புதிய நம்பிக்கை

பிரச்சனைகளை மட்டுமே முன்னெடுத்துப் பார்க்கும் சமூகம் - தீர்வு காண விளைந்தால் வெற்றிப் படிக்கும் சோர்ந்துபோனால் நம்பிக்கை இன்மைக்கும் தாழ்வு நிலைக்கும் வழிவகுக்கும்.

கடவுளைக் காக்க வேண்டிய மதங்கள் அர்த்தமற்றவையாய் மாறுகின்றனவே! அய்யோ - குருக்கள், துறவிகள் இப்படியயல்லாம் இருக்கிறார்க¼ள . . . குருமடங்களில் பயிற்சிகள் சரியில்லாமல் உள்ளதே . . . இன்று துறவறம் தழுவும் மாணாக்கர் முழு அர்ப்பணிப்புடன் இல்லாமல் போகிறார்க¼ள . . .என்பதெல்லாம் ஆழமாகிப் போன அங்கலாய்ப்பு. ஏமாற்றங்களையும், பிரச்சனை களையும் மட்டுமே பேசிக்கொண்டே போனால் அதற்கான தீர்வு எங்கு?

சமூக வாழ்வில் உருவாகும் முற்போக்குச் சிந்தனைப் பகிர்வுகள் சமய வாழ்வு பற்றிய கூறுகளைப் பின்னுக்கு தள்ளுகின்றன. ஏமாற்றமும் அதிருப்தியுமே மிஞ்சிப் போகிற போக்கு சற்று தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. சமய வாழ்வின் பொருளை இழக்கச் செய்கிறது.

இப்படி எழுதுவதனால் சமயத்தின் முன்னேற்றப் பாதைகளையோ பிறர் சேவைகளையோ நான் மறந்து விட்டேன் என நினைக்க வேண்டாம். கடவுளை முன்னிலைப்படுத்தி முழு ஈடுபாடு கொண்டு செயல்படு கிறவர்கள் நிறைய உண்டு. இவர்களில் சிலர்கூட சமூகத்தை விட்டு விலகி நின்றால் நல்லதைக் காண்போமா? என்று எண்ணுவதும் உண்டு. ஆனால் நடைபெறுகிற நல்லவற்றைவிட, இருக்கிற, செயல்படுகிற நல்ல மனிதர்களைக் காண்பதை விட ஆங்காங்கு உள்ள அநீதிகள், தவறான மனிதர்கள் இவற்றை / இவர்களை முன்னிலைப்படுத்தி “எல்லாமே / எல்லாருமே இப்படித்தான்” என்கிற தவறான முடிவு நிரந்தரப்படுத்தப் படுவதே கவலை தருகிறது.

இவற்றிற்கெல்லாம் நல்ல தீர்வு வழிகளைக் காண வேண்டிய கால கட்டத்திற்கு இன்று சமூக / சமய பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் காணும் தீர்வுகள் நூறு விழுக்காடு நேர்மறை (Positive) சிந்தனைகளையோ, பிரச்சனைக¼ள இல்லாத தீர்மானங்களையோ தந்து விடும் என்பதல்ல. நம்பிக்கை கொண்டு நல்லவற்றைத் திட்டமிட்டால் உயரியவைகளை இனம் காணவும், அவற்றைச் செயலாக்கவும் வழி பிறக்கும் என்பதே என் உறுதிப்பாடு.

ஆகஸ்டு 29, 30 ஆகிய நாட்களில் தியாக தீபத்தில் நடைபெற்ற இறையழைத்தல் ஊக்குநர்கள் கருத்தமர்வுகளைத் திரும்பிப் பார்க்கிறேன். குருக்கள், சகோதரர்கள், சகோதரிகள் எனத் தமிழகம் முழுவதிலும் இருந்து 105 இறை அழைத்தல் ஊக்குநர்கள் கலந்து கொண்ட அமர்வு நம்பிக்கை தரும் ஒன்றாக அமைந்தது. “வந்து பாருங்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தமர்வு இறையழைத்தல் முகாமில் நாம் முன்னெடுக்க வேண்டிய சிந்தனைகள், செயல் பாடுகள் பற்றிய நம்பிக்கை தந்தன. பல்வேறு மாதிரிகைகளைப் பின்பற்றத் துடிக்கும் இளையோருக்கு இயேசுவை ‘Heo’-வாக வலியுறுத்தும் பொறுப்பு நம்மிடமே உள்ளது என்ற காரணத்தால் ஆன்மீக அனுபவமும், சமூக சிந்தனையும் மிகுந்த பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இன்றைய சமூக எதார்த்தங்கள் நம்மை அதிகமாகப் பாதிக்கிற காரணத்தால் அத்தகைய எதார்த்தங்களையும் மிக வேகமான மாற்றங்களையும் இனம் கண்டுகொள்ளுதல் தேவைப்படுகிறது. சமய / சமூக அரசியல் குறுக்கீடுகள், தாக்கங்கள் இவற்றை நாம் கண்டால்தான் ஆரோக்கியமான மாணாக்கரையும் நாம் இனம் காண முடியும். பக்தி, புத்தி, சக்தி என்ற வார்த்தைகளில் மட்டும் உள்ளடங்கிய மதிப்பீடுகளைக் (Evaluation) காணாமல் இன்றைய மாணாக்கரின் சுய தெளிவு, இலட்சிய சிந்தனைகள், அவற்றில் உறுதிப்பாடு, நேர்மையுடன் கூடிய ஆன்மீக மற்றும் ஆளுமை வளர்ச்சியைத் தெளிவுபடுத்தி மாணாக்கரைத் தேர்ந்தெடுக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. இறைப்பற்றின் தன்மையை உறுதிப் படுத்துவதும் மிக தேவை.

அத்தகைய குருக்கள், துறவி களையே காண விரும்புகிறோம் எனப் பொதுநிலையினரும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தது பெரும் சிந்தனையை கிளறிவிட்டது. “வந்து பாருங்கள்” என்ற இறையனுபவத்தை உருவாக்க சிறப்பான நாள் / வார திட்டங்கள் தேவை என்பதால் முகாமிற்கான வரையறையும் முன் வைக்கப்பட்டது.

“காண விரும்புகிறோம்” என்று ஆசைப்பட்டு வரும் இளையோரிடம் இயேசுவைச் சுட்டிக்காட்டும் குருக்கள், துறவிகள், பெற்றோர் தேவைப்படு கிறார்கள். இதனால் பிரச்சனைகள் அல்ல, புதிய வழித்தடங்களை உருவாக்கும் சாட்சிகளாய் அனைவரும் விளங்கமுடியும். இறையரசுப் பணியில் புதிய நம்பிக்கையின் ஆர்வலர்கள் உருவாகட்டும்

பணி. செ. சகாய ஜான்

0 comments:

Post a Comment