கல்வி அறிவு பெற்றிட்ட மனித சமுதாயத்தில் - இன
வேற்றுமை ஏனோ என்ற கேள்வியைக் கல்லறைவரை சுமந்தவன்
நம் தேசப் பிதாவாகி நம் நெஞ்சில் நிறைந்தவன்.
ஆழமாய் கற்றிட்ட கல்வியை அறிவில் நிறுத்தி
வெள்ளையனுக்கு அகிம்சையை உணர்த்தி - மண்ணில்
ஒடுக்கப்பட்டோருக்காய் உரிமைக் குரல் எழுப்பி அரை
நிர்வாணியாய் அகிம்சையைப் போதித்த புத்த பேரொளி.
அனுதினமும் ஆண்டவனை ஆழ தியானித்து
ஆன்மீக வாதியாய் வாழ்ந்து காட்டிய தியாக சீலன்
அண்ணலே காந்தி அண்ணலே உன் அகிம்சைத்
தத்துவம் தேசியக் கொடியில் இருப்பதால் தான்.
உலக நாடுகளில் இந்தியன் தலை நிமிர்ந்து வாழ்கிறான்
ஊழலை ஒழிக்க வழி தேடுகிறான் - இருந்தாலும்
அண்ணலே காந்தி அண்ணலே ஓட்டைப் பானையில்
நுழைந்த எலியாக சுதந்திரம் இன்று திண்டாடுகிறது - அன்று.
துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பயப்படாத வெள்ளையனை
கை ராட்டையால் நாட்டைவிட்டே விரட்டிவிட்ட வீரனே
கதர் ஆடையின் மேன்மையைப் பாருக்கு உணர்த்தியவனே
காந்திய பொருளாதாரத்தை உலகமய மாக்கியவனே.
சத்திய சோதனையில் புடம் போட்டு வந்தவனே
சத்தியத்தை ஜீவிதமாய் கொண்டவனே எத்திசையும்
அன்பைப் போதித்தவனே அண்ணலே காந்தி அண்ணலே
மறுபடியும் நீ வந்து இம் மண்ணில் பிறக்கும் நாள் என்னாளோ?
தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி
0 comments:
Post a Comment