இயேசுவின் உயிர்ப்பு வெறும் கட்டுக்கதையா?

சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார்.  வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்” (எபி 2:14)
 கதை : 1 இயேசு தம் சீடர்களிடம் நான் சிலுவையில் அறையப்படுவேன்பிறகு இறந்தவனைப்போல் பாவனை செய்வேன்நான் மரணம் அடைந்துவிட்டதாக எண்ணிப் படைவீரர்கள் எனது கால்களை முறிக்காமல் போய்விடுவார்கள்உடனே நீங்கள் என்னைச் சிலுவையிலே இருந்து இறக்கி எனது உடலை ஒளித்து வைத்து விடுங்கள்தப்பிவிடலாம்!என்று ஏற்பாடு ஒன்று கமுக்கமாக இருந்தது.  அவர் உயிர் பெற்று எழுந்து விண்ணகம் சென்றுவிட்டார் என்று பரப்பிவிட்டால் யாரும் உடலைத் தேடமாட்டார்கள் என்று கதை!  பரிசேயர்கள், யூதகுல மூப்பர்கள் மூளையில் உதித்த கதை; இயேசு ரத்தமும் சதையுமுள்ளவராக உயிருடன் எழுப்பப்பட்டதை மறைக்கப் புனைவு செய்த கதை!  
கதை : 2 சித்திரவதை செய்து கொல்லப் பட்ட மனிதன் மீண்டும் உயிர்பெற்று எழுந்தார் என்று கூறிப் பரப்புவது போன்ற காதில் பூ சுற்றும் கலைக்கு நிகர் வேறில்லை.  எவன் நம்புவான்என்ன ஆதாரம்எங்காவது இறந்தவன் உயிர்பெற்று எழுவதுண்டாஇது ஆதிக்கதை உச்சம் - இயேசுவைப் பற்றி முழுமையாய் அறிந்திறாத எல்லோர் மனத்திலும் நுனிப்புல் மேய்ந்த பசுப்போன்றவர் மனத்துளும் எழும் கேள்விகளது வாழ்வுக்கதை இது!  ஆனால் . . .  ஹார்வர்ட் பல்கலைக் கழகச் சட்டப் பேராசிரியரும் இங்கிலாந்து நாட்டின் நோட்டிங் ஹாம் என்கிற இடத்திலுள்ள தூயயோவான் கல்லூரி முதல்வருமான முனைவர் மைக்கல் கிரீன் லீப் உலக புகழ்மிக்க சட்ட சாட்சியர் தொகுதி” (Observation of History and evidence of the resurrection of Jesus) என்னும் நூலாசிரியர் இயேசு உயிர்த்ததற் கான சாட்சியம் பற்றிய ஆய்வில் ஈடுபடுகையில் மேற்குறிப்பிட்டவாறு இயேசுவின் உயிர்ப்பு வெறும் கட்டுக்கதை என்று கருதினார்.  ஆனால் திருவிவிலியத்தை ஆழமாகப் படித்து, நுனித்து, ஆராய்ந்து, தோய்ந்து. ஆழ்ந்து சிந்தித்தபின் திருவிவிலிய எழுத்தாளர்கள் நால்வரும், தூய பவுலடியாரும் எழுதிய பதிவுகளில் மறுக்க முடியாத ஆதாரமுள்ள உயிருள்ள சாட்சிகள் உண்டு என்று கண்டறிந்தார்.  உயிர்ப்பு குறித்த ஐயத்திலிருந்து உண்மை அவரை விடுதலை செய்தது.  ஆக்சுபோர்டு பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் அவரைப் போலவே மறுத்துவந்து பின் உண்மை ஆதாரங்களை அறிந்து உணர்ந்து மனம் மாறினர் - முனைவர் மைக்கல் கிரீன் எழுதினார்:
இயேசு உயிர்க்கவில்லை என்றால் அவருடன் வாழ்ந்த சீடர்கள் ஓர் உண்மையை உறுதிப்படுத்தியிருக்க முடியாது! ஏனென்றால் அந்த உண்மையை உலகறியச் சாட்சியம் கூறியதற்காக அவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்மறுத்துக் கூறுமாறு சிறையில் அடைக்கப் பட்டார்கள்உண்மைக்குச் சான்று பகர உயிரையும் கொடுத்தார்கள்” - உயிர்ப்புக்கு உயிருள்ள சாட்சிகள் அவர்களே என்கிறார். 
இயேசு ஓர் போலி மெசியாதந்தை யாவேயைப் பழித்துப் பேசியவர்அவரது பெயரால் உருவான கிறிஸ்தவத்தை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும்!என்று முழுமூச்சுடன் செயல்பட்டவர் சவுல்.  உரோமர்களிடமிருந்து கிறிஸ்தவர்கள் யார்கிறிஸ்தவம் பரப்புவோர் யார்என்ற ஆவண விவரங்களுடன் அவர்களைச் சிறைப்பிடித்துக் கொல்ல வேண்டும் என்று தமஸ்கு நோக்கிப் பயணம் செய்த சவுல் உயிர்த்த இயேசுவினால் தடுத்தாளப் பட்டார் கி.பி. 67இல்.  அவர் வாழ்வே உயிர்த்த இயேசுவுக்கு ஆதாரமான சாட்சியம்! என்று எழுதி முனைவர் மைக்கல் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார்.  இயேசு அனைத்து மக்களுக்கும் அல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டும் அவர் காட்சி அளித்தார்’ (திருத்தூதர் 10:41).
இங்கிலாந்து நாட்டுத் தலைமை நீதி அரசர் மேமிகு லார்ட் டார்லிங் கூறுகிறார் : ஏற்கெனவே காணக்கிடைத்துள்ள அளவுக்கு அதிகமான சாட்சியங்கள் பலப்பல.  உடன்பாடான சாட்சியங்கள், சூழ்நிலைச் சாட்சியங்கள், உண்மைச் சாட்சியங்கள் போன்றவற்றின் அடிப்படையில் உலகின் அறிவாற்றல்மிக்க எந்த நீதியரசரும் இயேசு உயிர்த்த செய்தி மெய்யே என்று தீர்ப்பு வழங்கத் தவறமாட்டார்”.
ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைத்தலைவர் பேராசிரியர் தாமஸ் ஆர்னால்டு உரோமானியர் வரலாறுஎன்னும் ஆராய்ச்சி நூலை ஆக்கியவர்.  வரலாற்று விழிகளையே மூடிவிட்டால்தான் இயேசு உயிர்ப்பை மறுக்க முயலமுடியும் என்று எழுதினார்.  வரலாறு குறித்த நோக்குகளும் இயேசு உயிர்த்ததற்கான சான்றுகளும்என்னும் ஆய்வு நூலை வரலாற்று ஆதாரங்களுடன் வெளியிட்டார் (A Treatise on the law of Evidence)).  திருவிவிலியத்தை முழுமையாக வாசித்த எவராலும் இயேசுவின் உயிர்ப்பு ஓர் கட்டுக்கதை என்று கற்பிதம் செய்யவே முடியாது ஏன்?
திருவிவிலிய உயிர்ப்புப் பதிவுகள்
பிறப்பு உண்டெனில் இறப்பும் உண்டு.  பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்ட இருத்தல்தான் மனித வாழ்க்கை.  இதுதான் இயற்கை விதிஇயற்கை நியதி.  இறைமகன் இயேசுவும் இயல்பான மரணம் அடையாமல் கொலை செய்யப்பட்டு இறந்தார்.  தமது உயிரையே விலையாகக் கொடுத்து இறுதித் துளி குருதிவரை பூமியில் சிந்தி மானிடரை மீட்ட மீட்பர் அவர்.  கிறித்தவ அடிப்படை நம்பிக்கையின்படி ஆதாம் ஏவாள் இருவரும் இறைவனது கட்டளையை மீறி குற்றம் - ‘பாவம்செய்தனர்.  அதற்குத் தண்டனையாகச் சாகாமைநிலையை இழந்தனர்மரணம் அடைந்தனர்.  பாவம் மரணம் என்கிற விளைவை ஏற்படுத்தியது.  தந்தையாம் இறைவன் இறந்த இயேசுவின் உடலைப் பிற மானிடர்களது உடல்போல மண்ணுடன் மக்கி அழியுமாறு விட்டுவிடவில்லைமூன்றாம் நாள் அவரை உயிர்பெற்று எழச் செய்தார்.  பாவத்தை ஒழிக்க ஒரே ஒரு முறை இறந்தார்இப்போது அவர் வாழ்கிறார்என்கிறார் பவுல் அடியார் (உரோ 6:11).
உலக மதங்களை நிறுவிய எந்த ஞானியும் உயிர்பெற்று எழுந்ததாக வரலாறு இல்லை!  உலக மதங்கள் பலவும் மறுபிறவி, மறுமரணம் என்று பல்வேறு பிறப்புகள் மனிதரின் நல்வினை - தீவினைகளுக்கு ஏற்ப உண்டு என்று கோட்பாடு கொண்டுள்ளனர்ஆனால் உயிர்ப்புஎன்கிற கோட்பாட்டு உண்மை கிறிஸ்தவத்தில் அடித்தளமாக உள்ளது.  இயேசுவின் உயிர்ப்பு வழியாக எல்லோரும் உயிர்பெற்று எழச்செய்து, அவரில் நம்பிக்கை கொண்டோர் கடவுளுக்கு ஏற்புடையராகி, நிலைவாழ்வு பெறச் செய்கிறது;   கடவுளாகிய அவரது அருளாட்சி! (உரோ 5:21) அவர் உயிர்த் தெழுந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம் (உரோ 6:5). திருவிவிலியம் ஒன்பது பேர் உயிர்பெற்று எழுப்பப்பட்ட நிகழ்வைப் பதிவு செய்துள்ளது.  அந்தப் பதிவுகள் வருமாறு :
1.  உயிர்பெறச் செய்த எலியா :  சிலை வழிபாடு, கடவுளுக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றிலிருந்து மக்களைத் தடுத்த இறைவாக்கினர் எலியா எலியர் சரிபாத்துநகருக்குப் போனார்; அங்கே இறைவழி நடத்துதலின்படி அவருக்கு உணவளித் தவள் ஓர் கைம்பெண்.  அவளுடைய மகன் நோயுற்று இறந்தான்.  கைம்பெண் கதறிய கலக்கம் கண்டு, மாடி அறையில் தனது படுக்கையின்மீது கொண்டுசென்று கிடத்தினார்ஆண்டவரை நோக்கி மன்றாடினார்எலியாவின் குரலைக் கேட்டுச் சிறுவனுக்கு உயிர் திரும்பி வந்ததுஅவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார் (1 அரசர் 17:17-23).
2.  எலியாவின் பதிலாளான இறைவாக்கினர் உயிர்பெறச் செய்த சூனேம் பெண்ணின் மகன் :  மகப்¼று இல்லாத சூனேம் பெண் விருந்தோம்பல் செய்தமைக்குக் கைம்மாறாக வயதான கணவருடன் வாழ்ந்த அவளுக்கு இறைவன் அருளால் குழந்தை பாக்கியம் பெறச் செய்தார்.  அந்தக் குழந்தை சில காலத்தில் இறந்தபோது எலிசா ஆண்டவரை வேண்டி உயிர் மீண்டும் வரச் செய்து தாயிடம் தந்தார்.
3. எலிசா இறந்தபின் அடக்கம் செய்த கல்லறையில் அவரது எலும்புகள் மீது உரசிய சடலம் உயிர் பெற்றது அந்த ஆள் உயிர்பெற்று எழுந்து நின்றான்” (2 அர 13:21).
4.  இயேசு உயிர்பெறச் செய்த இலாசர் : பெத்தானியாவில் நோயுற்று இறந்தார் இலாசர்.  இயேசுவின் நண்பர்.  நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்என்று சீடரிடம் இயேசு கூறினார்.  இலாசரைக் கல்லறையில் வைத்த இடத்திற்குச் சென்று உடன்வந்த மார்த்தாவிடம், “உன் சகோதரன் உயிர்த்து எழுவான்” “இறுதிநாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த் தெழுவான் என்பது எனக்குத் தெரியும்என்று சொல்லாடலில் இறங்குகிறார் அவர்.  இயேசு, “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே!என்கிறார்.  உயிர்த்து எழப் போகிறவர் இயேசு.  அவர்கள் கண்முன் வாழ்ந்து கொண்டிருப்பவரும் இயேசு என்று உணரச் செய்கிறார்.  சாகாமைக்கு வழி எது? என்றும் மனிதர் சாகாமையுடன் வாழும் நிலைப் பற்றியும் முன்னுணர்த்தி விடுகிறார்:  என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.  உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்” (யோவா 11:23-26) என்கிறார்.  இதற்கு என்ன பொருள்தந்தை மாட்சியை எல்லோரும் கண்ணால் காணுமாறு இறந்த இலாசரை உயிரோடு எழச் செய்கிறார்.  உயிர்பெற்று மனிதர் எழப்போவது உண்மை என்பதைத் தாம் வாழ்ந்த உலகில் மனிதனாக வாழ்ந்த நாளிலேயே உயிர்த்தல் சாட்சியமாகக் காணச் செய்தார்.  இறைஇயேசுவை நம்புகிறவர்கள் எல்லோரையுமே மீண்டும் உயிர்பெற்று எழச்செய்து சாகாமையில் நிலைபெறச் செய்யவேண்டும் என்பதே தந்தை விருப்பம் என்று மனிதருக்குக் காட்டிய முன்நிகழ்வே உயிர்ப்புவல்ல செயல்
5.  இயேசு நயீன் எனனும் ஊர் வாயில் அருகே சென்றார்.  கைம்பெண்ணான தாயின் ஒரே மகன் இறந்து அவ்வூர் மக்கள் திரளானோர் சூழ அழுததால் அழாதீர்!என்கிறார்.  இறந்த இளைஞரை எழுந்திரு!என்கிறார்.  இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினான்” (லூக் 7:13-15).
6.  கெரெசனர் பகுதி தொழுகைக் கூடத் தலைவன் மகள் இறந்து போன செய்தி கேட்டு இயேசு பேசிக்கொண் டிருந்த போது வீட்டு ஆள்கள் வந்து கூறினர்.  இயேசு அவர் வீட்டுக்குச் சென்று ஏன் இந்த அமளிஏன் இந்த அழுகைசிறுமி இறக்கவில்லைஉறங்குகிறாள்என்றார்.  எழுந்திடு!என்று சிறுமி அருகில் சென்று கூறியதுமே அச்சிறுமி எழுந்து நடந்தாள்” (மத் 6:41-42).  மக்கள் பெரிதும் மலைத்து, மெய் மறந்து நிற்குமளவு அவள் உயிர்பெற்று எழுந்தாள்.
7.  நன்மை, இரக்கம் ஆகிய பணிகளில் சிறந்த யோப்பா நகரின் தபித்தா என்கிற தொற்கா உடல் நலம் குன்றி இறந்துவிடுகிறாள்.  பேதுருவை அங்கே அழைத்து வருகிறார்கள் கைம்பெண்கள்பேதுரு இறைவனிடம் வேண்டி தபிப்தா, எழுந்திடுஎன்றார்.  உடனேஅவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு எழுந்து உட்கார்ந்தார்.  இறைமக்களையும் கைம் பெண்களையும் கூப்பிட்டு அவர்கள் முன் அவரை உயிருடன் நிறுத்தினார்.  இயேசுவின் உயிர்ப்புக்குப்பின் அவருடைய தலைமைச் சீடர் பேதுரு செய்த உயிரளிப்பு இது (திருத்தூதர் 9:40-41).
8.  தூய பவுல் துரோவா என்னுமிடத்தில் மேல்மாடியில் நள்ளிரவு வரை உரை யாற்றினார்.  மூன்றாம் மாடி விளிம்பில் அமர்ந்து கேட்டுக்கொண்டே உறங்கி விட்டார்  யூத்திரு என்கிற இளைஞர்.  கீழே விழுந்து பிணமானார்.  அழுகை அமளியை அவர் நிறுத்தினார்.  இவர் உயிரோடுதான் இருக்கிறார்என்றார் பவுல்.  உயிர்பெற்ற இளைஞரை அவர்கள் அழைத்துச் சென்று ஆறுதல் அடைந்தார்கள்” (திருத்தூதர் 20:10). “உறங்குவது   போலும்  சாக்காடு;   உறங்கி  விழிப்பது    போலும்   பிறப்பு என்கிறார் திருவள்ளுவர்.  தந்தை இறைவனுக்கு உயிர் கொடுத்து எழுப்புதல் அரிதன்று என்பதற்கான முந்தைய சாட்சியங்கள்; சான்றுகள் இவை.
9.  மனித உருவற்றுச் சித்திரவதை சிலுவைக் கொலைப்பட்ட இயேசு உடலைக் கல்லறையில் இருந்து யாவே இறைவன் எடுத்துக் கொண்டார்.  மேலும் சாவை வென்று தாமாக அவர் உயிர்த்து எழச் செய்தார்.  எல்லா மனிதரும் மீண்டும் உயிர்த்து எழுப்பப்படுவார்கள் என்பது இயேசு அருள்வாக்கு.
உயிர்த்தெழல் பற்றி இயேசுவின் அருள் வாக்கு :  நீங்கள் சாட்சிகள். தன் தந்தைக்கும் தனக்கும் இடையிலான உறவு பற்றி விளக்கமாக இயேசு மொழிந்தவற்றை யோவான் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்: தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழவைப்பதுபோல மகனும் தாம் விரும்பிய வர்களை வாழவைக்கிறார்” (யோவா 5:21) நிலைவாழ்வு உயிர்ப்புக்குப்பின் யாருக்குக் கிட்டும்?  “என் வார்த்தையைக்  கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர்” (யாவே) நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்  (யோவா 5:24)
காலம் வருகிறதுஅப்போது கல்லறை களில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியேவருவர்.  நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த் தெழுவர்தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்பு பெற உயிர்த்தெழுவர் ” (யோவா 5:29).
இயேசு உயிர்த்தெழுந்த உண்மைக்கு 500க்கு மேற்பட்ட சாட்சியங்கள்உயிருள்ளோர் மகதல மரியா முதற்சாட்சி.  கதவைப் பூட்டி உள்ளே அஞ்சி நடுங்கிய சீடர்கள் 11 பேர், எட்டு நாள் பின்னர் தோமா உள்ளிட்ட சீடர்கள், பின்பு திபேரியக் கடல் அருகே பேதுரு, திதிம்தோமா, கான நத்தனியேல், செபதேயு மக்கள், மீண்டும் எம்மாவுஸ் சீடர் இருவர்.  பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார்.  கடைசியில் எனக்கும் தோன்றினார் என்கிறார் பவுல் அடியார்.
உறந்தை குருசில்
முனைவர் அ. அந்தோணி குரூஸ்

0 comments:

Post a Comment