தவக்காலம்

திருச்சபை ஒதுக்கும் தவக்காலம் - நம்மைத்
திருத்தும் நல்ல பொற்காலம்
ஒறுத்தல் தபசு தருமங்கள் - பலவும்
கொடுத்து நம்மைத் தண்டிக்கும்
கிருபை பொழியும் நற்காலம் - இறைவன்
திருவடி வணங்கி நம்பாபம்
தீர்த்திட சேசுவிடம் மன்றாடுவோம்!
தேவ தாயின் உதவி கேட்போம்!
திருப்பலி ஒப்புக் கொடுத்திடுவோம்
சிலுவை நாதனை மன்றாடுவோம்
மறுபடி பாபம் செய்யாமல் செபித்திடுவோம்
மாதா உதவி கேட்டிடுவோம்
ஒறுத்தல் செய்து பாவத்திற்கு
உரிய தண்டனை கொடுத்திடுவோம்
மரிக்கும் வரையில் மாசின்றி
வாழ உறுதி செய்திடுவோம்
அலகை சோதனை வென்றிட
அனைத்துப் புனிதரை வேண்டிடுவோம்
உலக இன்ப அநித்தியம்
உதறித் தள்ள வேண்டுமே
நலனைக் கொடுக்கும் தவக்காலம்
நன்மை நல்கும் திருக்காலம்
நிலுவை யான பாபங்கள்
நிர்மூலம் ஆக்கும் தவக்காலம்
கிடைத்தற் கரிய தவக்காலம்
கிருபை பொழியும் காலந்தான்
இடைவிடா(து) செபித்திடுவோம் சேசு தேவன்
இரக்கம் காட்டி மன்னிப்பார்!
கவிஞர் பெஸ்கிதாசன்

0 comments:

Post a Comment