இவ்வாறான பெண் சமூகம் உற்பத்தி, தொழில், வணிகம் போன்றவற்றில் வளர்ச்சி பெற்ற பிறகு அனைத்து அதிகாரங்களையும் ஆண்களே எடுத்துக் கொண்டனர். இத்தகைய மாற்றங்கள் கடவுளின் பெயராலே நடந்துள்ளன. பின் ஆணாதிக்க சமூகமாக மாறி பெண்கள் அனைத்து நிலைகளிலும் அடிமையாக்கப்பட்டார்கள்.
மிக மோசமான நிலையில் பெண்களை ஆண்கள் நடத்தியதாக தந்தை பெரியார் பெண்ணடிமைத் தனத்தை தோலுரித்துக் காட்டுகிறார். 18ஆம் நூற்றாண்டு முதலே பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வும் போராட்டங்களும் அரங்கேறிக்கொண்டே இருந்தன. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவரான கிளாரா ஜெட்கின் என்ற பெண்மணியின் மிகப் பெரிய முயற்சியால் 1907ல் சர்வதேச அளவில் முதல் முறையாக சோசலிசப் பெண்களின் மாநாடு நடைபெற்றது. மீண்டும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1910இல் கோபான்கேஹன் நகரில் சோசலிசப் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் கிளாரா ஜெட்கின் மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
பெண்களின் முழு வளர்ச்சியைக் கவனத்திற்கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுப்பதோடு தேவையான சட்டங்களையும் உருவாக்கவும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி வளர்ச்சியிலும் பணியிடங் களில் ஏற்படும் பாலியியல் கொடுமைகளைச் சமாளிக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வழிவகை செய்வதும் அவசியமாகிறது.
இருப்பினும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் புதிய புதிய கோணத்தில் எரிந்து கொண்டே இருக்கின்றன. இவற்றிற்கு 33 சதவீதம் மட்டுமே முடிவாகாது. மனித நேயமும் மென்மையான உள்ளம் இருந்தாலே போதுமானது.
ஆண்களுக்கு மட்டுமே உலகம் உருவாக்கப்படவில்லை, இருவருக்கும் அனைத்து ஆற்றலும் உண்டு. போரிட்ட பெண்களும், நாட்டை ஆண்ட பெண்களும், புனிதத்துவம் நிறைந்த பெண்களும், தியாக உள்ளம் கொண்ட பெண்களும் அனைத்து வரலாற்றுகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இடம் பெற்றுள்ளார்கள். பெண்களை அடிமைப்படுத்த அவர்கள் விலங்குகள் அல்லர். ஆண்களைப் போன்றே படைக்கப் பட்டவர்கள். ஆகவே அனைத்திலும் பகிர்ந்து வாழவிடுங்கள்.
0 comments:
Post a Comment