும், நான் தருவேன்.  ஏனெனில் நீரல்லவா கேட்கிறீர் . . . !
* என் புரிதலை, ஒளிவீசச் செய்யும்
என் உறுதியை, நிலைப்படுத்தும்
என் மனதைத் தூய்மையாக்கும்
என்னை முழுமையாகப் புனிதப்படுத்தும்
* என் முந்நாள் பாவங்களுக்காக, மனம்மாற உதவி செய்யும்
எதிர்காலத்தில் எனக்கு வரும் சோதனைகளை எதிர்க்க, வலிமை தாரும்
மனித பலவீனங்களிலிருந்து, என்னை உயர்த்தும்
ஒரு நல்ல கிறிஸ்துவனாக, நான் வலிமை பெறுவேனாக.
* என் ஆண்டவரே, என் கடவுளே, நான் உம்மை அன்புசெய்வேன்
நான் இப்போது எப்படி இருக்கிறேனோ, அப்படியே நான்
என்னைப் பார்க்க உதவும்
இவ்வுலகில் நானொரு பயணி
என் நண்பர்கள், எதிரிகள், யாரையயல்லாம் நான்
தொடுகிறேனோ, அவர்களை அன்பு செய்யவும்,
மதிக்கவும் அழைக்கப்பட்ட, ஒரு கிறிஸ்துவன்.
* கோபத்தை, மென்மையால் வெல்ல உதவும்
பேராசையை, கருணையால் நிரப்பும்
வெறுப்பை, பண்பால் வெல்ல, என்னையே மறந்து
பிறருக்கு உதவிட, அருள் புரியும்.
* திட்டமிடுதலில், புத்திசாலித்தனத்தையும்
இடர்தாங்குதலில், வீரத்தையும், விவேகத்தையும்
துன்பம் தாங்குதலில், பொறுமையையும்
வளமையிலும் நான் வறியவனாக வாழச் செய்யும்.
* ஜெபவேளையில் கருத்தூன்றி நிற்கவும்
உணவு, பானங்களில் வெறித்தனம் இல்லாமலும்
என் பணியில், கூர்மையாகச் செயல்படவும்
என் நல்ல நோக்கங்களில் உறுதிப்பூணவும் அருள்புரியும்
* இவ்வுலகம் கடந்து செல்லக்கூடியது என்பதை நான் உணரச்செய்யும் என் உண்மையான எதிர்காலம் விண்ணகத்தில் உள்ளது
பூமியில் மனித வாழ்க்கை குறுகியது
ஆனால் நித்திய வாழ்வோ முடிவில்லாதது.
* என் மரணத்துக்கு நான் தயாரிக்க உதவும்
நீதியின் பயத்தை எனக்கு உயர்த்தும்
உமது நன்மைத் தனத்தின்மீது, உறுதிபூணச்செய்யும்
மரணத்தின் மூலம் பாதுகாப்பாக, நித்திய
மோட்ச பேரின்பத்திற்கு இட்டுச் செல்லும்
இவைகளையயல்லாம் கிறிஸ்து ஆண்டவர் மூலமாக அருள்வீராக ஆமென்


நன்றி!  இணையதளம் வாசிங்டன் உயர் மறை மாநிலம் 
 அ. குழந்தைராஜ்,காரைக்குடி

0 comments:

Post a Comment