தமிழக இறையழைத்தல் பணியகத்தின் பொறுப்பை ஏற்று, முதல் முறையாக இவ்விதழ் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.  இணைந்து செயல்பட்டு ஒருவர் ஒருவரை உற்சாகப்படுத்தும் பணியில் கடவுள் துணையாயிருந்து நம் பணிகளை வழிநடத்தட்டும்.  இறையழைத்தலுக்குச் செவிமடுக்கும் இம் உள்ங்கள் குறைந்து வரும் சூழலில் நம் பணிகள் கூர்மைப்படுத்தப்பட்டு புதிய செயல்பாடுக¼ளாடு இணைந்து பணியாற்ற வாழ்த்திக் கொள்வோம்.
விண்ணகப் பிறப்பின் 150 ஆண்டுகளை நிறைவு செய்து குருக்களின் பாதுகாவலராகி இன்று குருக்கள் ஆண்டு உருவாகிட காரணமான கதாநாயகனாம் புனித ஜான் மரிய வியானியின் குருத்துவ மேன்மையைப் பாராட்டிப் போற்றுகிறோம்.  அவருடைய இயலாமையில் வலுவைத் தந்த கடவுளை மறந்தாரல்ல.  அவரின் வாழ்வில் வலுவானவை இன்றைய குருக்களின் பணி உயர்வுக்கு ஏற்றவை என்பதை மறவோம்.  குருத்துவத்தின் வலிமை எதில் உள்து  
* உயர்ந்த இடத்தின் பணிகள் 
* மேலான திட்டப்பணியின் முன்னேற்றம் 
* அதிகாரத்தின் வெளிப்பாடுகள். 
* பொருட்கள் / பணம் சேகரிப்பு 
* அறிவில் சிறந்த வர்ச்சி . . .
இவைகள்தாம் குருத்துவத்தின் மேன்மையை உறுதிப்படுத்தும் காரணிகள் என்றோ, வலு சேர்க்கும் பண்புகள் என்றோ யாராவது (தம்மை  அறியாமல் கூட) கருதினால், அது தவறான முடிவு என்பது இப்புனிதரின் பாதை காட்டும் உண்மை.  இன்று பல செயல்பாடுகள் இச்சிந்தனையின் அடிப்படையில் அமைந்து விட்டனவே என குருக்கள் துறவிகளைப் பார்த்து இறை மக்கள் அங்கலாய்த்து நிற்பது புதிதல்ல.
என் அருள் உனக்குப் போதும்;
வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” (2 கொரி 1:2‡9) என்பதுதான் புனித பவுலுக்கு உணர்த்தப்பட்ட உண்மை.
பெரிய சாதனைகளைச் செய்து வரலாறு படைத்தால்தான் அவர்களின் முகவரிகளை உலகம் பாராட்டுகிறது.  ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு தம் சாதாரண வாழ்வால் சாதனையாராகிய புனித ஜான் மரிய வியான்னி, தம் எளிமையையும் உள்ளார்ந்த ஆன்மீகத்தையுமே  தம் வெற்றிப் பாதையாய்க் கண்டார்.  ஆன்மீகத்தின் வலிமையால் கடவு¼ளாடு, மக்க¼ளாடு உள் உறவின் வலிமையாக மாற்றினார்.  தம் ஆன்மீகத்தில்தான் தன்னிலை உணர்ந்தார்.  தம் இயலாமையை ஏற்கும் வலுவும் பெற்றார்.  (தம்மில்) இல்லாதவற்றை இருப்பதாயும், (தாம்) செய்யாதவற்றைத் தான்தான் சாதித்து முடித்ததாகவும் பறைசாற்றி அதில் பெயரும் புகழும், வலுவும் சேர்க்க விரும்பும் இவ்வுலகப் போக்கில், குருத்துவமும் பல வேளைகளில் இச்சோதனைக்கு உள்ளாகி தம் பொய்யான பிரதிபலிப்பால்  சவாலைச் சந்தித்து வருகிறது. இந்தப் பொய்யான சமூகப் போக்கிற்குத் தம்மை உட்படுத்துகிற குருக்கள் நிறைவில்லாத, நிலையில்லாத வெறுமையையே சந்திக்கின்றனர் என்பதுதான் உண்மை.
எளிமையில், தன்னிலை உணர்தலில், ஆன்மீகத்திலிருந்து பிறக்கிற உறவின் வர்ச்சியில்தான் தம் பணி வாழ்வின் வலு இருக்கிறது என உணரட்டும்.  படைக்கலங்கள் எனப் புனித பவுல் காட்டும் நலன்களை வலுவாய்க் கொள்ட்டும்.
உண்மையை இடைக்கச்சையாகவும்
நீதியை மார்புக் கவசமாகவும்
நற்செய்தி அறிவிப்பின் ஆர்வத்தை மிதியடிகளாகவும்
நம்பிக்கையைக் கேடயமாகவும்
மீட்பைத் தலைச்சீராகவும்
கடவுளின் வார்த்தையைப் போர்வாளாகவும் கொண்டு (காண் : எபே 6:14‡17) வல்லமை பெறுவோம்.
இப்படைக்கவசம் நம்மை பெரியோர்களாகவும் பெரியவர்களானதால் பணியார்களாகவும்” (காண் மத் 20:26‡27) இருந்திட வலிமை தரும்.
மறைமாவட்ட / துறவற சபையினருக்கான கருத்தரங்கில் (ஆகஸ்டு 29, 30/2009) இறையழைத்தல் ஊக்குனர்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்.
என்றும் அன்புடன்
பணி. செ. சகாய ஜான்