சேசு உரைத்தார் என்னைப்
பின்செல் என்ற அழைப்பு!
நேச முடனே புகன்றார்
தேர்வு செய்தார் சீடரை!!
அழைத்த உடனே சேசுவை
அடியயாற்(றி) பின்தொடர்ந் தாரே!
நிலைத்து நின்று உயிரை
ஈந்திடவும் துணிந்தாரே!!
இறைவன் அழைப்பே அழைப்பு
பிறரால் வருதல் (கண்)துடைப்பு!
குறையும் இன்றி வாழ்வோம்
குறுமதி பெற்று நுழைந்தார்
நிறைவு வாழ்வை இழந்து
தீமைக் கடலில் மூழ்வர்
கறையும் படிந்து வாழ்வில்
சேறும் குடியும் கொள்ளும்
தூயர் வாழும் திருக்கூடம்
சோதனை வெல்லும் அருள்கூடம்
தீயர் தீய்ந்து போவாரே
தேவன் அழைப்பே அழைப்பு!!
(கவிஞர் பெஸ்கிதாசன்)
0 comments:
Post a Comment