சமர்ப்பணம்

கானா தேசத்தில்
முதல் அதிசயம்
நிகழ வைத்த
அற்புத தாய்

ரத்த தானம் செய்யக் கூட
மனமில்லா உலகில் - தன்
மகனைத் தானம் செய்த
தரணி போற்றும் தாரகை

வீட்டை விட்டு
பணி செய்யப் புறப்பட்ட
புரட்சிக்காரனை
பாராட்டி அனுப்பிய
பாமரத்தி

உத்தமன் யேசுவின்
குருதி கொட்டயிலும்
யாரையும் குற்றம் சொல்லாத
உத்தமி

உன்னை என்னை
விண்ணை மண்ணை
இயக்கும்
விண்ணரசிக்கு இப்பாமாலை
பல்லாயிரம் பூ மாலை
- ஜே. தமிழ்ச்செல்வன், பூதலூர்

0 comments:

Post a Comment