பொதுவாகவே “இறை யழைத்தலுக்குச் செவிமடுப்போர்” குறைந்துள்ளனர் என்கிற கருத்து தமிழக திருச்சபையில் நிலவு கிறது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் முக்கிய மானவைகளையும் அவற்றைச் சரி செய்வதற்கான மனநிலைகள், செயல்பாடுகளையும் இனம் காண “இறையழைத்தல் வாரம்” பயன்படுகிறது.
இன்றைய பெற்றோர்கள் கனவுகளை நிறைய சுமப்பவர்கள். தங்களைப் பற்றி அல்ல . . . தமக் கென்று உள்ள ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளைப்பற்றித் தான் அக்கனவுகள். ஆங்கில வழிக் கல்வி கற்று நிறைய மதிப் பெண் களுடன் வெற்றி பெற்று பெரிய நிறுவனங்களில் வேலை செய்து வெளிநாடுகளுக்கும் சென்று சம்பாதித்து கைநிறைய பணத் துடன், எல்லா வசதிகளுடனும் வாழ வேண்டும் என எண்ணி பிள்ளைகளை வளர்க்கிறார்கள். இதற்காக பல்வேறு தியாகங் களையும், துன்பங்களையும்கூட தாங்கிக் கொள்கின்றனர். இவர்களைத் தாண்டிய நிறைவின் எண்ணத்தை அவர்கள் மறந் திருக்கலாம். தம் பிள்ளைகள் இச்சமூகத்திற்கென்று, திருச்சபைக்கென்று என்ன செய்யக் காத்திருக்கிறார்கள்? தம் பிள்ளைகள் வளர்ந்துவிட்ட பின் இவர்கள் யாரை வளர்த்துவிடப் போகிறார்கள்? தமக்கு மட்டுமே இவ்வாழ்வை வைத்துக் கொள்ளப் போகிறார்களா? இல்லை பிறருக்காய் உழைக்கும் மன நிலையில் வளரப் போகிறார்களா? “பிறர் வாழ” என்ற எண்ணத்தைப் பெறாத பிள்ளைகள்தான் பிற்காலத்தில் சமூகத்தையும், திருச்சபையையும் மட்டுமல்ல தம்மை வளர்த்தெடுத்த பெற்றோ ரையோ, உடன்பிறப்புக் களையோ கண்டு கொள்ளாமல் அவர்களையே “பிறராக” -‘அயலாராக’க் கருதி “நான் என்ன அவர்களுக்குக் காவலாளியா?” என்று கூறிவிடுகின்றனர். பெற்றோர்கள் இச்சிந்தனையைப் பெரிதென நினைத்துப் பார்க்காமல் மறந்துவிட்டால் நிச்சயம் தம் பிள்ளைகளைப் பிறர் நல கண்ணோட்டத்திலோ இறையழைத்தல் சிந்தனையிலோ வளர்க்க முடியாது. குடும்பங்கள் இறையழைத்தல் விதையைத் தூவும் முதல் கருவியாய் அமைய பெற்றோர் உழைக்க வேண்டும்.
இளையோர்கள்,
நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பினும் விருப்பத்தையயல்லாம் முறியடிக்கிற காரணங்கள், தீமைகள் பலவற்றில் சிக்கித் தவிப் பவர்களாய் மாறிவிடுகின்றனர். தொடர்ந்து உயரிய இலட்சியப் போக்கு உருவாக்குவதைத் தடுக்கும் பல காரணிகள் அவர்களைச் சுற்றி வந்து வீழ்த்துகின்றன. தம் உயரிய வாழ்வு பற்றிய கனவு ஒருபுறம் இருப்பினும் அதுவும் சுயநலத்தோடு மட்டும், தன் உயர்வு என்பதோடு மட்டும் நின்றுவிடுகிற நிலை பலரிடம் உள்ளது. “நான் பிறருக்காய் என்ன செய்ய வேண்டும்?” என்ற சிந்தனையோடு இன்றைய இளைஞர்கள் வளரவேண்டும் என்பதும் அதனால் வருகிற சவால்களைத் தாங்கிடவேண்டும் என்பதும் நம் வாழ்த்தாய் உள்ளது. இன்று பிறருக்காய்ப் பணி செய்வோரைவிட நான் சிறப்பாக உழைக்கத் தயார் என்று தம்மை ஒப்படைக்கிறவர்கள் எழுந்து வரவேண்டும் என வாழ்த்துகிறோம். இப்படி நல்லன செய்ய தம்மை ஒப்படைக்கும்போது என் நண்பர் என்னை எப்படி பார்ப்பார்களோ என்ற பய உணர்வையும் தாண்டி நிற்கும் நிலை தேவை.
இறையழைத்தலை மேன்மைப்படுத்தும் பல குருக்கள், துறவிகள் பல சமயங்களில் அங்கலாய்ப்பது உண்டு. “எந்தப் பையனும் பொண்ணும் இன்று துறவற வாழ்வுக்கு வரத் தயாராக இல்லையே . . . ! நாம சொல்லி கேட்க மாட்டேங்குறாங்க” என்ற சோகமான ஏமாற்றம். குருக்களின் ஆண்டில் கொண்டாடப்படுகிறது 47வது இறையழைத்தல் வாரத்திற்கென்று நம் திருத் தந்தை தந்துள்ள செய்தி நினைவு கூரப்பட வேண்டிய ஒன்று. “Witness arises Vocation” என்கிற மையப் பொருளில் அவர் தருகிற செய்தி இன்றைய குருக்கள், துறவறத்தார், இறையழைத்தல் ஊக்குனர்களைச் சவாலுக்கு உட்படுத்துகிறது. “சாட்சிய வாழ்வு” என்பதையே இச்சமூகம் நம்மிடமிருந்து எதிர்பார்க் கின்றது. இன்றைய இறைப்பணி ஏற்றுள்ள பல குருக்கள், துறவிகள் தம்முடைய அழைத்தல் தமக்கு வழிகாட்டிய துறவறத் தாரின் வாழ்வைப் பார்த்ததால் தான் ஏற்பட்டது என்று கூறுவது உண்டு. நம்முடைய அழைத் தலுக்கு இப்படி ஒரு காரணம் உள்ளது என்றால் அதே நிலை வாழ்வை, சாட்சியத்தை ஏன் நாம் நமக்குப் பின்வருபவர் களுக்குத் தர மறந்து விடுகிறோம். வார்த்தைகளின் பொருட்டல்ல செயல்களைப் பார்த்து வாழ்வின் நிலை உணர்ந்து துறவற, குருத்துவத்திற்கு பதில் தர நினைப்பவரே அதிகம். இன்றைய இறைப் பணியாளர்கள் வாழ்வு நிலை மாறவேண்டும் என்பதும், அவ்வாழ்வுதான் இளையோரைத் துறவு வாழ்வுக்குக் கொணரும் என்பதும் இந்த இறையழைத்தல் வாரத்தில் குருக்கள், துறவிகள் சிந்திக்க வேண்டிய ஒன்று. பிறர் நலம் நாடாது, முழு அர்ப்பணிப்பு இல்லாத, பழி, பகை உணர்வுகள் நிறைந்த வாழ்வுக்கு இன்று யாரும் தம்மை ஒப்படைக்கத் தயாராயில்லை. சாதிக்க வேண்டியதும் பிறருக்காய் வாழ வேண்டியதும் நிறைய உள்ளன. சொற்கள் கடந்த சிந்தனை, தன்னலம் தாண்டிய வாழ்வு, சான்று பகரும் உண்மை இவையே பிறர் நம்மை நோக்கி வரச் செய்யும்.
கடமை உணர்ந்து பெற்றோரும் தம்மை அர்ப்பணித்து, இளை யோரும் உண்மையில் வாழ்ந்து, குருக்களும் துறவிகளும் இணைந்து இறையழைத்தலை உன்னதமாக்குவோம். தாம் விரும்பி அழைப்பவர்களை அவரே கூட்டிச் சேர்ப்பார்.
சே. சகாய ஜாண்
0 comments:
Post a Comment