புனிதம் கொடுக்கும் பூக்கள் - இரண்டு
ஒன்று செபிப்பு மற்றது
கணிச மான உழைப்பு - இதனைக்
கருத்தில் கொள்ள வேண்டுமே
சேசு பகலில் இடைவிடாது - உழைப்பு
இரவில் துயிலாது செபிப்பு
மாசும் மருவும் இல்லாதவர் - புகட்டும்
மாபாடம் நாமும் கற்கணும்
இந்தப் பாடம் கற்றாலே - உண்டு
வெற்றி நமக்கு உணர்வீரே
மந்தப் புத்தி உள்ளோரும் - இந்த
வழியைப் பின்பற்றி வாழுவோம்
புனிதர் நிரலில் இடம்பெற - இந்தப்
பூக்கள் மிகவும் முக்கியம்
மனிதரைப் புனிதப் படுத்தும் - உறுதி
மனதில் இதனைக் கொள்ளுவோம்
இறைவன் இயேசு காட்டிய - பாதை
இதனைப் போற்றி வாழுவோம்
நிறைவு வாழ்வு பெறுவோம் - வாழ்வில்
நீடித்த நன்மை அடைவோம்
தூயப் படுத்தும் பூக்கள்தான் - புனிதர்
போற்றி வாழ்ந்த மலர்கள்தான்
நேய மாக கைக்கொண்டு - நாமும்
நேர்த்தி யாக வாழ்ந்திடுவோம்!
கவிஞர் பெஸ்கிதாசன்
0 comments:
Post a Comment