நன்றி கடன்

சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள்'' புத்தக வெளியீட்டு விழாவும் ஊனமுற்ற அப்பெண்களுக்குச் சாதனையாளர் விருது வழங்கும் விழாவும் ஒருங்கே எளிமையாகவும் கம்பீரமாகவும் நடந்து கொண்டிருந்தது. கல்லூரி மாணவிகள் வந்தோரை வரவேற்க, சாதனையாளர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர் ஒரு சிலர். வெற்றித் திலகமிட்டு, இனிப்பு வழங்கி, சாதனையாளர் அடையாள அட்டை அணிவித்தனர். ஆனால் சாதனையாளர்க¼ளா எந்த உணர்வையும் வெளிக்காட்ட முடியாமல் மெளனமாய் அமர்ந்திருந்தனர்.

இந்தச் சமுதாயத்திற்கான சீர்திருத்தப் பணியில் மூவர், சிறைக் கைதிகளின் வாழ்வியல் ஆய்வு செய்யும் கண் பார்வையற்ற மாணவி, இசையில் பல சாதனைகள் புரிந்து. பல விருதுகளைக் குவித்த பார்வையற்ற முனைவர் ஒருவர், சதுரங்கப் போட்டியில் பல விருதுகளைக் குவித்துள்ள ஒருவர், பதினைந்து வயது வரை ஆரோக்கியமாய் வாழ்ந்து, நினைத்துப் பார்க்க முடியாத தசை நோயால் பாதிக்கப் பட்டு சக்கர நாற்காலியில் அடைக்கலமாகி விட்ட கணினி சாதனையாளர்களான சகோதரிகள் இருவர், ஓவியத் துறையில் பல புதுமைகளைப் புரிந்துவரும் ஓவியர் மற்றும் வளரும் எழுத்தாளராய் ஒருவர்.

இவர்களைப் பேட்டி எடுத்து, இவர்களின் வலிகளையும் வேதனைகளையும் சுயமாக உணர்ந்து, ஒளிர முடியாமல் தூசி படிந்து போயிருந்த இந்த அபூர்வ பிறப்புக்களைத் தூசி தட்டி சமுதாயத்திற்கு அடையாளம் காட்டும்படி செயல்பட்டு, புத்தகமாய் அவர்களை அச்சிட்டு, அவர்களைப் பெற்றவர்களுக்கு ஓர் அங்கீகாரத்தைச் சமுதாயத்தில் பெற்றுத் தர உழைத்த அந்த உடல் சவாலாரான சகோதரர். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் சாதனையாளர்கள்! என் சோகம் பெரிதா? உன் சோகம் பெரிதா? என இனங்கண்டு கொள்ளமுடியாத நிலையில், பெற்றவர் களுக்கு எப்படியாவது பெருமை சேர்க்க வேண்டும் என்ற வெறியில் அவர்கள்.

பெற்ற நாள் முதல் பிள்ளைகளுக்காகக் கண்ணீரும் செந்நீரும் சிந்தி, தங்களுடைய கனவுகள், சந்தோ­ங்கள் யாவற்றையும் தியாகம் செய்து, சுயமே இல்லாமல் வாழும் பெற்றவர்கள். மரம்கூட தனக்கொரு வாரிசை விட்டுச் செல்கிறது. ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் ஓர் அடையாளத்தை விட்டுச் செல்கிறது. ஆனால் பெரும்பாலான ஊனமுற்றவர்கள், மெளனச் சாதனை யாளர்களாய் வாழ்ந்த போதிலும் மரித்த பிறகு மறக்கப்படுகிறார்கள். பிள்ளை அடையாளம் இன்றிப் போய்விட்டதில் பெற்றோரின் கனவுகளும் சிதைந்து போகின்றன.

ஆனால் அப்படி இல்லாமல் அவர்களும் பேசப்படும் வகையில், வாழ்ந்ததற்கான அடையாளமாய், சில தலைமுறைகளாவது அவர்களை நினைவுகூரும் வகையில் அவர்கள் அழியாச் செல்வமான புத்தக வடிவில் அச்சடிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்ட சந்தோ­ம் பெற்றவர்களுக்கு. தங்களைப் பெற்று, வளர்த்து, அரும்பாடு பட்டு ஆளாக்கிய பெற்றோர்களுக்கு ஒரு வேளைச் சாப்பாடு போடக்கூட சுயம் இல்லாத நிலையில், தங்கள் இயலாமையைப் பலமாக்கி இந்தப் பிள்ளைகளைப் பெற்ற உயர் மனிதர்கள் இவர்கள் எனத் தங்களால் அடையாளம் காட்டவும், அதன் மூலம் அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்த முடிந்ததே என மவுனமாய் மகிழ்ச்சி நிறை மனது அந்தச் சாதனையாளர்களுக்கு.

அது மட்டுமல்ல, தங்களை இந்த உலகிற்கு அடையாளம் காட்ட உதவியவர் களையும் வாய்ப்பளித்தவர்களையும் நன்றியுடன் நினைக்கும் தருணமாகவும் அது அமைந்தது. வாய்ப்பளித்து வளர்த்து விட்டவர் நேரில் வந்து அந்த மகிழ்ச்சியில் பங்கு கொண்டதும், மனமார வாழ்த்தியதும், உற்சாகப்படுத்தியதும் இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்தது அந்த வளரும் சாதனை யாளர்களுக்கு. இந்த உடலுக்கு உயிர் தந்த தந்தை ஒருபுறம், எழுத்தாளர் என்னும் மறுபிறவிக்கு உயிர் தந்த தந்தை மறுபுறம். இரண்டு தந்தையர்களின் ஆசீரில் ஒரு மகள். குறைவிலும் நிறைவு மனதில் ததும்பியது. இயலாமை உடலில்... மனதிலும் அல்ல, திறமையிலும் அல்ல.
- சாந்தி ராபர்ட், உதகை

0 comments:

Post a Comment