புனித தோமையார் - இந்தியாவின் அப்போஸ்தலர் July 3

“என் ஆண்டவரே என் கடவுளே” என்று விசுவாசப் பிரமாணம் எழுப்பியது போல் வேறு யாரும் அவ்வளவு மனம் விட்டு அறிக்கை யிட்டதில்லை.  இவரால் கிறிஸ்த வர்களுக்கு ஓர் உருக்கமான ஜெபம் அமைந்துவிட்டது.  இச்செபம் காலம் எல்லாம் சொல்லப்படும் என்பதில் ஐயமில்லை.  அதோடு நமது எளிய விசுவாசத்தை மதித்து, “காணாமல் விசுவசிப்போர் பேறு பெற்றோர்” என்று ஆண்டவர் பாராட்டும் ஒரு வாய்ப் பினையும் பெற்றுக் கொண்டோம்.
தோமையார் கலிலேயாவில் யூத குலத்தில் மீனவர் குடியில் தோன்றி, அதே தொழிலைச் செய்தார்.  ஆழ்ந்த தெய்வ பக்தியுள்ளவர்.  இயேசுவைக் கண்டடைந்ததும் அவரே உலக மீட்பர் என்று விசுவசித்து அவருக்கும் சீடரானார்.  பின்னர் இந்திய நாட்டுக்கு வந்து போதித்து, பல்லாயிரம் பேருக்குத் திருமுழுக்கு அளித்து, மறைபரப்பியதன் காரணமாக வேத விரோதிகளால் இறுதியில் மயிலாப்பூரில் கொல்லப் பட்டார்.
“ஆண்டவரைக் காணாமல் இருந்தாலும் விசுவாசத்தில் தளர்ச்சி அடையாமல் அதில் வளர்ச்சி பெற முயல்வோம்”




தொகுப்பு : எட்வர்டு

0 comments:

Post a Comment