வாழ்க்கையிலே சரியான முடிவுகள் எடுப்பதற்கு....


அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டு அதுக்கப்புறம் அல்லாடுறவங்க நிறைய பேர் உண்டு இந்த உலகத்துலே.

எட்வர்டு. டி. போனா-ன்னு ஒருத்தர்.‘Lateral Thinking’ - என்று சிந்தனையிலே ஒரு புதிய பாணி வார்த்தையை உருவாக்கினதே இவர் தானாம்.

வாழ்க்கையிலே சரியான முடிவுகள் எடுப்பதற்கு இவரது கருத்து மிகவும் உபயோகமாக இருக்கும்.   

முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதெல்லாம் கற்பனைத் தொப்பிகள் ஆறையும் ஒன்றன்பின் ஒன்றாக மாட்டிக்கொண்டுதான் முடிவெடுக்கணுமாம்.

முதல்லே வெள்ளைத் தொப்பி : தகவல்களைத் திரட்டறதுதான் இந்தத் தொப்பியின் வேலை.

அடுத்து பச்சைத் தொப்பி : கிடைச்ச தகவல்களை வச்சி புதுப்புது ஐடியாக்களை உற்பத்தி செய்யும்.

அடுத்து மஞ்சள் தொப்பி : பச்சை தொப்பி கொடுத்த சிந்தனைகளில் எதெல்லாம் நடைமுறைக்குச் சரிப்பட்டு வரும்ங்கறதை சரியாக இனம் கண்டு மற்ற சிந்தனைகளையயல்லாம் வடிகட்டும்.

அடுத்து கருப்புத் தொப்பி : நியாய தர்மங்களைப் பாதுகாக்கும் தொப்பி. 
இதுக்கு அடுத்து சிவப்புத் தொப்பி : இது ஏதோ என் மனசுக்குப்படுது - இது சரியா வரும் - இப்படிச் சொல்லுவோம் இல்லையா?  இந்த உள்ளுணர்வு (Intuition) தான் இந்தத் தொப்பி.

கடைசியாக நீலத் தொப்பி : இது மற்ற ஐந்து தொப்பிகள் எடுக்கும் முடிவுகளை ஆராய்ந்து சரியான முடிவு எடுக்கும் தொப்பி.

இத்தனை தொப்பிகள் கூறுவதையும் நாம வரிசைப்படுத்தி, உபயோகப்படாத யோசனைகளை ஒதுக்கி, நடைமுறைக்கு தேவையானதை எடுத்து, மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதைத் தவிர்த்து, நம் உள்ளுணர்வு சொல்வதைப் பார்க்கணும்.  பிறகு நல்ல முடிவுக்கு வரணும்.

இவை அனைத்திற்கும் மேலாக நமது மனசு தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.  இதுதான் இத்தொப்பிகளின் முக்கிய கருத்து.நமக்கு வரும் எதிர் மறையானவற்றை எதிர்கொள்ள தெளிந்த சிந்தனையை வளர்ப்போம்!

நன்றி. தகவல் களஞ்சியம்

0 comments:

Post a Comment