ஒவ்வொரு மனிதனும் ‘கடவுள்’
பறைசாற்றுகிறது ஒரு கூட்டம்
‘கடவுள்’ என்றால் உன் அகராதியில்
பொருள் என்ன?
இங்கே ‘மனிதக் கடவுளர்கள்’ எல்லாம்
மெய்க்கடவுளின் மறு ரூபங்களா?
வந்த எந்த கடவுள் இங்கே உயிர்த்தான்?
உயிர்ப்பு பொய்க்கை என்றால்
உன் விஞ்ஞானம் பொய்
மூளையில் பத்து விழுக்காடு
அனைத்தையும் அறிந்திடாது
அப்படி பயன்படுத்தியவர்களே
இறைவனில் அடக்கம்
பொய்க்கடவுளர்களையோ
மாயாமால வித்தகர்களையோ
மனதில் கொண்டு ‘மறுவாழ்வு’
இழந்திடாதே!
மிருகம் மனிதர்களாகலாம்
மனிதன் புனிதனாகலாம்
புனிதன் தெய்வமாகலாம்
மாசற்ற தெய்வம் இயேசுவை
முழுமையாக விசுவசித்தால்!
அவரின்றி எதுவும் இல்லை இவ்வுலகில்!
வரப்போகும் பொல்லாப்பினின்று தப்புவிக்க
மனமாற்றம் காண் - பாவப்பரிகாரம் தேடு!
பவனியாய் வரும் மனுக்குல இரட்சகரை
முகம் முகமாய் தரிசிப்பாய்!
புதுவாழ்வு பெறுவாய்!!
இது நிச்சயம் !!!
ச. செல்வராஜ், விழுப்புரம்


0 comments:
Post a Comment