ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவையிரண்டும் திருச்சபையால் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப் படாமலேயே இருக்கின்றன. இந்தக் குருக்கள் ஆண்டிலிருந்தாவது இவை களையப்பட்டு அருட் பணியாளர்களின் முன்மாதிரியான வாழ்க்கை முறை, பணித்திறன்கள், இறைமக்களுக்காக உழைப்பதில் காணும் நிறைவு ஆகியவைகள் அங்கீகரிக்கப்பட்டு அது அடுத்த வருக்கும் வழிகாட்டுதலாய் அமைய பாராட்டுதலும் பறை சாற்றுதலும் நடத்திட திருச்சபை முன்முயற்சிகள் எடுக்க வேண்டும்.
பாராட்டுக்கள் பலரின் பணி வாழ்வை ஊக்கப்படுத்தும். பறை சாற்றுதல் பலருக்கும் பாதையைக் காட்டும்.
பல்வேறு நிர்வாகங்களில் நடத்தப்படும் பணி மதிப்பீடு முறை போன்று (மூலிணு ழிஸ்ரீஸ்ரீrழிஷ்விழியி) திருச்சபையிலும் ஒவ்வொரு மறைமாவட்ட அளவில் வருடத்திற்கொரு முறை இதனை மேற்கொள்ளலாம்.
நாம் ஏற்கனவே சுட்டியிருந்த மறைமாவட்ட வழிகாட்டும் குழுவே இந்தப் பணியினையும் செய்திடலாம். ஆனால் அப்படி செய்திடும்போது அந்தந்தப் பங்கின் மக்கள் இந்த மதிப்பீட்டு முறையில் அதிகம் பங்குபெற வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும்.
ஒரு அருட்பணியாளரின் தனிச் செப வாழ்வு, திருப்பலி மற்றும் அருட்சாதனப் பணிகளில் காட்டும் ஈடுபாடு, மணத்துறவு குறித்த நிலை, எளிமையான வாழ்வு போன்ற அவரின் தனிவாழ்வு குறித்த செயல்களுக்கும், வீடுகள் சந்திப்பு, மக்களுக்காகப் பணி செய்ய ஒதுக்கிடும் நேரம், பங்குப் பேரவை, பங்கு நிதிக்குழு, அன்பியங்கள் போன்ற மக்கள் அமைப்புகளை அமைப்பதில், மேம்படுத்துவதில் காட்டும் உண்மையான உறுதி நிலை, பங்கு நிதி சார்ந்த விசயங்களில் வெளிப்படுத்தும் ஒளிவுமறைவற்ற தன்மை போன்ற அவர்தம் பணி வாழ்வு குறித்த செயல் களுக்கும் அளவீடுகள் மற்றும் மதிப் பெண்கள் வழங்கப் பட மதிப்பீட்டுத் தாள்களைத் தயாரித்து அவர் பணி செய்யும் தலத்திலுள்ள மக்களிடம் கொடுத்து கருத்துக் கணிப்புகள் நடத்தி இந்த மதிப்பீட்டைச் செய்யலாம். ஒரு பங்கில் உள்ள எல்லா மக்களிடமும் இவை கொடுக்கப்பட முடியா விட்டாலும், தேர்ந்தெடுக்கப் பட்ட, ஓரளவு விபரமறிந்த, நேர்மையான மக்களை அடையாளங்கண்டு அவர்களிடம் இக்கருத்துக் கணிப்பை நடத்தலாம். அதனை மறைமாவட்ட வழிகாட்டும் குழு முன்னின்று செய்யலாம்.
ஒரு குருவானவர் என்கிற முறையில் தனக்குரிய சாதாரண கடமைகளை நிறை வேற்றுவதுடன் நில்லாமல், மக்கள் நலனை மையப்படுத்தி ஒரு அருட்தந்தை எடுக்கும் ஒவ்வொரு முன்முயற்சிக்கும் தனித்தனி மதிப்பெண்கள் வழங்கி அவரைப் பாராட்டலாம். உதாரணமாக பக்திப் பாடல் ளீம் வெளியிடுவது, புத்தகங்கள் எழுதி வெளியிடுவது போன்ற தனிப்பட்ட திறமையான செயல்பாடுகளுக்குச் சிறப்புக் கவனம் கொடுத்து மதிப்பீட்டிற்கு வலு சேர்க்கலாம். அத்தகைய முன்முயற்சிகள் ஒருவரின் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக மட்டும் இருந்து விடாது மக்களின் வாழ்வினை மேம்படுத்தும் காரணியாக இருப்பதை உறுதி செய்து அதற்கேற்ப மதிப்பெண்கள் வழங்கி அவர்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.
இம்மதிப்பீட்டில் மறைமாவட்ட அளவில் முதல் பத்து இடங்களைப் பெறும் அருட்பணியாளர்களின் சாட்சிய வாழ்வினைத் தொகுத்து பதிவுசெய்து புத்தகங்களாக்கி வெளியிடலாம். அவர்கள் வாழும் புனிதர் களாய் மக்களுக்கு வழிகாட்டி நிற்பர் . . .
முதல் பத்து இடங்களில் தொடர்ந்து இடம் பெறும் அருட்பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை வட்டார அதிபர், ஆலோசனைக் குழு உறுப்பினர் (ளீலிஐவிற்யிமி னிeதுணுer), குருகுல முதல்வர், ஆயர் போன்ற பல உயர்பணிகளை வழங்கி சிறப்பு செய்யலாம். பங்களவில் தம் நேரிய செயல்பாட்டால் மக்களிடம் பெயரும் புகழும் அடைந்தவர்களே இந்தப் பொறுப்புகளுக்குரியவர்களாக வர இடம் தரும் வகையில் அமைக்கும்பொழுது அந்தப் பெறுப்புகளுக்கே தனிச்சிறப்பும், மரியாதையும் நிச்சயம் கிடைக்கும். மறை மாவட்டங்களில் ஒவ்வொரு வருடமும் குருக்களுக்கான பணி மாற்றத்தின்போது ஏற்படும் முரண்பாடுகளும் முனகல்களும் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.
இவையயல்லாம் சாத்தியமா? என்கிற சந்தேகம் வரலாம். இன்று இருக்கும் நிர்வாக முறைகளில் செயல்பாடுகளில் ஏற்படும் அநீத பிரச்சனைகளை அப்படியே அருகில் வைத்துக்கொண்டே அதிக நாட்கள் வண்டியை நகர்த்த முடியாது. இந்தப் பிரச்சனைகள் நமக்குக் காட்டும் ஓர் எச்சரிக்கை ஒலி “அணுகு முறைகளில் மாற்றம் செய்யுங்கள்” என்பதே. எனவே அந்த வகையில் இப்படியயல்லாம் ஒரு சில முன்முயற்சிகள் எடுக்கும் போது அவை மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பியே இந்த ஆலோசனைகள் முன்வைக்கப் படுகின்றன. திறந்த மனமும். திருச்சபையின்பால் அக்கறையும் இருந்தால் இவை சாத்தியமே.
இதில் சிறுசிறு குறைகள் வரினும் அவைகளும் மாற்றம் செய்யக் கூடியவையே. ஆனால் மக்களால் மக்களுக்காக மக்களே என்கிற அளவில் திருச்சபையும் ஒரு மக்கள் அமைப்பே என்கிற விதையை இவ்வுலகில் விதைத்து விட இதுபோன்ற முன் முயற்சிகள் முகாந்திரமாய் அமைந்திடும்.
எஸ். எரோணிமுஸ்
0 comments:
Post a Comment