‘அழகிய தீயே’, ‘ மொழி’, ‘அபியும் நானும்’ போன்ற பல வெற்றிப் படங்களை, தத்ரூபமான படங்களை, தமிழ் மொழிக்குத் தந்து பெருமை கலந்த களைப்பில் இருந்தனர் இயக்குநர் ராதா மோகனும், தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜும். இப்படங்களின் வெற்றிகளை எல்லாம் வித்தியாச மாக கொண்டாட விரும்பி னார்கள். பிரம்மாண்ட அரங்குகள், பளபளக்கும் நட்சத்திரக் கூட்டம், கண்ணை கூச வைக்கும் வண்ண விளக்குகள் இப்படி எதுவும் இல்லாமல் மிகவும் சாதாரண முறையில் வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டும். அதுவும் பேசப்படும்படிக்கு இருக்க வேண்டும் என தீர்மானித்து திட்டமிட்டார்கள்.
நிசப்தமான கொண்டாட்டத்திற்காக நீலகிரி மலையைத் தங்களின் விழா மேடையாகக் கொண்டார்கள். இப்படங்களில் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், உதவியாளர்கள் இப்படி ஒருவரையும் விட்டுவிடாமல் அவர்கள் குடும்பத்தினரோடு ஒரு பெரும் பரிவார மாகக் கிளம்பினார்கள். பயணம் ஆனந்தமாக இருந்தது. அமர்க்கள மாகவும் இருந்தது, உதகை நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு தற்காலிக ஊரையே அமைத்து அதில் தங்கி சில நாட்களைக் கழித்தார்கள். அப்போது தான் அவர்கள் இருந்த இடத்தின் சற்றுத் தொலைவில் ஒரு பெரிய ஆசிரமம் இயற்கை சூழலிலேயே நடப்பதாகக் கேள்விப்பட்டு அந்த இடம் தங்கள் நிகழ்ச்சிக்கு அமைப்பாக இருக்கும் எனத் தீர்மானித்து அவ்விடத்தில் விழா நடத்த முற்பட்டார்கள்.
அங்கே, இருப்பவர்களுக்கும் அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்பினார்கள். ஆசிரம நிர்வாகிகளைச் சந்தித்து அனுமதி பெற்றனர். ஆசிரம வளாகம் மிகவும் அழகாக ஜோடிக்கப்பட்டது. வயது வித்தியாசமின்றி மாற்றுத் திறனாளிகள், மனவளர்ச்சி அற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர், வயதானதால் விலக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகள் எனப் பலதரப்பட்ட மக்கள் அங்கு இருந்தனர். இவர்களைச் சந்தோப்படுத்துவதே தங்களின் வெற்றிக் கொண்டாட்டமாக இருக்குமென அவர்கள் நம்பினார்கள். ஆனால் அவர்களால் இவர்கள் வாழ்வு புரட்டிப் போடப்படும் என்று நினைக்கவில்லை.
விழா நாளன்று அனைவரும் வளாகத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களின் சவாலான மனநிலையைக் கண்டு வந்திருந்தவர்கள் வியந்துப் போயினர். விளையாட்டுகளும், போட்டிகளும், பட்டிமன்றங்களும், நகைச்சுவை நிகழ்ச்சிகளும் எனப் பல சிறப்பம்சங்கள் இருந்தன. எல்லோரும் உற்சாகமாக கலந்து கொண்டு பரிசுகள் வென்றனர். சென்னையின் பரபரப்பில், உஷ்ணத்தில், ஓய்வு ஒழிசலில்லாத உழைப்பில், கூட்ட நெரிசலில் அலைக்கழிக்கப்பட்டிருந்த படப்பிடிப்புக் குழுவினருக்குக்கூட இவ்வனுபவம் வித்தியாசமாக சந்தோ மாக இருந்தது.
அன்று மதியம் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடனான கலந்துரை யாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லோர் முன்னிலையில் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்க அவர்களிடம் நேயர்கள் பல கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது அக்கூட்டத்திலிருந்த, முகம் விகாரமான ஒருவர் எழுந்து கேட்டார், “ஐயா, நீங்க திரையில் அழகா இருக்கிற வர்களை, எந்த உடல் குறைபாடும் இல்லா தவர்களைக் கொண்டு படம் பண்ணி சாதிக்கிறீர்கள். ஆனால் இங்கே இருப்பவர் களைப் போல, சாதிக்கத் துடிக்கும் ஆசையுள்ளவர்களை ஏன் பயன்படுத்த மாட்டோம் என்கிறீர்கள். இவர்கள் குறை யுள்ள மனிதர்கள் என்பதாலா. ஆயினும் இவர்களும் மனிதர்கள்தானே. இவர்களுக்கும் அப்படிப்பட்ட ஆசைகள் இருக்கத்தானே இருக்கும். பல சாதனைகளைத் தந்துள்ள நீங்கள் ஏன் இப்படி ஒரு சாதனையைச் செய்யக்கூடாது? இது உங்கள் உண்மையான சாதனையாக அமையும் தானே. உண்மையிலேயே நீங்கள் உலக மெங்கும் பேசப்படுவீர்களே, செய்வீர்களா?” எனக் கேட்டு அமர்ந்து விட்டார்.
உடனே பதில் சொல்ல முடிய வில்லை அவர்களால். மனதிற்குள் யோசனை குடைய ஆரம்பித்தது. ‘ஏன்? செய்தால் என்ன?’ என யோசித்தார்கள். தங்களுடைய எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்தார்கள். கதைக்களம் உருவாக்கப்பட்டது. இரவும் பகலும் யோசித்து அழகான கதை உருவானது. கதைக்கேற்ற இசை உருவெடுத்தது. அந்த ஆசிரமத்திலிருந்தே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். ஒப்பனைகளை கட்டின. ஆடை அலங்காரங்கள் அசத்தின. பேசப்பட்ட வசனங்கள் உள்ளத்தின் குமுறலாக வெளிப்பட்டன. இசை உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்தது. கடின உழைப்பும், உண்மையான திறமையும் ஒன்று கலந்து ஒரு பெரிய வெற்றிப்படம் சரித்திரமாக, சாதனையாக ஒரே மாதத்தில் உருவானது. வெற்றிவிழா கொண்டாட வந்தவர்கள் ஒரு வெற்றிச் சரித்திரத்தைப் படைத்துவிட்டு ஊருக்குத் திரும்பினார்கள். ஆசிரமக்காரர்களும் உள்ளூர்வாசிகளும் கண்ணீருடன் விடைதர, படப்பிடிப்புக் குழுவினர் கண்ணீருடன் விடை பெற்றனர்.
சென்னை சென்ற ஒருசில வாரங்களில் படம் திரையிடப்பட்டது. திரையிடப் பட்ட அரங்கெல்லாம் உண்மை உணர்வு களைக் காண மக்கள் வெள்ளமென திரண்டனர். கண்ணீர் மல்க படம் பார்த்து வந்தனர். தன் சக மனிதனை சிநேகிக்கும் உணர்வு ஒவ்வொருவருள்ளும் ஊற்றாக ஊறியது. மனதாலும் உடலாலும் ஊனப்பட்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட்டன. அரசின் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. தமிழக அரசின் பல வெற்றி விருதுகளை வாங்கிக் குவித்தது. படப்பிடிப்பினருக்குப் பாராட்டு மழை குவிந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் படம் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டது. உச்சக்கட்டமாக இந்திய அரசின் திரைப்படத் துறைக்கு மகுடமாக விளங்கிய தங்கத்தாமரை விருது அப்படத்திற்குக் கிடைத்தது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் தங்க மகுடத்தில் வைரமாகப் பதிக்கப்பட்டது அப்பட வெற்றி. ஒரு சின்னக் கேள்வி படைத்த வெற்றிச் சரித்திரம் வியக்க வைத்தது.
0 comments:
Post a Comment