கன்னி மறைசாட்சி (கி.பி. 1890 - 1902)
2,50,000 மக்கள் இவரது புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் திருநகருக்கு வருகை தந்தனர். கல்வி கற்குமளவுக்கு வீட்டில் வசதி இல்லாமல் போய்விட்டது. 12 வயதில் இவருக்குப் புதுநன்மை கொடுக்கும்போது கூட மற்றவர்களைவிட எளிமைத்தனத்தில் இருந்தார். ஆனால் தாய் இவருக்கு ஊட்டி வந்த ஞானச் சத்துணவு பிரமாதம்.
புதுநன்மைக்குப் பின் 5 வாரங்கள் கழியவில்லை. அலெக்சாண்ட்ரோ யஸரனெல்லா என்ற 18 வயது இளைஞன், மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார் என்ற ஆத்திரத்தில், பலமுறை அவரது மென்மையான உடலைக் குத்தினான். “இது பாவம்; இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்” என்று எச்சரித்தும் பலனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட அவர் மருத்துவ மனையில் 24 மணி நேரம் கழித்து உயிர் நீத்தார். ‘மன்னித்து விட்டேன்’ என்று கூறினார். 30 ஆண்டுகள் அவனுக்குச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. பல காலமாக மனந் திரும்ப மனமில்லாத அவன் திடீரென பாவ மன்னிப்பை மன்றாடினான். மரிய கொரற்றி விண்ணின்று மலர்களைத் தன் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டேன் என அறிவித்தான். கப்புச்சின் 3ஆம் சபைத் துறவியாக வாழ்ந்து 1970-இல் மரித்தார். 50 ஆண்டுகளுக்குள் மரியாளுக்கு 12ஆம் பத்திநாதர் புனிதர் பட்டம் கொடுத்தார். அருகில் மரியாளின் தாயும், 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உடனிருந்தனர். புனிதர் பட்டம் கொடுப்பதைப் பார்க்க மண்டியிட்டு இருந்த கூட்டத்தில் அலெக்சாண்ரோவும் பங்குபெற்று மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினார்.
எட்வர்டு
0 comments:
Post a Comment