பத்தாவது முறை
கீழே விழுந்தவனை
பூமி முத்தமிட்டுச் சொன்னது
நீ ஒன்பது முறை எழுந்தவன்
அல்லவா என்று - யாரோ
உயிரினங்களின் பரிணாமத்தை
கண்டு வியக்கும் நாம்
தோற்றத்தைப் பற்றி யோசிக்கும்போது
திகைக்கிறோம்.
கடல்பாசிதான்
முதல் உயிரணு என்கிறது
அறிவியல்
மிருகமும் மனிதனும்
சேர்ந்த கலவைதான்
மனிதன்
இதில் ஆணும் பெண்ணும்
அடங்குவர்
பரிணாமத்தில் அனைவரும்
சமமே
பாகுபாடு பார்த்தால்
அவனும் அவளும்குறைமனிதர்களே
துகனியைத் தின்றதால்
கடவுளின் கட்டளையை
மீறினாள் என்றார்கள்
இருப்பினும்
ஆதாமின் அறிவுக்கண்ணைத்
திறந்தவள் அவள்தானே!
விழுவதெல்லாம்
எழுவதற்கே
உடலியல் காரணத்தால்
பெண் பின்னுக்குத் தள்ளப்பட்டாலும்
இன்னும் பாலூட்டுவதும்
சோறூட்டுவதும் அறிவூட்டுவதும்
அவள் பணிதானே!
பெண்ணை சகமனு´யாய்
மதிப்போம்
மானுடம் காப்போம்
பெண்
போகப் பொருளல்ல
அவள் ஒரு
போதி மரம்!!
ஜே. தமிழ்ச்செல்வன்
0 comments:
Post a Comment